எபிரெயர், நான்காம் அதிகாரம் 57-0901E 1. நம்முடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தரைக் குறித்து அதிகமாக அறிந்துகொள்ளவே…அதுவே இங்கே நாம் கூடியிருப்பதற்கான நம்முடைய நோக்கமாயுள்ளது, இப்பொழுது அந்த நோக்கத்திற்காகவே கூடியுள்ளோம், சுகவீனமாயுள்ள தேவனுடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்கவும் கூடியுள்ளோம். இந்தக் காலை வேதவாக்கியங்களிலிருந்து ஒரு—ஒரு அற்புதமான ஆசீர்வாதத்தை பெற்றிருந்தோம். 2 நாம் ஆராதனையில் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு பாகத்தை எடுத்து பிரசங்கிக்க முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறோம்…இப்பொழுது நான் கடந்த சில வாரங்களாக எபிரெயர் புத்தகத்திலிருந்து எடுத்து போதித்துக்கொண்டு வருகிறேன். இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், நான் இங்கே இந்த நேரத்தில் இருக்கும் வரை, நாம் புதன் கிழமை இரவு, பின்னர் ஞாயிறு காலை மற்றும் ஞாயிறு இரவு தொடர்ந்து நடத்துவோம். ஒரு எழுப்புதல் அல்ல, ஆனாலும் இது எழுப்புதலாய், நம்முடைய வழக்கமான இரவு நேர கூட்டமாய் உள்ளது. ஆகையால் இந்த நேரத்தில் இந்தப் பட்டிணங்களைச் சுற்றியும், மற்றும் இந்த இங்குள்ள பெரிய பட்டிணங்களைச் சுற்றிலும் உள்ள நம்முடைய நல்ல நண்பர்களை சந்திக்கும்படியான இந்த நேரத்திற்காக நாம் மிக, மிக சந்தோஷமாயிருக்கிறோம். நாம் ஒன்றை நீக்கம் செய்யவோ அல்லது வேறொன்றை செய்யவோ நேர்ந்தால், அது கர்த்தர் நம்மை வழிநடத்துகிறதாயிருக்கலாம், வெகுசீக்கிரத்தில்…ஒரு கால் நாம் ஒரு சில இரவுகள் உடற்பயிற்ச்சி கூடத்திலோ அல்லது வேறெங்கோ நாம் கூடக் கூடும். எனவே சற்று கழித்து கர்த்தர் அந்த விதமாக வழிநடத்துவதாகத் தென்பட்டால், நாம் நம்முடைய ஜனங்களை ஒன்று சேர்த்து ஒரு இடத்தில் கூட்ட முடியும். ஜனங்கள் வந்து, திரும்பிச் செல்லுகையில், “உள்ளே வர இடமேயில்லாதிருந்தது” என்று கூறுகிறதையும் நாங்கள் கண்டோம். உண்மையாகவே கூடாரமோ மிகவும் சிறியதாக உள்ளது. அது சில ஜனங்கள் அமர்வதற்கான சில இருக்கைகளையேக் கொண்டுள்ளது. நீங்கள் மனப்பூர்வமாய் வெளியிலிருந்து வந்து, உஷ்ணத்தில் உட்கார்ந்து, கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தேவன் உங்களை மிகவும் நிறைவாய் ஆசீர்வதித்து, உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். 3 இப்பொழுது, இன்றிரவு நாம் 4-ம் அதிகாரத்தை துவங்க விரும்புகிறோம்…எத்தனைபேர் இந்தக் காலை இங்கே இருந்தீர்கள்? நாங்கள் உங்களுடைய கரங்களைக் காணட்டும். ஓ, அது அற்புதமாயுள்ளது. இயல்பாகவே அது உங்கள் எல்லோருக்குமே அவ்வாறு உள்ளது. நாம் எபிரெயரின் புத்தகத்தில் 4-ம் அதிகாரத்தின் பேரில் துவங்கிக்கொண்டிருக்கிறோம். ஓ, என்ன ஒரு ஆச்சரியமான புத்தகம்! நீங்கள் அதைக் கேட்டு மகிழ்ந்துகொண்டிருக்கிறீகளா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அது வேத வாக்கியத்தை வேதவாக்கியத்தின் மூலம் ஒப்பிட்டுப் பார்த்தலாய் உள்ளது. 4 பவுல் தன்னுடைய அனுபவத்தைக் குறித்து சாட்சி பகருவதற்கு முன்பு, அது சத்தியம்தானா என்று வார்த்தையைக் கொண்டுக் கண்டறிய அவன் முதலில் அரேபியாவிற்கு செல்ல வேண்டியதாயிருந்தது. நான் அதை விரும்புகிறேன். இந்தக் காலைப் பாடத்தில், கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதையே இக்காலைப் போதனையில் நாம் கண்டறிந்தோம். இஸ்ரவேல் புத்திரை வழி நடத்தின அதே அக்கினி ஸ்தம்பமே, தமஸ்குவிற்கு செல்லும் பாதையில் தன்னை சந்தித்தது என்பதை பவுல் கண்டறிந்தான். இஸ்ரவேல் புத்திரரை வனாந்திரத்திலிருந்து வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தின அதே அக்கினி ஸ்தம்பமே தமஸ்குவிற்கு செல்லும் வழியில் பவுலை சந்தித்தது என்றும், அவர் தாமே தம்மை இயேசு என்று அழைத்தார் என்பதையும் நாம் கண்டறிந்தோம். 5 அதன்பின்னர் இயேசு கிறிஸ்துவின் ஒப்புயர்வற்ற உண்மையான தெய்வீகத் தன்மையை நாம் கண்டறிகிறோம். இங்கு உள்ள இந்த முழு புத்தகமும் இயேசு கிறிஸ்துவின் ஒரு வெளிப்பாடாய் உள்ளது. அவர் வந்தபோது, “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தேவன் தீர்க்கதரிசிகளின் மூலமாய் பிதாக்களிடத்தில் பேசினார்; இந்தக் கடைசி நாட்களில் அவருடைய குமாரன் கிறிஸ்து இயேசுவின் மூலமாக திருவுளம்பற்றினார்” என்பதை நாம் கண்டறிகிறோம். அவர் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் உள்ள இந்தப் புத்தகம் ஒரே நிலையான கர்த்தராகிய இயேசுவின் வெளிப்பாடேயல்லாமல் வேறோன்றுமில்லை. 6 அவரே எரிகிற முட்செடியில் இருந்தவர் என்பதை நாம் கண்டறிகிறோம். அவரே உலகத்தோற்றத்திற்கு முன்னர் தேவனாய் இருந்தவர் என்பதையும் நாம் கண்டறிகிறோம்.அவர் புதிய ஏற்பாட்டில் தேவனாயும் மனிதனாயுமிருந்தார் என்பதையும் நாம் கண்டறிகிறோம். அதன்பின்னர் அவர் புதிய ஏற்பாட்டில் மனிதனாய் தோன்றி பிறகு, அங்கிருந்து புறப்பட்டு பரலோகத்திற்குச் சென்றார். மேலும் அவர், “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், என்வே நான் தேவனிடத்திற்கு திரும்புகிறேன்” என்றார். 7 அதன்பின்னர் அவர் பவுலை சந்தித்தபோது, அவர் ஒரு அக்கினி ஸ்தம்பத்தில் இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தினபோது இருந்த அதே ரூபத்தில் இருந்தார். பவுல் அவரை உற்றுப்பார்த்தபடியால், அப்பொழுது மனமாற்றமடையாமலிருந்தபடியால், அது அவனுடைய எஞ்சியுள்ள நாட்களில் அவனுக்கு உண்டாயிருந்த கண் தொல்லைக்கு காரணமாயிருந்தது. அவன் குருடனாகி, பல நாட்களாய் எதையுமே அவனால் காணமுடியாமற்போயிற்று. எனவே அவன் நேர்த்தெரு என்றழைக்கப்பட்ட தெருவிற்கு கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட வேண்டியதாயிருந்தது. 8 தேவன் ஒரு தரிசனத்தின் மூலம் அங்கே அனனியா என்னும் பெயர்கொண்ட ஒரு தீர்க்கதரிசியினிடத்தில் பேசியிருந்தார், அவன் அங்கு உள்ளே வந்து தன்னுடைய கரங்களை பவுலின் மீது வைக்க, “சகோதரனாகிய சவுலே, உன்னுடைய பார்வையைப் பெற்றுக்கொள்” என்றான். 9 அதன்பின்னர் அதே பரிசுத்த ஆவியானவர், அதேக் கர்த்தராகிய இயேசு ஒரு ஒளியின் ரூபத்தில் பேதுருவினிடத்தில் வந்து அவனைச் சிறைச் சாலையிலிருந்து விடுவித்தார் என்பதை நாம் கண்டறிகிறோம். 10 இந்நாட்களில் அதே கர்த்தராகிய இயேசு இன்னமும் அந்த அக்கினி ஸ்தம்பத்தில் (ஒளியாக) தம்முடைய ஜனங்களை (தம்முடைய சபையை) வழி நடத்திக்கொண்டு, அதேக் காரியத்தை நிகழ்த்திக் கொண்டும், தரிசனங்களை அருளிக் கொண்டுமிருக்கிறார் என்பதை நாம் கண்டறிகிறோம். ஒரு தரிசனத்தின் மூலமே உள்ளே வந்து ஜனங்களின் மீது கரங்களை வைக்கிறேன். கர்த்தராகிய இயேசு கடந்த ஞாயிறு காலை என்னை வீட்டில் சந்தித்து, “ஒரு மனிதன் தன்னுடைய கருமையான தலைமுடியானது நரைத்துப் போயிருக்க, அவன் உள்ளே வந்து கொண்டிருப்பான் என்றும், அவன் ஒரு கிரேக்கனாயிருப்பான் என்றும், அவனுடைய மனைவி நடுத்தர வயதுடையவளாய், பீடத்தண்டையிலே அழுதுகொண்டிருப்பாள்” என்றும் கூறினார். 11 சிலரிடத்தில் அதை கூறியிருந்தபடியால், அது சம்பவித்துக் கொண்டிருந்ததை அறிந்துகொண்டார்கள். அவன் முடமானவனாயும், அவனுடைய தலையில் இருந்த கட்டுப்பாடு நரம்பு செயலற்றுப் போய்விட்டுமிருந்தது. எனவே அவனால் அவனுடைய காலையோ அல்லது அவனுடைய மூட்டுகளைக்கூட கட்டுப்பாடாய் செயல்படுத்த முடியாமற்போயிற்று. மேலும் அவன் குருடாயிருந்தான். அப்பொழுது என்னிடத்தில் சுகவீனத்திற்காக ஜெபிக்க ஒரு பெண்மணி வந்தாள், அதன் பின்னர் சகோதரன் டாம்ஸ் ஜெபிக்க வந்தார். அப்பொழுது நாங்கள் இங்கே அமர்ந்து, அது படிப்படியாக நிறைவேறுவதைக் கவனித்தோம். எனவே இதுவோ இரட்டத்தனையான நிரூபணமாகிறது. அப்பொழுது நான் புறப்பட்டு வியாதியஸ்தருக்காக ஜெபிக்க பின்னால் சென்றேன். அப்பொழுது அவள் சரியாக தரிசனத்தின்படி அங்கு வந்து, என்னுடைய கரத்தைப் பிடித்து அழத்துவங்கி, மருத்துவர். அக்கர்மேன் அவர்கள் இவர்களை இங்கே அனுப்பியிருந்தார் என்று கூறினாள். மருத்துவர்.அக்கர்மேன் என்னுடைய நெருங்கிய நண்பர், கத்தோலிக்கர். அவருடைய பையன் இந்தியானாவில் உள்ள செயின்ட் மெயின்ராட் என்ற இடத்திலுள்ள கத்தோலிக்க மடத்திலே பாதிரியாராயிருக்கிறான். இந்த மனிதன் ஜாஸ்பர் என்ற இடத்திலிருந்து வந்திருந்தான். கர்த்தர் அவனைச் சக்கர நாற்காலியிலிருந்து சுகப்படுத்தியிருந்தார். அவன் எழுந்து நடந்து சென்றான். அவனால் மற்ற எவரையும் போன்று பார்க்க முடிந்தது. அவன் பூரண சுகமடைந்து, இயல்பான நிலையில் கட்டிடத்தைவிட்டு நடந்து சென்றான். எல்லாமே ஒரு தரிசனத்தின் மூலம் நிகழ்ந்ததே! 12 “சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர் நான் உன்மீது கரங்களை வைக்க, நீ பார்வையடையும்படிக்கும், பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பியுள்ளார் என்றான்.” அற்புதம். 13 “ஆகையால் நாம் பெற்றுள்ள இந்த பெரிதான இரட்சிப்பை…இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைகளுக்கும், தேவனுடைய கோபாக்கினைக்கும் நாம் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதையே நாம் கண்டறிகிறோம்.” 14 இப்பொழுது நாம் இன்றிரவு எபிரெயரின் புத்தகம் 4-ம் அதிகாரத்திலிருந்து வாசிக்கத் துவங்கப் போகிறோம். எவரேனும் வாசிப்பதை பின்தொடர்ந்து பார்க்க விரும்பினால், எங்களிடத்தில் இங்கே சில வேதாகமங்கள் உள்ளன. எனவே அவர்கள் யாருக்காவது ஒன்று வேண்டுமானால், ஏன், அப்பொழுது வாயிற்காப்போன்களில் ஒருவர் அதை உங்களிடத்திற்கு கொண்டு வருவார், நீங்கள் வேதம் வேண்டுமென்று உங்களுடைய கரத்தை உயர்த்தினால் போதும், இங்குள்ள சகோதரர்களில் ஒருவர் அதை உங்களுக்கு கொண்டு வருவார்…அங்கே இரண்டு வேதாகமங்கள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். 15 இப்பொழுது நாம் துரிதமாக முடித்துவிட வேண்டும், ஏனென்றால் நமக்கு சற்று கழித்து இராபோஜன ஆராதனை உண்டு. எனவே நாம் இன்றிரவு இதை முடித்துவிட்டு, புதன் இரவு நாம் இதை மீண்டும் துவங்குவோம். இப்பொழுது, இந்த காலையில் நம்முடைய வாசிப்பில் நாம் 15-வது வசனத்திலிருந்து வாசிக்கத் துவங்கினோம் என்று நான் நினைக்கிறேன். 16 நான் வாசிப்பதற்காக மூக்குக் கண்ணாடி அணிவதை சிலர் ஒருகால் அறியாமலிருக்கலாம். எனக்கு வயதாகிக்கொண்டேப் போகிறது. என்னால் இன்னமும் கண்ணாடியில்லாமல் வாசிக்க முடியும், ஆனால் நான் குறிப்பிடத்தக்க அருமையான எழுத்துக்களைக் கொண்ட பிரதியை வாசிக்க வேண்டுமானால் கண்ணாடியில்லாமல் அதை என்னால் வேகமாக வாசிக்க முடியாது. 17 நான் உண்மையாகவே என்னுடைய பார்வை குறைந்து கொண்டிருக்கிறதா என்பதைக் காணும்படிக்கு என்னுடைய கண்களைப் பரிசோதிக்க வேண்டும் என்று சென்றிருந்தேன். என்னுடைய கண்கள் பத்துக்குப்-பத்து என்ற அளவில் சரியாக இருந்தது. அப்பொழுது மருத்துவரோ, “மகனே, நீ நாற்பது வயதினைக் கடந்து விட்டாயே” என்றார். மேலும் என்னை வாசித்துப் பார்க்கும்படிச் செய்ய அவர் ஒரு காரியத்தை வைத்திருந்தார். அப்பொழுது அவர், “அதை வாசிக்கத் துவங்குங்கள்” என்றார். நானும் அதை வாசித்தேன். நான் அதை நெருக்கமாக வாசிக்கும்போது, அதை மெதுவாக, இன்னும் மெதுவாக வாசித்தேன். அது இந்த அளவிற்கு இருந்தபோது நான் படிப்பதை நிறுத்திவிட்டேன். அதன் பின்னர் அவர் அங்கே பத்துக்குப் பத்து என்று வைத்தபோது, என்னால் அதை எங்கிருந்தும் வாசிக்க முடிந்தது. ஆனால் அவர், “அது என்னவென்றால், நீர் நாற்பது வயதைக் கடக்கும்போது, உங்களுடைய கண்விழிகள் தட்டையாகின்றன” என்றார். 18 இப்பொழுது, என்னால் அதை என்னுடைய கண்களில் உற்றுப் பார்த்து, எனக்கு நெருக்கமாக வைத்தே வாசிக்க முடியும், ஆனால் நீங்கள் உற்றுப் பார்க்க வேண்டும். எனவே அவர் எனக்கு ஒரு ஜோடி மூக்குக் கண்ணாடியை செய்து கொடுத்தார். அது எனக்கு அருகில் இருக்கும்போது, என்னால் அதைக் காண முடியும். இப்பொழுது அது என்னிடத்திலிருந்து தூரமாயிருக்கும்போது, அப்பொழுது இந்த மூக்குக் கண்ணாடியினைக்கொண்டு என்னால் காணமுடியாது. எனவே நான் அவைகளை இந்த மூக்குக் கண்ணாடியினைக் கொண்டே வாசிக்கிறேன். 19 இப்பொழுது, இந்தக் காலையில், நாம் எபிரேயரின் புத்தகம் 3-ம் அதிகாரத்தின் கடைசி பாகத்தைப் பார்த்திருந்தோம். ஓ, நாம் என்ன ஐஸ்வரியமான ஆழ்ந்த கருத்துக்களை கண்டறிந்தோம். இப்பொழுது கவனியுங்கள். ஆகையால் நாம் ஒரு பிண்ணணியை புரிந்துகொள்ளும்படியாக, நான் அதை மீண்டும் வாசிக்க விரும்புகிறேன். அதன் பேரில் பேச அல்ல, ஆனால் ஒருவிதமாக சற்று நுணுக்கமான விபரங்களை மேற்பார்வை செய்யவேயாகும். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. அவர்கள் வசனத்தைக் கேட்டார்கள், கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா? 20 இப்பொழுது இதில் இந்தக் காலையில், அவர், “கோபமூட்டுதலின் நாட்களில் நடந்ததுபோல, இப்பொழுது உங்களுடைய இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள்” என்றார். அப்பொழுதுதான் அவர்கள் தேவனை கோபப்படுத்துபடியாய்க் கோபமூட்டினார்கள், ஏனென்றால் அவர் அவர்களுக்கு மோசேயை, அவருடைய தீர்க்கதரிசியை, மோசேயோடிருந்த ஒரு அடையாளத்தையும் கொடுத்திருந்தார். இன்றிரவு இந்த வேதபாட வகுப்பில் அமர்ந்துள்ள எத்தனை பேருக்கு அந்த அடையாளம் என்னவாயிருந்தது என்பது தெரியும்? அக்கினி ஸ்தம்பம், எபிரேயர் 13. 21 இப்பொழுது சபையோர் அந்த அடையாளத்தைக் கண்டார்களா அல்லது இல்லையா என்று நமக்குத் தெரியாது. ஆனால் மோசே அதைக் கண்டான், ஏனென்றால் மோசே அவரை முதலில் ஒரு எரிகிற முட்செடியில் சந்தித்திருந்தான். அவர் அக்கினியாய் இருந்தார். இஸ்ரவேல் புத்திரர் மோசேக்கு கீழ்படிந்து, எகிப்திலிருந்து புறப்பட்டனர். அவர்கள் எகிப்திலிருந்து வெளிவந்தவுடனே, தேவன் அவர்களை ஒரு கண்ணிக்குள்ளாக வழி நடத்தினார் என்பதை நாம் கண்டறிந்தோம். பார்வோனுடைய சேனையோ அவர்களுக்குப் பின்னால் வர, சிவந்த சமுத்திரம் முன்பக்கத்தில் இருக்க, தேவன் அவர்களை சோதனைக்குட்படுத்தினார். அவர்களோ பயந்துபோயினர். அது தேவனைக் கோபமூட்டியது. அப்பொழுது அவர், “நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன?” என்று கேட்டார். மேலும், “புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு” என்றார். நான் அதை விரும்புகிறேன். 22 இப்பொழுது, மோசே அக்கினிஸ்தம்பத்தையும், மேக ஸ்தம்பத்தையும் பின்தொடர்ந்தபோது, அவர்கள் மோசேயைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் தங்களுடைய வழியில் இருந்தனர். இன்றிரவு அது சபையின் அழகான காட்சியாயிருக்கிறது, தேவன் உரைத்ததுபோலவே அதே ஆவியினால் வழிநடத்தப்பட்டு அதே அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் நம்முடைய வழியில் இருக்கிறோம். 23 இப்பொழுது கவனியுங்கள். அதன் பின்னர் அவர்கள் சீன் வனாந்திரத்திற்கு வந்தனர். அங்கே மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்தது. ஏன் தேவன் அவர்களை கசப்பான தண்ணீர்களண்டை வழிநடத்தினார்? அவர் நல்லத் தண்ணீரண்டை அவர்களை வழி நடத்தியிருந்திருக்கலாம் என்பது போலத் தோன்றலாம். ஆனால் அவர்களுடைய விசுவாசத்தை அவர் நிரூபிக்கும்படிக்கு அவர் அவர்களை கசப்பான தண்ணீர்களண்டை வழிநடத்தினார். அவர் அதைச் செய்ய விரும்புகிறார். உபத்திரவங்கள் உங்கள் மீது வரும்படி அனுமதிக்க அவர் விரும்புகிறார், அவர் தம்முடைய அன்பையும், தம்முடைய வல்லமையையும் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறார். இன்றைக்கு தேவனுடைய அற்புத கிரியையில் விசுவாசங்கொள்ளாத ஜனங்கள் மீது உபத்திரவங்கள் வரும்போது, அவர்கள் நம்பிக்கையிழந்து சென்றுவிடும்போது எப்படி அவரால் அதைச் செய்ய முடியும்? ஆனால் நாமோ, “தேவன் அற்புதங்களைச் செய்கிறார்” என்றே விசுவாசிக்கிறோம். அவரால்…முடியாது…தேவன்… 24 இதைக் கவனியுங்கள். அதேவிதமான சூழ்நிலை எழும்பும்போது தேவன் அதேவிதமாக செயல்படவில்லையென்றால், அப்பொழுது தேவன் தம்முடைய ஒரு பகுதி ஜனங்களிடத்தில் குற்றமுள்ளவராயிருக்கிறார். தேவனுடைய இராஜாதிபத்தியம் முதல் நிகழ்ச்சியில் அவர் செய்தது போலவே ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அதேவிதமாக கிரியை செய்யும்படி வேண்டுகிறது. இல்லையென்றால் அவர் முதல் நிகழ்ச்சியில் கிரியை செய்தபோது, அவர் தவறாயிருந்தார். தேவன் முதல் நிகழ்ச்சியில் செய்தது போன்றே அதேவிதமாக செயல்படவில்லையென்றால், அவர் இரண்டாம் நிகழ்ச்சியில் வித்தியாசமாக செயல்படுவாரேயானால், அப்பொழுது அவர் முதல் நிகழ்ச்சியில் செயல்பட்டபோது, தவறாக செயல்பட்டார். தேவன் பழைய ஏற்பாட்டில் வியாதியஸ்தரை சுகப்படுத்தியிருந்தால், அவர் புதிய ஏற்பாட்டிலும், மற்றும் இன்றைக்கும் அதைச் செய்ய வேண்டியவராயிருக்கிறார். இல்லையென்றால் அவர் முன்னர் அங்கே அவர்களை சுகப்படுத்தினபோது அவர் தவறு செய்துவிட்டார். அவர் ஒவ்வொரு முறையும் ஒரே விதமாக செயல்பட வேண்டும். அதே விசுவாசம் அந்த நிபந்தனைகளை சந்திக்கிறபோது அவர் அதைச் செய்வார். தவறு நம்மிடத்தில் உள்ளதேயன்றி தேவனிடத்தில் அல்ல. ஏனென்றால் நாம் அவரை அநேக மகத்தான விசேஷித்த அற்புதங்களின் கிரியையில் காண்கிறோம். நாம் அதை அறிவோம். குற்றம் கண்டுபிடிப்போர், “அது அவ்வண்ணமாய் இல்லை” என்று கூற முடியாது. ஏனென்றால் அது நிரூபிக்கப்படுகிறதை நாம் காண்கிறோம், அது அங்கே உள்ளது. 25 அவர்கள் வழக்கமாக கூறுவதுபோல, “எனக்கு ஒரு அற்புதத்தைக் காண்பியுங்கள்” என்பார்கள். எனவே அது இனிமேல் இல்லையென்று அவர்களால் கூறமுடியாது. விஞ்ஞானம் அது இனிமேல் இல்லையென்று கூறமுடியாது. நம்மால் அதை முற்றிலுமாக விஞ்ஞானப் பூர்வமான உலகத்திற்கு நிரூபிக்க முடியும். இயற்கைக்கு மேம்பட்ட தெய்வீக உருவம் ஒரு அக்கினிஸ்தம்ப ரூபத்தில் நம்மிடத்தில் உள்ளது என்று விஞ்ஞான உலகம் சாட்சி பகர்ந்துள்ளது. இதோ அவருடைய புகைப்படம் இங்கே உள்ளது. இதே ஒன்று வாஷிங்டன் D.C.—யில் இன்றிரவு தொங்கிக்கொண்டிருக்கிறது. அது அதே கிறிஸ்துவாய் உள்ளது. 26 ஆகையால் என்னுடைய ஊழியக்கார சகோதரர்கள் முன்பெல்லாம் வழக்கமாக என்னிடத்தில், “ஓ, சகோதரன் பிரான்ஹாம், அது பிசாசு. அதனோடு நீ நேரத்தை வீணாக செலவழிக்காதே” என்று சொல்லுவார்கள். அதுவோ என்னைத் திகிலடையச் செய்திருந்தது. 27 அது, “அவரே அந்த மாறாத இயேசு, அதே ஒருவர்” என்று தேவன் வந்து அதை வெளிப்படுத்தும் வரையில் நான் அதைப் பிரசங்கிக்க மனதாயிருக்கவில்லை. ஓ, அதன்பின்னர் அதிலிருந்து என்னை அசைக்க முயற்ச்சிக்கிறார்களா? அதிலிருந்து அசைக்கப்படவே முடியாது. ஏனென்றால் அது வேதவாக்கியமாயுள்ளது. அது தேவனுடைய வார்த்தையாய் உள்ளது. அது இழந்துபோகிற ஒரு அனுபவமல்ல. அது தேவனுடைய வார்த்தையினால், தேவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட நித்திய வாக்குத்தத்ததினால் ஆதரிக்கப்படுகின்ற அனுபவமாய் உள்ளது. 28 இப்பொழுது, நாம் இங்கே கவனிப்போம், அதன்பின்னர், அவர் கூறினார். கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்?… நிச்சயமாகவே. அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு பலப்பரீட்சை உண்டான இடத்திற்கு வந்தபோது விடாய்த்துபோயினர். அப்பொழுது அவர்கள் என்ன செய்ய மனதாயிருந்தனர்? அவர்கள் தளர்வுற்று, களைத்துப்போய், “இது ஏன் எனக்கு சம்பவித்தது?” என்று கூறி திரும்பிச் செல்ல விரும்பினர். 29 இந்தக் காலையில் விநோதமான காரியம் என்னவென்றால், என்னால் முடிந்தளவு கடினமாக பிரசங்கித்தப் பிறகு, அநேகர் பீடத்தண்டை வந்து, “இது ஏன் எனக்கு சம்பவிக்கிறது?” என்று கேள்வி கேட்டுள்ளனர். அது எப்படி செல்லுகிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? அது ஜனங்களுடைய தலைக்கு மேலேக் கடந்து செல்கிறது. அது ஜனங்களிடத்தில் அதேவிதமாகவே உள்ளது. 30 இயேசு, “நீங்கள் கண்களிருந்தும் காணமாட்டீர்கள்” என்றார். அவர் அதை சீஷர்களிடத்தில் கூறினார். 31 அவர்கள் அப்பொழுது, “இதோ, இப்பொழுது நீர் வெளிப்படையாய்ப் பேசுகிறீர். இப்பொழுது நாங்கள் விசுவாசிக்கிறோம். எந்த மனிதனும் உமக்கு எந்தக் காரியத்தையும் கூற வேண்டியதில்லை, ஏனென்றால் தேவன் அதை உமக்கு காண்பிக்கிறார்” என்றனர். 32 அப்பொழுது அவர், “நீங்கள் இந்த நேரத்திலாவது, இப்பொழுதாவது விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். பார்த்தீர்களா? 33 நீங்கள் தேவனிடத்தில் எந்தக் காரியத்தைக் குறித்தும் கேள்வி கேட்க வேண்டாம். “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்”. உங்களை நிரூபிக்கவே உங்கள் மீது ஒவ்வொரு சோதனையும் வைக்கப்படுகிறது. வேதம், “அவைகள் பொன்னைப்பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கின்றன” என்று கூறியுள்ளது. ஆகையால் தேவன் சில லேசான இன்னல்களை உங்களுக்கு நேரிட அனுமதிக்கும்போது, அது உங்களுடைய திருத்துதலுக்கானதாயுள்ளது என்பது நினைவிருக்கட்டும். “தேவனிடத்திற்கு வருகிற ஒவ்வொரு புத்திரனும் முதலில் தேவனால் சிட்சிக்கப்பட்டு, சோதிக்கப்பட வேண்டும், பயிற்றுவிக்கப்பட்ட பிள்ளையாய் இருக்க வேண்டும்.” அதற்கு எந்த விதிவிலக்குதல்களுமே கிடையாது. “தேவனிடத்திற்கு வருகிற எந்த புத்திரனுமே.” இந்த இன்னல்கள் ஏற்படுகின்றபோது, அவைகள் கொண்டுவரப்படுகின்றபோது, நீங்கள் எந்த மனப்பான்மையில் அதை எடுத்துக்கொள்ளுவீர்கள் என்று பார்க்கவே அவைகள் கொண்டுவரப்படுகின்றன. புரிகிறதா? அது தேவன் நிரூபிக்கிற ஆதாரமாய் உள்ளது. முழு பூமியுமே நிரூபிக்கிற ஆதாரமாய் உள்ளது, அவர் உங்களை நிரூபிக்க முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறார். 34 இப்பொழுது நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே செல்லுகையில் கவனியுங்கள். நான் அதைக் குறித்த கடைசிப் பாகத்தைக் காண விரும்புகிறேன். பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக் குறித்து ஆணையிட்டார்?… இப்பொழுது இன்றிரவு நாம் அங்கு தான் பார்த்துக்கொண்டு வருகிறோம். கீழ்படியாதவர்களைக் குறித்தல்லவா? ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக் கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம். 35 இப்பொழுது பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். தேவன் ஒரு அக்கினி ஸ்தம்பத்தில் அவர்களிடத்திற்கு வந்திருந்தார்; அவர் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பி, அவனை அபிஷேகித்து, ஜனங்களுக்கு முன்பாக செய்யும்படியான அடையாளங்களை அவனுக்கு கொடுத்திருந்தார். அதன்பின்னர் தீர்க்கதரிசியினால் அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் அவர்கள் வெளியே வழிநடத்தப்பட்டனர். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் அவர்கள் வரும்போது, அவர்கள் முறுமுறுக்கத் துவங்கி, மோசேயோடு அவர்கள் கண்டிருந்த ஒவ்வொரு சிறு தவறையும் கூறி கோபித்துக்கொள்ளத் துவங்கி, அவனுக்கு விரோதமாக அர்த்தமில்லாமல் எதிர்த்துப் பேசினர். எனவே தேவன் மன வருத்தமடைந்தார். ஏனென்றால், தேவன், “அவர்கள் பாவஞ்செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றார். 36 அவர்கள் செவிகொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் பொது அறிவிற்கு செவிகொடுத்து, “அது எப்படி இருக்க முடியும்? இந்தக் காரியங்கள் எப்படியிருக்க முடியும்?” என்று கேட்டனர். அவர் தேவனாயிருப்பாரேயானால், ஒவ்வொரு காரியமும் கூடும். அவரிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக அவர் செய்வார். 37 இப்பொழுது நாம் இங்கே ஒரு பெரிய ஆய்விற்குள்ளாகச் செல்ல போகிறோம், அது “இளைப்பாறுதல்” “ஓய்வு” என்பதன் பேரிலானதாய் உள்ளது. இப்பொழுது, அவர்கள் தங்களுடைய யாத்திரையில் பரதேசிகளாயிருந்தனர். புரிகிறதா? அவர்கள் எகிப்தில் அடிமைத்தனத்தில் நானூறு வருடங்களாக இருந்துவந்தனர். இப்பொழுதே அவருடைய வாக்குத்தத்தத்தின்படி தேவனுடைய அற்புதங்களினால் அவர்கள் வெளியேக் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லும் தங்களுடைய பாதையில் இருந்தனர். இங்கே அவர்களுக்கு மத்தியிலே இயற்கைக்கு மேம்பட்ட ஒளி பிரசன்னமாகி, அவர்களை வழிநடத்தத் துவங்குகிறது, 38 இப்பொழுது, யாரோ ஒருவர், “இப்பொழுது, இங்கே பார், யார் இந்த மோசே? உன்னை எங்கள் மீது ஆளுகை செய்யும்படிச் செய்தது யார்? நீ எங்களில் ஒருவனாயிருக்கிறாயல்லவா? நீ எங்களுடைய எஜமானை இங்கு இருக்கும்படிக்கு உன்னை ஏற்படுத்தினது யார்? எங்களுடைய போதகர் அறிந்துள்ளதைக் காட்டிலும் உனக்கு அதிகமாகத் தெரியும் என்று நீ எண்ணுகிறாயா? ஆசாரியன் அறிந்துள்ளதைக் காட்டிலும் உனக்கு அதிகமாகத் தெரியும் என்று நீ எண்ணிக் கொள்கிறாயா? இந்த நாளுக்குரிய எங்களுடைய பக்தியான மனுஷரைக் காட்டிலும் நீ—நீ புத்திமான் என்று நீ எண்ணுகிறாயா?” என்று கூறுவார். அதற்கு இதனோடு எந்த சம்மந்தமு இல்லாதிருந்தது. அது தேவன் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து, அவர் அந்த செயல்பாட்டில் இருந்தார் என்பதை ரூபகாரப்படுத்திக் கொண்டிருந்தார். எனவே யார் புத்திமானயிருந்தது? யார் புத்திமானாயிருக்கவில்லை என்பது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. அது தேவன் அவர்களுக்கு முன்னால் என்ன வைத்துள்ளார் என்பதைப் பின்பற்றுகிறதைக் குறித்த எண்ணமாய் இருந்தது. 39 ஏன், மோசே, அவன் இஸ்ரவேல் புத்திரரை தேவனுடைய வார்த்தையைக் கொண்டு விடுவிக்க முயற்சித்தபோது, ஒரு கூட்ட ஜனங்களை வெளியே வனாந்திரத்திற்கு அழைத்துக்கொண்டுவர முயற்ச்சித்தபோது, மாம்சபிரகாரமானவற்றைப் பொருத்தமட்டில் ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்துவிட்டான். அவன் தனக்கு இருந்த…ஏன்? அவர்கள் கொண்டிருந்த ஒவ்வொரு காரியத்திற்கும் அவன் சுதந்திரவாளியாய் இருந்தான். அவன் உலகம் முழுவதிலுமிருந்த எல்லா இராணுவத்தைப் பார்க்கிலும் சிறந்ததை உடையவனாயிருந்தான். அவன் அங்கே ஒரு பெரிய இராணுவத் தளபதியாயிருந்தான். அடுத்த கட்ட நடவடிக்கையில், அவன் இராஜாவாக, எகிப்தின் பார்வோனாக வேண்டியவனாயிருந்தான். ஏன்? அவன் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து, “சரி, பிள்ளைகளே, உங்களுடைய வீட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறியிருந்திருக்க முடியும். அதுவே இதற்கு தீர்வாகியிருக்கும், அவனும் அடுத்த பார்வோனாயிருந்திருப்பான். ஆனால் மோசேயோ… 40 ஓ, இதோ அது உள்ளது. மோசே விசுவாசத்தினால் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் கண்டான். கர்த்தருடைய தூதன் அவனிடத்திற்கு வந்த போது, எகிப்தின் ஆசிரியர்களைக் கொண்டு நாற்பது ஆண்டுகளில் அவன் கற்றிருந்ததைக் காட்டிலும் அந்த தூதனின் பிரசன்னத்தில் ஐந்து நிமிடங்களில் தேவனைக் குறித்து அதிகம் அறிந்துகொண்டான். அவர் தேவன் என்பதை அவன் அறிந்துகொண்டான். இயற்கைக்கு மேம்பட்ட சம்பவம் நிகழ்ந்ததை அவன் கண்டான். 41 அப்பொழுது அவர், “மோசே, நான் உன்னோடு இருப்பேன். நான் உனக்கு முன்னே செல்வேன்” என்றார். அவர்களும் புரிந்துகொண்டனர். அவன் செய்து காட்டும்படியான அடையாளங்களை அவர் அளித்தார். 42 இப்பொழுது, அவர்கள் இளைப்பாறும் தேசத்திற்கு செல்லும் படியான தங்களுடைய பாதையில் இருந்தனர். தேவன் அவர்களுக்கு ஒரு இளைப்பாறுதலை அருளியிருந்தார், அவர்கள் இருந்திராத ஒரு இடத்தையே…எகிப்தில் ஆளோட்டிகளை அவர்கள் மீது ஆளுகை செய்து, அவர்கள் வேலைகளை செய்யும்படிக்கு அடித்து துன்புறுத்தினர். 43 அது இன்றைக்கு என்ன ஒரு அழகான காட்சியாய் இருக்கிறது, நாம் சபையை நோக்கிப் பார்க்கும் போது, சபையை அதனுடைய நிலைமையில் நோக்கிப் பார்க்கும் போது, தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உலகத்தை இழிவாகக் கருதுகிறான். “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது. உண்மையான யாத்திரீகன் தன்னுடைய பாதையில் செல்லும்போது, சாதாரணமாகவே உலகத்தின் காரியங்களை வெறுக்கிறான். அவன் மனுஷர் மது அருந்துவதைக் காண வெறுக்கிறான். அவன் மனுஷர் புகைப்பிடிப்பதைக் காண வெறுக்கிறான். அவன் ஸ்திரீகளை வீதியில் குட்டையான அசுத்தமான ஆடைகளோடு காண்பதை வெறுக்கிறான். அவன் சூதாட்டங்களையும், சீட்டு விளையாட்டுகளை காண வெறுக்கிறான். 44 நேற்றைய தினம் சகோதரன் டோனி…இல்லை சகோதரன் உட்ஸ் அவர்களும் நானும் வீதியினூடாக வந்துகொண்டிருந்தபோது, அப்பொழுது அங்கே லூயிவில்லில் ஒரு சிறு பெண்மணி வீதியினூடாக வந்து கொண்டிருந்தாள். அவள் காண்பதற்கு அழகான சிறு பெண்ணாயிருந்தபோதிலும், அவன் உடுத்தியிருந்த ஆடைகள் பயங்கரமாயிருந்தன. அவள் தன்னுடைய இடுப்புக்கு சற்று மேலே ஒரு சிறு நாடாவை தன்னுடைய இடுப்பின் இருபக்கங்களிலும் கட்டி தொங்கவிட்டிருந்தாள், தன்னுடைய முன்பாகத்தில் வட்டமான ஒரு துண்டு துணியைக் கட்டி தொங்கவிட்டிருக்க, பின்பாகத்திலோ ஒரு நூலினால் மட்டுமே கட்டியிருந்தாள். அப்படியே வீதியில் பயங்கரமாய் நடந்து செல்ல, வீதியில் இருந்த ஒவ்வொரு மனிதனும் அவளை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது நான், “அந்தவிதமாக அவளை நோக்கிப் பார்த்த ஒவ்வொரு மனிதனோடும் அவள் விபச்சாரம் செய்ததற்காக தேவனுடைய பார்வையில் அவள் குற்றவாளியாயிருக்கிறாள் என்பதை அவள் உணரவில்லை. எனவே அந்த மனிதர்களோடு விபச்சாரம் செய்ததற்காக நியாத்தீர்ப்பின் நாளிலே அவள் பதில் கூறுவாள்” என்றேன். 45 இயேசு, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ்செய்தாயிற்று” என்றார். அது உண்மை. 46 ஆகையால், நீங்கள் பாருங்கள், சகோதரன் உட் அவர்களோ என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம், அவள் அவ்விதம் நடந்துக்கொள்ள காரணம் என்ன? என்று கேட்டார். 47 அப்பொழுது நான், “அது ஒன்று மனநிலை சரியில்லாமையாயிருக்க வேண்டும் அல்லது பிசாசின் உடைமையாய் இருக்க வேண்டும்” என்றேன். இந்த இரண்டு காரியங்கள் மாத்திரமே அதைச் செய்யும். ஒரு நாகரிகமான, சுத்தமான ஸ்திரீ அந்தவிதமான ஆடைகளை அணிந்துகொள்ளவே மாட்டாள். அவள் பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்தாலொழிய அவள் அணியேவே மாட்டாள். அது முற்றிலும் உண்மையே. 48 இப்பொழுது, பரலோகத்திற்கு செல்லுகிற தன்னுடைய பாதையில் உள்ள ஒரு யாத்திரீகன், அவன் ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் ஜீவிக்கிறான். அவன் அவளை நோக்கிப் பார்ப்பானா என்பதைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதேயில்லை. அவன் தேவனை தன்னுடைய இருதயத்தில் பெற்றிருப்பானேயானால், அப்பொழுது அவன் தன்னுடைய தலையைத் திருப்பிக்கொள்வான். ஏனென்றால் அவன் அந்தக் காரியங்களிலிருந்து கோடிக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ள ஒரு சூழலில் ஜீவித்துக் கொண்டிருக்கிறான். அது உண்மை. நீங்கள் நியாயத்தீர்ப்பிலே அந்தக் காரியத்தைக் குறித்து குற்றமுள்ளவர்களாயிருக்க வேண்டாம். ஆகையால் அவன் தன்னுடைய தலையைத் திருப்பி, “தேவனே, அந்த ஸ்திரீயின் மீது இரக்கமாயிரும்” என்று கூறி தொடர்ந்து செல்கிறான். நாம் நம்முடைய யாத்திரையில் இருக்கிறோம். நாம் கானான் தேசத்திற்கு செல்லும் நம்முடைய வழியில் இருக்கிறோம். நாம் அந்த நித்தியாமான, தேவன் நமக்கு அளித்துள்ள ஆசீர்வாதமான இளைப்பாறுதலுக்கான நம்முடைய வழியில் இருக்கிறோம். நாம் யாத்திரையில் சோதிக்கப்படுகிறோம். நாம் எல்லாவிதமான காரியங்களினாலும் சோதிக்கப்படுகிறோம், ஆனால் அதே சமயத்தில் பாவமில்லாமல் சோதிக்கப்படுகிறோம். 49 இப்பொழுது நாம் 4-ம் அதிகாரத்தில், “பயந்திருக்கக்கடவோம்” என்பதைக் குறித்துப் பார்க்கையில் கவனியுங்கள். ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க,…பயந்திருக்கக்கடவோம்… 50 நீங்கள் அதை நினைவுகூர வேண்டுமென்று நான் விரும்புகிறேன், நாம் கண்டறிந்தாலொழிய, தேவன் அதை நமக்கு வெளிப்படுத்தியிருந்தாலொழிய! நாம் எவ்வளவுதான் சபைக்குச் சென்றாலும் அது ஒரு பொருட்டல்ல, அதாவது அதற்கு இதனோடு எந்த சம்மந்தமும் இல்லை. உலகத்தின் காரியங்கள் எல்லாவற்றையும் வெளியே எடுத்துப் போட வேண்டும் என்று தேவன் வெளிப்பாட்டின் மூலமாக வந்து, தம்மை நமக்கு வெளிப்படுத்த வேண்டும். இப்பொழுது இது கூறப்பட்டிருக்கையில், ‘இன்றைக்கு நீங்கள்…” 51 இப்பொழுது 4-ம் அதிகாரத்தை நாம் துவங்குவோம். ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க,…பயந்திருக்கக் கடவோம். 52 இப்பொழுது நினைவிருக்கட்டும், அவர்கள் இளைப்பாறுதலுக்கு செல்லும் பாதையில் இருந்தபோது, அக்கினி ஸ்தம்பம் அவர்களை வழிநடத்தினது. இப்பொழுது, “இந்த இளைப்பாறுதல் என்றால் என்ன?” என்பதை நாம் கண்டறிய விரும்புகிறோம். ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப் போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம். 53 இப்பொழுது, இங்கே வாக்குத்தத்தம் உள்ளது. இதற்குத்தான் நாம் பயப்பட வேண்டும்: நமக்கு ஒரு வாக்குத்தத்தம் உண்டாயிருக்கவில்லையென்றால், ஆனால் ஒரு வாக்குத்தத்தம் உண்டாயிருக்கிறதே! அப்படியானால், அடுத்தக் காரியம், அதை அடையாமல் பின்வாங்கிப் போகக் கூடாது. 54 இப்பொழுது, கருத்தென்னவெனில், நாம் இளைப்பாறுதலுக்கான நம்முடைய வழியில் இருப்போமேயானால், அப்பொழுது இளைப்பறுதல் என்றால் என்ன? அது எங்கே உள்ளது? அது சபையைச் சேர்ந்துகொள்ளுதலா? அது ஒரு குறிப்பிட்ட வழியில் ஞானஸ்நானம் பண்ணப்படுதலா? அது நகரத்தில் உள்ள மிகப்பெரிய சபையின் ஒரு அங்கத்தினனாக இருப்பதா? மேலான சிறந்த ஆடைகளை உடுத்துக்கொள்வதா? அது கல்வியா? நாம் கூறுவது போல, நாம் வேலை செய்வதைவிட்டுவிட்டு, படுத்துக் கொண்டே நம்முடைய எஞ்சியுள்ள வாழ்நாட்களில் இளைப்பாற உதவும் பணமா? அதுவல்ல அது. 55 வேதம் அதை என்னவென்று கூறுகிறதென்றும், நாம் அதை எப்படி பெற்றுக்கொள்வோம் என்றும் கவனிப்போம். ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம். ஏனெனில், சுவிசேஷம் (அப்பொழுது அந்த நாளில்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல, நமக்கும் அறிவிக்கப்பட்டது, கேட்டவர்கள்… சுவிசேஷம் என்றால் என்ன? நற்செய்தி. அதாவது, “தேவன் ஒரு விடுவிப்பவரை அனுப்பியிருக்கிறார் என்றும், அவர் நம்மை வெளியேக் கொண்டுவந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு நம்மை கொண்டு செல்லப் போகிறார்” என்ற நற்செய்தி எகிப்தில் உள்ள அவர்களிடத்திற்கு வந்தது. 56 இப்பொழுது, “தேவன் ஒரு விடுப்பவரை, பரிசுத்த ஆவியானவரை அனுப்பியிருக்கிறார் என்றும், நாம் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கான பாதையில் இருக்கிறோம்” என்ற நற்செய்தியே நம்க்கு வந்துள்ளது. இப்பொழுது ஜனங்கள் கோட்பாடுகளையும், ஸ்தாபனங்களையும் உண்டாக்கிக்கொண்டனர், ஆனால் தேவனோ இன்னமும் அப்படியே நிலைத்திருக்கிறார், அதாவது நம்முடைய இளைப்பாறுதலோ “பரிசுத்த ஆவியாயுள்ளது.” 57 கவனியுங்கள். …சுவுசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது…அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை… நினைவிருக்கட்டும்: …கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. 58 ஓ, என் சகோதரர்களே, நான் இங்கே ஒரு நிமிடம் நிறுத்தட்டும். வார்த்தை எவ்வளவாய் பிரசங்கிக்கப்பட்டாலும் அது ஒரு பொருட்டல்ல, அது பிரசங்கிக்கப்படுகின்ற விதத்தை நீங்கள் எவ்வளவு நன்கு விரும்பினாலும் அது ஒரு பொருட்டல்ல. ஆனால் நீங்கள் தாமே அதனுடைய பங்காளியானாலொழிய, அது உங்களுக்கு ஒரு சிறு நன்மையும் செய்யாது. …கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால்… 59 அவர்கள் மோசேயின் அற்புதங்களைக் கண்டிருந்தனர். அவர்கள், “அது பார்ப்பதற்கு இனிமையாய் நன்றாகவே உள்ளது” என்றனர். அவர்கள் அதைப் பார்த்துவிட்டு சாதரணமாக நடந்து சென்றனர். மோசே அற்புதங்களை நிகழ்த்துவதை அவர்கள் கண்டிருந்தனர். அவர்கள் அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டிருந்தனர், அல்லது ஒருக்கால் அதைக் குறித்துப் பேசுவதை அவர்கள் கேட்டிருக்கலாம். “ஓ, அது சரிதான்.” 60 ஆனால் அது தனிப்பட்ட விசுவாசமாயில்லாதிருந்தது. ஏனென்றால் அவர்கள் வனாந்திரத்தை சென்றடைந்தவுடன், அவர்கள் (ஒவ்வொருவரும்) முறுமுறுக்கத் தொடங்கினர். அப்பொழுது தேவன், “அவர்கள் சந்தேகப்பட்ட காரணத்தால், அது பாவமாயிற்று” என்றார். எந்தக் காரியத்தையும் சந்தேகப்படாதீர்கள். விசுவாசியுங்கள். சந்தேகப்படாதீர்கள், அது எவ்வளவு கடினமான காரியமாயிருந்தாலும் கவலைப்படாமல் அதை விசுவாசியுங்கள். 61 இப்பொழுது அவர்கள் முறுமுறுக்கத் துவங்கினர், எனவே தேவன் அவர்களை அழித்துப் போட்டார். பின்னும் அவர், “அவர்கள் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை” என்று தம்முடைய கோபத்திலே ஆணையிட்டார். வேதம் அதை இங்கே கூறியுள்ளது. மேலும், “அவர்களுடைய சவங்கள் வனாந்திரத்தில் விழுந்து போயிற்றே” என்று 3-ம் அதிகாரத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். 62 3-ம் அதிகாரம் 17-ம் வசனம் மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்திரத்தில் விழுந்துபோயிற்றே. 63 எகிப்திலிருந்து வெளியே வந்த அவர்கள் எல்லோரிலும் இரண்டு பேர் மாத்திரமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் சென்றனர். பூர்வகாலத்தில் ஜலப்பிரளய அழிவின்போது முழு உலகத்திலிருந்தும் கோடான கோடி மக்களிலிருந்து எட்டுபேர் மாத்திரமே காக்கப்பட்டனர். “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” 64 சில ஜனங்கள், “அப்படியானால், சகோதரன் பிரான்ஹாமே, ஆயிரமாயிரம் பேர் அங்கே பிரசன்னமாவார்கள் என்று வேதம் கூறியுள்ளதைக் குறித்து என்ன?” என்கிறார்கள். காலத்தினூடாக ஒவ்வொரு தலைமுறையிலும் கிறிஸ்தவர்களாயிருந்து எத்தனைபேர் மரித்திருக்கிறார்கள் என்பது நினைவிருக்கட்டும். அவர்கள் எல்லோரும் உயிர்த்தெழுவார்கள். அதுவே சரீரமாக உருவாகிறது. இந்த அமெரிக்காவிலிருந்து வெளிவருபவர்கள், அல்லது, இன்னும் மற்றவர்கள் இன்றைய இந்த உலகத்திலிருந்து வருபவர்கள் இலட்சம் கோடியாய் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். ஒருகால் ஐம்பதுபேர் கூட வெளிவராமலிருக்கலாம். ஆனால் மகத்தான மீட்கப்பட்ட சபையோ பூமியின் தூளிலே அங்கே காத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் தேவனுடைய இரத்தினங்களாய் பூமியிலே இளைப்பாறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய ஆத்துமாக்களோ தேவனுடைய பலிபீடத்தின் கீழே இருக்கின்றன. அவர்கள் தங்களுடைய மாம்ச சரீரத்தில் இருந்த நிலையில் இப்பொழுது இல்லை. அவர்கள் உண்மையாகவே ஒரு சரீரத்தில் இருக்கிறார்கள். ஆனால் அது ஒரு ஆவிக்குரிய சரீரமாய் உள்ளது. அவர்கள் தேவனிடத்தில், “எதுவரைக்கும்?” என்று சத்தமிட்டுக் கூப்பிடுகிறார்கள். அவர்களால் ஒருவரையொருவர் பார்க்க முடியும், ஆனால் அவர்களால் ஒருவருடைய கரத்தை மற்றொருவர் குலுக்கிக் கொள்ள முடியாத ஒரு விதமான சரீரத்தில் உள்ளனர். 65 நீங்கள் இன்றிரவு மகிமையில் உள்ள உங்களுடைய தாயாரை சந்திக்க செல்வீர்களேயானால், உங்களால் அவளுடைய கரத்தைக் குலுக்க முடியாது, ஏனென்றால் அவள் அந்தவிதமான ஒரு கரத்தை உடையவளாயிருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் உணருவதுபோல உங்களால் அதை உணரமுடியாது. ஏனென்றால் இந்த சரீரத்தில் உள்ள ஐந்து புலன்கள் இந்த சரீரத்தை கட்டுப்படுத்துகின்றன. அவளுடைய பிரசன்னமோ ஒரு வித்தியாசமான சூழ்நிலையைக் கொண்டதாய் உணரப்படும். 66 அது ஒரு கணவன் மனைவியைப் போன்று உள்ளது. பரலோகத்தில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. ஏன்? ஏனென்றால் அங்கே ஒரு வித்தியாசமான அன்பு உண்டாயிருக்கும். அங்கே பாலியல் வாஞ்சையே இருக்காது. எல்லாக் காரியங்களும் ஒழிந்து போயிருக்கும். நீங்கள் சுத்திகரிக்கப்பட்டு, சுத்தமாயிருப்பீர்கள். ஆனால் நீங்கள் அந்த நிலையில் ஒருபோதும் ஜீவித்ததில்லை, ஆகையால் நீங்கள் அந்த நிலைமையிலிருப்பதற்காக சிருஷ்டிக்கப்படவில்லை. எனவே நீங்கள் அங்கே காத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு மனிதனாக, ஒரு ஸ்திரீயாக சிருஷ்டிக்கப்பட்ட இடத்திற்கு திரும்பிவர வாஞ்சித்துக்கொண்டிருக்கிறீர்கள். எனவே தேவன் அந்த சரீரத்தை பூமியின் தூளிலிருந்து எழுப்பி, அதை மகிமைப்படுத்துவார். அப்பொழுது நீங்கள் பார்க்க, சுவைக்க, உணர, முகர மற்றும் கேட்கவும், தொடர்புகொள்ளவும் செய்வீர்கள். நாம்…ஒருபோதும் அதற்கு முன் அறிந்திகொள்ளவேமாட்டோம்… நாம் தூதனுடைய ஜீவியத்தைப் போன்ற ஒன்றினைப் பெற்று ஒருபோதும் அனுபவித்து மகிழ முடியாது. நாம் தூதர்களாக சிருஷ்டிக்கப்படவில்லை. தேவன் தூதர்களை சிருஷ்டித்தார். ஆனால் அவர் உங்களையும், என்னையும் புருஷ்ர்களாகவும், ஸ்திரீகளாகவும் சிருஷ்டித்தார். எனவே அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட வருகையில் அந்த நிலைமையில்தான் நாம் என்றென்றைக்குமாய் இருப்போம். 67 இப்பொழுது, எப்படி அவர்கள் அதை அடையாமல் பின்வாங்கிப் போனவர்களாகக் காணப்பட்டனர் என்பதைப் பாருங்கள், ஏனென்றால் அவர்கள் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள். தேவன் அவர்களுக்கு அக்கினி ஸ்தம்பத்தைக் காண்பித்தார். அவர் அடையாளங்களையும், அற்புதங்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களை அவரே வெளியே வழிநடத்தினார். அவர் சோதனைக்குள்ளாக அவர்களைக் கொண்டுவந்து, அவர்களை நிரூபிக்கும்படிக்கும் சோதித்தார். 68 இப்பொழுது, நீங்கள் ஏராளமான சோதனைகளை உடையவர்களாயிருந்திருக்கிறீர்களல்லவா? அவைகளைக் குறித்து குறை சொல்லாதீர்கள். களிகூறுங்கள். தேவன் உங்களோடு இருக்கிறார். அவர் உங்களுடைய விசுவாசத்தை நிரூபிக்கவே சோதித்துக் கொண்டிருக்கிறார். பழைய ஏற்பாட்டில் யோபுவைப் பாருங்கள், அவர், “என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போலப் பூமியில் ஒருவனும் இல்லை” என்றார். 69 அப்பொழுது சாத்தான், “ஓ, நிச்சயமாகவேத்தான், நீர் அவனைச் சுற்றி வேலியடைத்திருக்கிறீர். அவனுக்கு எந்த தொல்லைகளும் இல்லை, எந்த கவலைகளும் இல்லை. அவனுக்கு எந்த நிதிநிலைமையைக் குறித்த பாரங்களுமில்லை, ஒவ்வொரு காரியமும் அருமையாயுள்ளது. அவனுக்கு எந்த சுகவீனமும், எந்த வலியும் கிடையாது. அவனை என்னிடத்தில் விட்டுவிடும். அப்பொழுது நான் அவனை உமது முகத்துக்கு எதிரே உம்மை தூஷிக்கச் செய்வேன்” என்றான். 70 அப்பொழுது அவர், “அவன் உன்னுடைய கையில் இருக்கிறான், ஆனால் அவனுடைய ஜீவனை மாத்திரம் நீ எடுக்காதே” என்றார். 71 ஓ, சாத்தான் யோபினுடைய ஜீவனை எடுப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்தான், ஆனாலும் அவனால் யோபுவை அசைக்க முடியவில்லை. யோபு வார்த்தையின் பேரிலான ஆதரவில் நின்றான் என்பதை அறிந்திருந்தான். அது உண்மை. நரகத்திலிருந்த எல்லாப் பிசாசுகளாலும் அவனை அசைக்க முடியவில்லை, ஏனென்றால் அவன் அந்தப் பலியை செலுத்தியிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் நீதிமானாயிருந்தான். அவர்களோ அவனைக் குற்றப்படுத்தி, “யோபே, நீ பாவஞ் செய்திருக்கிறாய். எனவே தேவன் உன்னை தண்டித்துக் கொண்டிருக்கிறார்” என்றனர். தேவன் அவ்வாறு செய்துகொண்டிருக்கவில்லையென்பதையும்…அவன் தேவனுக்கு முன்பாக பாவம் செய்திருக்கவில்லை என்பதையும் அவன் அறிந்திருந்தான். அவன் நீதிமானாயிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் ஒரு நல்ல மனிதனாயிருந்தான் என்ற காரணத்தினால் அல்ல, ஆனால் தன்னுடைய ஸ்தானத்தில் உள்ள சர்வாங்க தகனபலியை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார் என்ற காரணத்தினாலேயாகும். 72 இன்றிரவு அவன் நீதிமானாயிருந்தான் என்பதை அவனுடைய ஜீவியம் நிரூபித்தது என்பதை நாம் அறிகிறோம். நீங்கள்…உங்களுடைய அயல் வீட்டுக்காரடுக்கு உதவ முயற்ச்சிக்கிற காரணத்தால் நீங்கள் மகிமையிலுள்ள பரலோக வீட்டிற்கு செல்ல முயற்சிப்பதல்ல, அவ்வாறு உதவிசெய்வது நல்லதுதான். நீங்கள் சபையை சேர்ந்துகொள்ளுகிற காரணத்தினால் அல்ல; அதுவும் நல்லது தான். ஆனால் நீங்கள் உங்களுக்காக ஒன்றையுமே செய்யாமல், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நீதியை ஏற்றுக்கொள்ளுகிற காரணத்தினாலேயே நீங்கள் மகிமையில் உள்ள வீட்டிற்கு செல்கிறீர்கள். 73 இப்பொழுது நாம் தொடர்ந்து வாசிப்போம். ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; (2-ம் வசனம்) கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. வசனத்தைக் கேட்டவர்களிடத்தில் விசுவாசம் இல்லாதிருந்தது. 74 இன்றைக்கு சற்று சிந்தித்துப் பாருங்கள், கர்த்தர் எனக்கு அளித்துள்ள இந்த சிறிய தாழ்மையான ஊழியத்தில் அங்கே இன்றிரவு நானூறு இலட்சம் அமெரிக்கர்கள் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் என்னக் கூறுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? “ஏன்? அது மனோவசிய முறையாயிருக்கிறது. அவர் மனோத்தத்துவ ரீதியில் சிந்தையை ஆராய்பவர். அப்படிப்பட்ட காரியமேக் கிடையாது! ஏன், அவர் எங்களுடைய சபையைச் சார்ந்தவரல்ல” என்கிறார்கள். பார்த்தீர்களா? அது…நீங்கள் அதை எவ்வளவுதான் வார்த்தையின் பேரில் எடுத்து வைத்து, அது தேவனுடைய வார்த்தை என்று நிரூபித்தாலும், அது தேவனுடைய வாக்குத்தத்தமாயிருந்தாலும், அது உண்மையென்று விஞ்ஞானம் எவ்வளவுதான் நிரூபித்தாலும் கவலைப்படாமல், இன்னமும் அவர்களால் அதை விசுவாசிக்க முடியவில்லை. அவர்களால் விசுவாசிக்க முடியாது என்று வேதம் உரைத்துள்ளது. 75 “அப்படியானால் அதைக் குறித்து பிரசங்கிப்பதனால் என்ன பயன்?” என்று கேட்கலாம். அந்த நாளிலே அவர்களை ஆக்கினைக்குட்படுத்த தேவன் ஒரு சாட்சியை உடையவராய் இருக்க வேண்டும். வார்த்தை அவர்களுக்கு பிரசங்கிக்கப்பட்டு, அவர்களுக்கு மத்தியிலே நிரூபிக்கப்பட்டது. அவர்களோ அதை இன்னமும் அறியாமல் நடந்து சென்றுவிட்டனர். எனவே நியாயத்தீர்ப்பேயல்லாமல் வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை. நியாயத்தீர்ப்புக்கு முன்பு ஒரு தேசத்திற்கு இரக்கத்தை காண்பித்தாலொழிய தேவனால் ஒரு தேசத்தை நீதியாய் நியாயந்தீர்க்க முடியாது. அவர் தேவனாயிருக்கிறார். எனவே அவரால் அதைச் செய்ய முடியாது. 76 இப்பொழுது நாம் என்ன சொல்லுவோம்? விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பறுதலில் பிரவேசிக்கிறோம்: அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். மேலும் தேவன்…ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். 77 இப்பொழுது, ஜனங்களை அவர்களுடைய மார்க்கத்திற்க்கு எதிராகப் பேசி அவர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. அது என்னுடைய நோக்கமல்ல. வெளியே ஊழியக்களங்களில் இருக்கும்போது, நான் வழக்கமான, மகத்தான சுவிசேஷ அடிப்படை உபதேசங்களையேப் பிரசங்கிக்கிறேன். ஆனால் இங்கே கூடாரத்தில் என்னுடைய பிள்ளைகளுக்கு மத்தியில், நான் எந்த உபதேசத்தைக் குறித்தும், சத்தியத்தைக் குறித்தும் நினைக்கிறேனோ அதைப் பிரசங்கிக்க எனக்கு உரிமை உண்டு என்று நான் உணருகிறேன். புரிகிறதா? அது சரியென்றே நான் கருதுகிறேன். 78 இப்பொழுது, ஏழாம் நாளை ஒய்வுநாளாக ஆசரிக்கும் சபை ஜனங்களில் எனக்கு ஆயிரக்கணக்கான நல்ல நண்பர்கள் எனக்கிருக்கிறார்கள். இன்னும் சில அருமையான நண்பர்கள் எனக்கு உண்டு, அவர்களில் சிலர் ஏழாம் நாள் ஆசரிப்பு சபையினராயிருக்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசனத்தின் சத்தம் என்று, அழைக்கப்படுகிற ஒரு பெரிய இயக்கமாயிருந்தாலும், அவர்கள் எனக்கு எதிராக உறுதியாய் இருக்கிறார்கள். நான் பிரசங்க பீடத்தில் நின்று, “நான் தேவன்…என்னைப் பின்தொடர்ந்த இந்த ஒளி தூதனாயிருக்கிறது. நான் தேவன். நான் தேவன் என்பதை ஜனங்களுக்கு நிரூபிக்கும்படியாகவே மகத்தான காரியங்களைச் செய்ய இந்த உலகத்திற்கு நான் வந்தேன்” என்று வாக்குமூலம் அளிக்கிறேன் என்று அவர்கள் கூறினர். இப்பொழுது அதைத்தான் தீர்க்கதரிசனத்தின் சத்தம் என்ற அந்தக் குழுவினர் என்னைக் குறித்து கலிபோர்னியாவில் கூறினர். அந்தவிதமாக இல்லாத ஏதோ ஒரு காரியத்தையே அவர்கள் கூறினர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 79 ஆனால் முதலாவது ஏழாம் நாள் ஆசரிப்பு சபைக்கு விரோதமாகவோ, அல்லது வேறெந்த ஏழாம் நாள் ஆசரிப்பு சபை அங்கத்தினருக்கும் எதிரான எந்தக் கருத்தையும் பேச முற்படாமல், சுவிசேஷத்தினிமித்தமாக மாத்திரமே பேச முற்படுவோம். நாம் இன்னும் சில நிமிடங்களில் பெந்தேகோஸ்தேயினரையுங்கூட பார்க்கப் போகிறோம். ஆம். உண்மையாகவே. பாப்டிஸ்டு, நாம் அதன் பேரிலும் பார்த்து, தேவன் எந்த ஸ்தாபனத்திற்கும் அநுகூலம் செய்வதில்லை என்பதைக் காண்பிக்கப் போகிறோம். அது உண்மை. அவர் தனிப்பட்ட நபர்களுக்கு மாத்திரமே அநுகூலம் செய்கிறார். அவர் எந்த ஸ்தாபனத்தோடு தொடர்புகொள்ளுகிறதில்லை, அவர் ஒருபோதும் தொடர்புகொண்டதேயில்லை, அதுபோல அவர் ஒருபோதும் அவருடைய வார்த்தையின்படி எந்த ஸ்தாபனத்தோடும் தொடர்பு கொள்ளமாட்டார். ஆனால் அவர் ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் உள்ள தனிப்பட்ட நபரோடு தொடர்புகொள்கிறார். ஆம், அது தனிப்பட்ட நபரோடு தேவன் தொடர்புக்கொள்ளுதலாகும். 80 இப்பொழுது உண்மையாகவே தெளிவாக இதற்கு செவிகொடுங்கள், உங்களுக்கு எப்போதாவது, எந்த நேரத்திலாவது, அதைக் குறித்த கேள்வி எப்போதாவது உண்டாயிருந்திருக்குமேயானால், அது தீர்க்கப்படும். இப்பொழுது கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. 81 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், “மேலும்…” 4வது வசனம். தேவன்…ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். 82 இப்பொழுது கவனியுங்கள், அவர் ஓய்வைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். எத்தனை பேர் “இளைப்பாறுதல்” என்று பொருள்கொண்ட ஓய்வு…அதாவது சாபத் என்ற எபிரெய வார்த்தையை அறிவீர்கள்? அதை ஆங்கிலத்தில் எத்தனை பேர் அறிவீர்கள்? நிச்சயமாக. சாபத் என்ற வார்த்தை, அதாவது ஓய்வு என்பது ஒரு வினோதமான வார்த்தையாக தொனிக்கவில்லையா? அது அவ்வாறு உள்ளது. 83 பரிசுத்தப்படுத்து என்பது ஒரு வினோதமான வார்த்தையாக தொனிக்கவில்லையா? பரிசுத்தப்படுத்து என்பதற்கான ஆங்கில வார்த்தையான Sanctify என்ற வார்த்தையோ ஒரு கிரேக்க வார்த்தையாகும். பரிசுத்தப்படுத்து என்பதன் பொருள் “பரிசுத்தமாக்கப்பட வேண்டும்” என்பதாகும். எபிரேய பாஷையிலோ, “பரிசுத்தமாக்கு” என்று பொருள்படுகிறது. கிரேக்க பாஷையிலே, “பரிசுத்தப்படுத்து” என்று பொருள்படுகிறது. ஆங்கிலத்திலோ, “சுத்தப்படுத்து” என்று பொருள்படுகிறது. 84 சாபத், அதாவது ஓய்வு என்பது, “ஒரு நாளின் இளைப்பாறுதலையே” பொருட்படுத்துகிறது. நீங்கள் இளைப்பாறுதல் என்ற வார்த்தையைக் காணும்போது, அது “ஓய்வு” என்பதையே பொருட்படுத்துகிறது. நீங்கள் உங்களுடைய மூலப் பிரதியில் அதைப் பாருங்கள். நீங்கள் ஒரு கிரேக்க வேதாகமத்தில் அதைப் பார்க்க நேர்ந்தால்…அந்த வார்த்தையைக் கண்டறியலாம்…நீங்கள் ஒரு ஸ்கோபீல்டு வேதாகமத்தை வைத்திருந்தால், உங்களுடைய ஓரக் குறிப்பில் “இளைப்பாறுதல்” என்பதைப் பார்ப்பீர்களேயானால், அது உங்களை திரும்பவும் ஓய்வு என்ற வார்த்தைக்கு கொண்டு செல்கிறதல்லவா என்பதைப் பார்க்கலாம். ஓய்வு என்பது “இளைப்பாறுதல்” என்று பொருள்படுகிறது. சரி. 85 இப்பொழுது கவனியுங்கள். ஆனபடியினாலே, அவருடைய இளைப்பறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க…பயந்திருக்கக்கடவோம். 86 இப்பொழுது அநேக ஜனங்கள் சனிக்கிழமையை ஓய்வு நாளாக பின்பற்றுகிறது போல நாட்களைப் பின்பற்றுகிறார்கள். மற்றவர்களோ ஒரு ஞாயிற்றுக் கிழமையை விக்கிரகமாக, ஒரு ஆராதனை நாளாக ஆக்குகிறார்கள். தேவனுடைய கிருபையைக் கொண்டு, தேவனுடைய வார்த்தையினால் அவர்கள் இருசாரருமே தவறாயிருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்கு நிரூபிக்கும்படியாய் தேவன் இன்றிரவு எனக்கு உதவி செய்வாராக. ஞாயிறு ஆராதிப்பவரும், சனிக்கிழமையை ஓய்வுநாளாக பின்பற்றுபவரும் தவறாயிருக்கிறார்கள். வார்த்தையின்படி அவர்கள் இருவருமே முற்றிலும் தவறாயிருக்கிறார்கள். மொத்தத்தில் நாம் கொண்டுள்ள வார்த்தையைக் கொண்டே செல்ல வேண்டுமேயன்றி, ஏழாம் நாள் ஆசரிப்பு சபையினர் என்னக் கூறுகிறார்கள் என்பதைக் கொண்டு அல்ல, பிராட்டஸ்டென்டுகள் என்னக் கூறுகிறார்கள் என்பதைக் கொண்டு அல்ல, அல்லது கத்தோலிக்கர்கள் கூறுகிறதைக் கொண்டு அல்ல. அது வேதம் என்னக் கூறுகிறது என்பதாய் உள்ளது. 87 இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள். மேலும் தேவன்…ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். இப்பொழுது நாம் இதைப் போன்ற ஏதோ ஒரு காரியத்தைக் கூறப் போகிறோம், இதை—இதை, “தேவனுடைய இளைப்பாறுதல்” என்று அழைக்கப் போகிறோம், ஏழாம் நாளையே. 88 இப்பொழுது கவனியுங்கள். “மேலும் தேவன்…” இப்பொழுது இந்த வேதவாக்கியத்திற்கு செவிகொடுங்கள். மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் ஒரு ஓய்வை உடையவராயிருந்தார், அந்த ஏழாம் நாள் ஆயிரவருடமான, ஆயிரவருட அரசாட்சிக்கு ஒரு மாதிரியாயுள்ளது. மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். தனிப்பட்ட பிரதிப் பெயர், “தம்முடைய கிரியைகளையெல்லாம்” என்று உள்ளது. அவர் ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். அது தேவனாகும். அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும், நியாயப்பிரமாணத்தின் கீழ், அந்த இடத்தில்தானே சொல்லியிருக்கிறார். 89 மாம்சப்பிரகாரமாகக் கூறினால், தேவன் ஓய்ந்திருந்தார், ஏனென்றால் அவர் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் உண்டாக்கி, ஏழாம் நாளிலே அவர் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஓய்ந்திருந்தார். அவர் ஆயிரம் ஆண்டுகள் ஓய்ந்திருந்தார். ஏனென்றால் வேதம், “ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறது” என்று கூறியுள்ளது. வேதம் இரண்டாம் பேதுருவின் நிரூபத்தில் அதைக் கூறுகிறது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சரி. “தேவன் ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். அவர் இதைக் குறித்து ஒரு குறிப்பிட்ட இடத்திலே சொல்லியிருந்தார்.” 90 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்தில்தானே சொல்லியிருக்கிறார். யூதர்கள் எகிப்திலிருந்து வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் தங்களுடைய வழியில் இருந்தபோது, அவர் ஏழாம் நாளை ஓய்வாக அளித்தார். 91 இப்பொழுது கவனியுங்கள். ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருந்தபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள்… இளைப்பாறுதல்! தேவன் அவர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார், அதில் ஓய்வுநாள் என்பது நான்காவது கட்டளையாயிருந்தது. …கீழ்படியாமையினாலே அதில் பிரவேசியாமற்போனபடியினாலும்… 92 இப்பொழுது கவனியுங்கள். அவர் நியாயப்பிரமாணத்தைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார், அவர்கள் எப்படி விசுவாசமில்லாதபடியால் உள்ளே பிரவேசிக்கவில்லை. அவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவில்லை. அதாவது அவர்கள் ஓய்வான ஒரு தேசத்திற்கு சென்று கொண்டிருந்தனர் என்றும், அவர்களுடைய எல்லாத் தொல்லைகளிலிருந்தும், அவர்களுடைய எல்லாக் கவலைகளிலிருந்தும் நித்திய நிரந்தரமான இளைப்பாறுதலை பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதற்கும், அங்கு இனிமேல் ஆளோட்டிகளேயில்லையென்றும், இனிமேல் ஓய்வற்ற இரவுகளே கிடையாது என்பதற்கும் ஒரு நினைவாகவே ஓய்வு நாளைக் கைக்கொண்டனர். அவர்கள் இளைப்பாறுதலான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கான தங்களுடைய வழியில் இருந்தனர். அந்த தேசத்தில் பாலும் தேனும் ஓடினது. அங்கே இரண்டு பேர் தங்களுடைய தோள்களின் மேல் சுமக்கும்படிக்கு திராட்சைக் குலைகள் மிகப்பெரியதாயிருந்தன. ஓ, என்ன ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட இளைப்பாறுதலான தேசம்! ஆனால் அவர்கள் அங்கே நெருங்கிச் சென்றபோது, தங்களுடைய அவிசுவாசத்தினாலே அவர்கள் அதற்குள் பிரவேசிக்கத் தவறிப்போயினர். அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதிலிருந்து வெறுமென நாற்பது மைல்கல் தூரமே இருந்த வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கே செல்ல முடியாமல் வேறுவழியாய்த் திருப்பப்பட்டனர். அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாக அவர்கள் நாற்பது வருடங்களாக அங்கே சென்று கொண்டிருந்தனர். தேவன் அவர்களுக்கு அவர்களுடைய தீர்க்கதரிசியை அளித்து, அந்த தீர்க்கதரிசிக்கு தம்முடைய அடையாளத்தை அளித்து, அவனுக்கு அக்கினி ஸ்தம்பத்தை அளித்து, அடையாளங்களையும், அற்புதங்களையும் காண்பித்து, அவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்கச் செய்தார். அவர்கள் மச்சங்களையும், அப்பங்களையும் புசித்த பிறகும் வெறுப்புடன் நடந்து வனாந்திரத்தில் மடிந்து போயினர். “அவர்களுடைய சவங்கள் வனாந்திரத்தில் விழுந்து அழிந்து போயின.” 93 இயேசு ஊற்றண்டையிலே, அவர் கூறினார். அவர்கள், “எங்கள் பிதாக்கள் நாற்பது வருஷ காலமாய் வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தார்களே” என்று கூறினார்கள். 94 அதற்கு அவர், “வானத்திலே தேவனிடத்திலிருந்து இறங்கி வந்த ஜீவ அப்பம் நானே நானே ஜீவ அப்பம். மோசே அந்த அப்பத்தை உங்களுக்குத் தரவில்லை. என் பிதாவே அந்த அப்பத்தைத் தந்தார். நானே வானத்திலே தேவனிடத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம். ஒரு மனிதன் இதைப் புசித்தால், ஒருபோதும் மரிக்கமாட்டான்” என்றார். அங்குதான் வித்தியாசமிருக்கிறது. 95 இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் கூறினார்கள்… “அவர்கள் அநேக வருடங்களாக வனாந்திரத்தில் இருந்த கன்மலையிலிருந்து வந்த தண்ணீரைக் குடித்தார்கள்” என்றனர். 96 அதற்கு அவர், “நானே அந்தக் கன்மலை” என்றார். அவருடைய பரிசுத்த நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! “நானே அந்தக் கன்மலை.” அவர் எப்படி அந்தக் கன்மலையாயிருக்க முடியும்? அந்தக் கன்மலை ஒரு ஞானக் கன்மலையாயிருந்தது. அது இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தது. மோசே தன்னுடைய கரத்தில் ஒரு கோலை வைத்திருந்தான், அது ஒரு தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கோலாயிருந்தது. தேவன் கன்மலையை அடிக்கும்படி அவனிடத்தில் கூறினார். அவன் கன்மலையை அடித்தான். அவன் அதை அடித்தபோது, கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வந்தது. கிறிஸ்து அந்தக் கன்மலையாயிருந்தார், பாவத்திற்கான தேவனுடைய தண்டனையின் நியாயத்தீர்ப்பு அவர்மேல் அடிக்கப்பட்டது. “தேவனோ நம்மெல்லோருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்,” அந்த அக்கிரமம் அவருடைய இருதயத்தை வெடிக்கச் செய்தது. அவருடைய இருதயத்திலிருந்து அழிந்துகொண்டிருக்கிற, மரித்துக்கொண்டிருக்கிற ஜனங்களுக்கு நீர்க்கால்களைப் போன்று பரிசுத்த ஆவியானது ஊற்றப்பட்டது. “வனாந்திரத்தில் இருந்த அந்தக் கன்மலை நானே”. “ஏன்?” அவர்கள், “நீர் அதைத்தான் குறிப்பிட்டு கூறுகிறரா…” என்று கேட்டார்கள். 97 அதற்கு அவர், “நீங்கள் கூறின அந்த மோசே, அவன் என்னுடைய நாளைக் காண வாஞ்சித்தான். அவன் அதில் ஒரு பாகத்தைக் கண்டான்” என்றார். 98 அவர்களோ, “இப்பொழுது நீர் மோசேயைவிட பெரியவராயிருக்கிறீர் என்று எங்களிடத்தில் பொருட்படுத்திக் கூறுகிறீரா? அந்த மோசேயை நீர் பார்த்திருக்கிறீரா? மோசே மரித்து எண்ணூறு வருடங்கள் ஆகிவிட்டனவே” என்றனர். மேலும், “இப்பொழுது, உமக்கு பிசாசு பிடித்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம்,” வேறு வார்த்தைகளில் கூறினால், “பைத்தியம். நீர் பைத்தியக்காரனாய் இருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம்” என்றனர். 99 அதற்கு அவரோ, “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன். எரிகிற முட்செடியில் இருக்கிறவராக இருந்த அந்த மகத்தானவர் நான் தான். எரிகிற முட்செடியில் அக்கினியாயிருந்தவர் நான்தான். அவர்களுக்கு முன்பாகச் சென்ற அந்த தூதன் நான்தான்” என்றார். மேலும் அவர், “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், நான் தேவனண்டைக்குத் திரும்பிச் செல்கிறேன்.” என்றார். அவர் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்து, மாம்சமாகி நமக்கு மத்தியிலே வாசம்பண்ணினார்; பின்னர் அதே அக்கினி ஸ்தம்பத்தண்டைக்குத் திரும்பிச் சென்றார். இதோ அவர் இன்றிரவு இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகும், “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய்,” அதேக் காரியங்களைச் செய்துகொண்டு, தம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளைகளை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். 100 அநேகர் வந்துகொண்டிருக்கின்றனர்…அவிசுவாசத்தின் காரணமாக. இப்பொழுது, தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஒரு நாளில் ஓய்ந்தது போல, “அவர் பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்” என்று அவன் கூறினான். அவர்கள் அதற்கு செவிகொடுப்பார்களேயானால், அவர்கள் வந்து ஓய்வுநாளைக் கடைபிடித்து, மாதப் பிறப்பு போன்றவைகளை மேற்கொள்வார்கள் என்று இதன் பேரிலா அவர், “வேறொரு நாளைக் குறித்திருக்கிறார்”? அங்குதான் உங்களை திரும்பக்கொண்டு செல்ல ஏழாம் நாள் ஆசரிப்புக்கார சகோதரர்கள் முயற்ச்சிக்கிறார்கள். 101 இப்பொழுது நாம் வாசிப்போம். கவனியுங்கள். ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்படியாமையினாலே அதில் பிரவேசியாமற்போனபடியினாலும், 102 இப்பொழுது, 7-வது வசனம். ஓ, என்னே! வேதவாக்கியமோ கணித ரீதியாக ஊக்கமளிக்கப்பட்டுள்ளது என்று நான் கூறுகிறேன். வேதவாக்கியம் ஒவ்வொரு வழியிலும் ஊக்கமளிக்கப்பட்டுள்ளது என்றே நான் கூறுகிறேன். வேதாகம கணிதமோ பரிபூரணமாயிருக்கின்றன. 103 இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகள், அது செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பதிமூன்று என்ற எண் இருப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதில் பதிமூன்று குடியேற்ற நாடுகள் நிறுவப்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்களா? அது முதலாவது அதனுடைய கொடியில் பதிமூன்று நட்சத்திரங்களைக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா? அமெரிக்க ஐக்கிய நாடுகள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பதிமூன்று என்ற எண் இருப்பதை நீங்கள் அறிவீர்களா? அது வேதாகமத்தில் வெளிப்படுத்தின விசேஷம் 13-ம் அதிகாரத்தில் காணப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நிச்சயமாகவே அவ்வாறுதான் செய்கிறது. அந்த சிறிய மிருகம், ஆட்டுக்குட்டி தண்ணீரிலிருந்து வருகிறதேயன்றி, திரளான ஜனக் கூட்டத்திலிருந்து அல்ல…தண்ணீரிலிருந்து அல்ல, ஆனால் யாருமே இல்லாத ஒரு தேசத்திலிருந்து வருகிறது. அது இரண்டு சிறு கொம்புகளை உடையதாயிருந்தது. அரசியல் மற்றும் மதசம்மந்தமான வல்லமைகள். அது ஒரு ஆட்டுக்குட்டியாயிருந்தது; மத சுதந்திரம். சற்று கழித்து அந்த இரண்டு வல்லமைகளும் ஒன்றுசேர்ந்து, அது வலுசர்ப்பத்தைப் போலப் பேசினது, ரோமாபுரி அதற்கு முன்பு நடபித்த எல்லா அதிகாரத்தையும் இது நடப்பித்தது. அதுவே நம்முடைய தேசத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சபைகளின் கூட்டமைப்பும், கத்தோலிக்கமும் ஒன்று சேரும்போது கவனித்துப் பாருங்கள், என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள். 104 அக்கினி ஸ்தம்பத்தை பின்பற்றுகிற ஜனங்களுக்கு ஒரு கடினமான நேரம் உண்டாயிருக்கும், ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக ஆயத்தமாயிருப்பார்கள், அது உண்மை, மேலே செல்ல ஆயத்தமாயிருப்பார்கள். வேதம், “ஆட்டுக்குட்டியானவர் அவர்களை ஜெயிப்பார், அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்” என்று உரைத்துள்ளது. நாம் இதன் பேரில் துரிதமாக பார்க்கும்படி, இப்பொழுது அந்த தீர்க்கதரிசனத்திற்குள் சென்று பார்க்கும்படி சற்று காத்திருங்கள். 105 7-ம் அதிகாரத்தை கூர்ந்து கவனியுங்கள்…நான் 4-ம் அதிகாரம் 7-ம் வசனத்தையே பொருட்படுத்திக் கூறுகிறேன். ஏழு என்பது பரிபூரணத்தின் எண்ணாயுள்ளது. மூன்று என்பது ஜீவனின் எண்ணாயுள்ளது. ஏழு என்பது பரிபூரணத்தின் எண்ணாயுள்ளது, எனவே இது ஓய்வினை நிறைவு செய்கிறது. “மீண்டும்,” நினைவிருக்கட்டும், அவன், “தேவன்” என்று இந்தவிதமாய் பேசினான். அதன்பின்னர் அவன் “நியாயப் பிரமாணத்தைக்” குறித்து இந்தவிதமாய்ப் பேசினான். அதன்பின்னர், மீண்டும், “அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்,” மூன்றாம் நாள், மூன்றாம் முறை. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப் பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். கவனியுங்கள், யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், (ஒரு ஓய்வுநாள்), பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. இயேசு கிறிஸ்துவோடு யுகங்கள் மாறுகின்றன; நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்கு, கிரியைகளிலிருந்து கிருபைக்கு, நீங்கள் செய்கிற ஏதோ ஒரு காரியத்திலிருந்து தேவன் என்ன செய்துள்ளார் என்பதற்கு, உங்களுடைய சொந்த தகுதிகளின் பேரில் இல்லாமல், அவருடைய தகுதிகளின் பேரில் என்பதாய் உள்ளது. அது மாறிவிட்டது. 106 மோசே வனாந்திரத்திலிருந்து வெளியே வந்தபோது, நியாயப்பிரமாணத்தோடு வந்து, அவன், “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக. களவு செய்யாதிருப்பாயாக. கொலை செய்யாதிருப்பாயாக. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக” என்றான். இயேசு வனாந்திரத்திலிருந்து வந்தபோது…மோசே வந்த போது, பிசாசு அவனை சோதித்தான். பிசாசு அவனை சோதித்தவுடனே, அவன் அதை உற்றுக் கவனித்தான். மோசே ஒரு பெலவீன பாகத்தை உடையவனாயிருந்தான். அது என்னவாயிருந்தது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? கோபம். அவர்கள் பொன்னினால் செய்த கன்றுக் குட்டியை ஆராதிப்பதை மோசே கண்டவுடனே, அவன் கற்பலகைகளை வீசி எறிந்து, அவைகளை உடைத்துப் போட்டான், எனவே அந்த ஆசாரியத்துவம் தகர்க்கப்படும் என்பதையே அது உங்களுக்கு காண்பிக்கிறது. தேவன் அவனுக்கு மீண்டும் கற்பலகைகளைக் கொடுத்தார். 107 ஆனால் இயேசு வனாந்திரத்திலிருந்து வந்தபோது, நாற்பது நாள் உபவாசத்திலிருந்து வந்தபோது, அவர் பசியாயிருந்தார், அது மாத்திரமே அவருக்கிருந்த பெலவீனமான பாகமாயிருந்தது. அப்பொழுது பிசாசு அவரிடத்தில் வந்து, “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல்லுகளை அப்பங்களாக்கும். இங்கே ஒரு அற்புதத்தைச் செய்யும். நீர் அதைச் செய்வதை நான் காணட்டும், அப்பொழுது நான் உம்மை விசுவாசிப்பேன்” என்றான். 108 அதற்கு இயேசு, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார். அப்பொழுது அவன் அங்கு மோசேயை சந்திக்கவில்லை என்பதை அறிந்து கொண்டான், ஏனென்றால் அவன் வார்த்தையினிடத்திற்கு சென்றிருந்தான். 109 அப்பொழுது பிசாசு தேவாலாயத்து உப்பரிகையின் மேல் அவரை கொண்டுபோய் நிறுத்தி, “நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்” என்றான். அவன் மேலாகப் பூசினானேயல்லாமல், மேற்கோள்காட்டவில்லை. ஆனால் வேதவாக்கியத்தை மேலாகப் பூசினான். அப்பொழுது பிசாசு, “தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுப் போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறதே” என்றான். 110 இயேசு நேரடியாக வார்த்தைக்குச் சென்று, அவனைக் கடிந்துகொண்டார். 111 மறுபடியும் பிசாசு அவரை உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய், அவருக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளையும், ஜெர்மனியையும், சுவிட்சர்லாந்தையும், உலகத்தின் எல்லா தேசங்களையும் அவருக்கு காண்பித்து, “அவர்கள் எல்லாம் என்னுடையவர்கள், நான் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறேனோ, நான் அவர்களைக் கொண்டு அதைச் செய்கிறேன்” என்றான். நமக்கு யுத்தங்களும், தொல்லைகளும் உண்டாயிருப்பதில் வியப்பொன்றுமில்லை. மேலும், “நான் அவர்களைக் கொண்டு செய்கிறேன்…” என்றான். ஸ்தீரிகள் கேவலமாக உடை உடுத்தியிருப்பதில் வியப்பொன்றுமில்லையே…அவ்வாறு செய்வதன் மூலம், சட்டத்தினாலே வெற்றியடைகிறேன். அவர்கள் எல்லோரும் பிசாசினால் ஆளப்படுகின்றனர். அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது. சாத்தான், “அவர்கள் என்னுடையவர்கள். நான் என்னவெல்லாம் விரும்புகிறேனோ அதை அவர்களைக் கொண்டு செய்கிறேன்” என்றான். மேலும் அவன், “நீர் என்னைப் பணிந்துகொண்டால், நான் உம்மை என்னைப் போலவே இராஜாவாக்குவேன்” என்றான். 112 அப்பொழுது இயேசு, “அப்பாலே போ சாத்தானே; ‘உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக’ என்று எழுதியிருக்கிறதே” என்றார். ஏன்? அவருடைய இராஜ்யம் வரும்போது, அவைகள் இந்த மகத்தான ஆயிரவருட அரசாட்சியில் அவருக்கு உரிமையாகிவிடும் என்பதை இயேசு அறிந்திருந்தார். “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமிலேயும் செய்யப்படுவதாக.” அங்கே குட்டையான கால்சட்டைகளை அணிவதே ஒருபோதும் இருக்காது. அங்கே மது அருந்துதலே ஒருபோதும் இருக்காது. அங்கே இச்சையான காரியமே ஒருபோதும் இருக்காது. அங்கே விபச்சாரமே இனி ஒருபோதும் இருக்காது. அங்கே மரணமே ஒருபோதும் இருக்காது. அங்கே துயரமே ஒருபோதும் இருக்காது. அப்பொழுது ஒவ்வொரு தேசமும் அவருக்கு சொந்தமாகிறது. அவைகள் அவருடையவைகளாயிருக்கின்றன. அது உண்மை. அவைகள் அவருடையவைகளாயிருக்கின்றன. அவர் உரிமையாளராவார். ஆனால் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்குமே சாத்தான் அவைகளை உடையவனாயிருப்பான். 113 ‘“உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்’ என்று வெகு காலத்திற்குப் பின்பு…சொல்லியிருக்கிறபடி…பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.” யோசுவா அவர்களை இளைப்பறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. 114 என்னுடைய ஏழாம் நாள் ஆசரிப்பு சபை சகோதரரே அதை கவனித்துப் பாருங்கள். பவுல் இங்கே கூறினான். பவுல் கலாத்தியர் 1:8-ல் கூறினான், நீங்கள் வேதவாக்கியங்களைக் குறித்துக் கொண்டிருந்தால், கலாத்தியர் 1:8-ஐ குறித்துக் கொள்ளுங்கள். அதில், “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்ககடவன்” என்று கூறப்பட்டுள்ளது. பவுல், “யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால்…” என்றான். 115 அவர் மலையிலிருந்து இறங்கி வந்தபோது, கவனியுங்கள். அப்பொழுது அவர் இறங்கி வந்தபோது அவர் பிசாசை ஜெயங்கொண்டிருந்தார். அவர் அபிஷேகிக்கப்பட்டு, அவருடைய ஊழியத்திற்காக ஆயத்தமாயிருந்தார். அவர், ‘“கொலை செய்யாதிருப்பாயாக’ என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் ஏற்கெனவே அவனை கொலை செய்துவிட்டதற்கு சமமானதாயுள்ளது. பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், இந்த நாளில் ஓய்வுநாளை ஆசரிப்பவர்களே, ‘“விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, அத்தகைய செயலில் ஈடுபடுவது குற்றமாயிருந்தது’ என்று நியாயப் பிரமாணத்தின் கீழிருந்த பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ்செய்தாயிற்று” என்றார். வித்தியாசம்! அந்த நான்காவது கட்டளைப் பற்றி எதுவுமே கூறாமல் விட்டுவிட்டார். ஆனால் அவர் அவர்களுக்கு இளைப்பாறுதலை அளித்தாரா? 116 அவன் என்னக் கூறினான் என்பதை நாம் பார்ப்போமாக. “தாவீது, ‘வெகுகாலத்திற்கு பின்பு, ஒரு பரிபூரண இளைப்பாறுதல் உண்டாகும்’ என்று கூறினார். ‘தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.’ தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, இந்தவிதமாக அதை வனாந்திரத்தில் யூதர்களுக்கு கொடுத்தார். அவிசுவாசத்தின் காரணமாக…அவர்கள்…பிரவேசிக்கவில்லை, ஏனென்றால் கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. வெகு காலத்திற்குப் பின்பு, என்று தாவீதின் சங்கீதத்தில் சொல்லியிருக்கிறபடி பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். தாவீது மரித்து நூற்றுக் கணக்கான ஆண்டுகள் கழித்து தேவகுமாரன் எழும்புவார், அது இயேசுவாகும். “நீங்கள் இன்று என்னுடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.” தேவன் உங்களுடைய இருதயத்திலே பேசப்போகிறார். 117 இப்பொழுது நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிற ஒன்பதாவது வசனத்தை கவனியுங்கள். 8-ம் வசனம், “யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.” 118 ஒரு ஓய்வுநாள் ஆசரிக்க வேண்டுமென்று இருந்திருந்திருந்தால், ஞாயிற்றுக் கிழமையை ஆசரிக்க வேண்டியதாயிருந்திருந்தால், அப்பொழுது அவர் அதைக் குறித்துக் கூறியிருந்திருப்பார். அவர், “இப்பொழுது இனிமேல் ஓய்வுநாள் ஆசரிப்பு கிடையாது, இனிமேல் ஏழாம் நாளை ஆசரிப்பது கிடையாது, எனவே நீங்கள் ஞாயிற்றுக் கிழமையை ஆசரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறவேண்டுமென்றிருந்திருந்தால், அப்பொழுது அவர் அதைக் கூறியிருந்திருப்பார். பவுலும் அவர் கூறினார் என்று கூறியிருப்பான். அப்பொழுது அவர், “நீங்கள் எல்லோரும் ஞாயிற்றுகிழமை ஆராதியுங்கள். அது இளைப்பாறுதலாயிருக்கும்” என்று கூறியிருந்திருப்பார். நல்லது, அவர்கள் ஓய்வுநாளை தொடர்ந்து ஆசரிக்க வேண்டும் என்று விரும்பியிருந்திருந்தால், அவர், “தொடர்ந்து ஓய்வுநாளை ஆசரிப்பதில் தரித்திருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் ஞாயிற்றுகிழமையை எட்டாம் நாளை, ஆசரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறியிருந்திருப்பார். இல்லையே. அவர் அதை ஒருபோதும் கூறவேயில்லை. 119 அவன், “யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே” என்றான். 120 இப்பொழுது 9-வது வசனம். கவனிக்க ஆயத்தமாயிருங்கள். ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு, ஓய்வுநாளை ஆசரிக்கிற தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது. ஏனெனில், அவருடைய (கிறிஸ்துவினுடைய) இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். 121 அது புரிகிறதா? இப்பொழுது இதை ஆதரிக்க சில வேதவாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். சரி. தேவன் ஆறு நாட்களில் உலகத்தை சிருஷ்டித்தபோது, அவர் ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார், ஒருபோதும் வேலைசெய்யவில்லை. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. அவர் உலகத்தை உருவாக்கி, அதில் சிருஷ்டியை வைத்து, பின் இளைப்பாறச் சென்றார். அதன்பின்னர் அவர் மீண்டும் உலகத்தை ஒருபோதும் உருவாக்கவில்லை. அவர் கிரியைகளை முடித்து, இளைப்பாறச் சென்றார். இப்பொழுது…அப்பொழுது, அந்த ஆயிரவருடங்களுக்குப் பிறகு, அதாவது பாவம் உள்ளே வந்தது; அப்பொழுது கிறிஸ்து பிரிதிநிதித்துவப்படுத்தப்பட்டார், ஆட்டுக்குட்டி சுட்டிக்காட்டப்பட்டது. இப்பொழுது, ஏழாம் நாள் ஓய்வு என்ற இதுவோ ஒரு மாதிரியாக யூதருக்கு அளிக்கப்பட்டிருந்தது. …தாவீது சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அது வருகிற மற்றொரு இளைப்பாறுதலாயிருக்கிறது. 122 இப்பொழுது அந்த இளைப்பாறுதல் என்னவாயிருக்கிறது? என்னோடு கூட மத்தேயு 11-ம் அதிகாரத்திற்கு, பரிசுத்த மத்தேயு 11-ம் அதிகாரத்தின் கடைசி பாகத்திற்குத் திருப்புங்கள். அப்பொழுதுதான் இயேசு தன்னுடைய மலைப் பிரசங்கத்தை முடித்தார். அவர் என்னக் கூறினார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். 123 அவர், “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ்செய்தாயிற்று. தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்” என்றார். இந்த எல்லாக் காரியங்களையும் கூறினபோதிலும், அவர் அந்த நான்காம் கட்டளையான அந்த ஓய்வுநாளைக் குறித்து ஒருபோதும் ஒன்றுமே கூறவில்லை. 124 இப்பொழுது அவர் பிரசங்கத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். ஓய்வு என்பது தேவனுடைய மகத்தான வாக்குத்தத்தமாயுள்ளது. அது ஒரு இளைப்பாறுதலாய் உள்ளது. இப்பொழுது, இப்பொழுது இங்கே அவர் மலைப் பிரசங்கத்தை முடிப்பதை கவனியுங்கள். அவர் பரிசுத்த மத்தேயு 11-ம் அதிகாரம் 27-வது வசனத்தில் இங்கே அவர் கூறுகிறார். அவர் அங்கே 5-ம் அதிகாரத்தில் மலைப்பிரசங்கத்தை போதித்துக்கொண்டிருந்தார். சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறோருவனும் குமாரனை அறியான்… பாருங்கள், ஒருவர் இல்லாமல் மற்றொருவரை உங்களால் அறிந்துகொள்ள முடியாது, ஏனென்றால் அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாயிருந்தார். …குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்… 125 ஜனங்கள் அதைப் புரிந்துகொள்ள முடிந்தால், விவாதிக்கமாட்டார்கள் என்பது போலத் தோன்றுகிறது. நிச்சயமாக. தேவன் மூன்று பேராயிருக்கவில்லை. அவர் மூன்று தேவர்களாய் இருந்தால், அப்பொழுது நாம் அஞ்ஞானிகளாயிருக்கிறோம். அப்படியானால் எந்த ஒன்று தேவனாயிருக்கிறது? அவை மூன்றும் ஒரே தேவனாகும், அது ஒரே தேவனின் மூன்று உத்தியோகங்களாய் இருக்கின்றன. அவர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில், வனாந்திரத்தில் அந்த அக்கினி ஸ்தம்பத்தில் பிதாவாய் இருந்தார். அவர் குமாரத்துவ உத்தியோகத்தை உபயோகப்படுத்தினபோது, அவர் குமாரனாயிருந்தார். “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நான் போவேன், நான் மீண்டும் திரும்பி வந்து உங்களோடும், உங்களுக்குள்ளும் உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்.” புரிகிறதா? அவர் பிதாத்துவம், குமாரத்துவம், பரிசுத்த ஆவியிலும் கூட இருக்கிறார். அது ஒரே தேவன் மூன்று வித்தியாசமான உத்தியோகங்களில் கிரியை செய்துகொண்டிருத்தலாயுள்ளது. பிதாத்துவம், குமாரத்துவம், பரிசுத்த ஆவி. ஒரு போதும்… I யோவான் 5:7, “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்று உரைத்துள்ளது. 126 தோமா அவரை நோக்கி, “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்” என்றான். 127 அதற்கு அவர், “இவ்வளவுகாலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன், பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?” என்றார். 128 இப்பொழுது ஒருத்துவக்காரர் அதை எடுத்துக்கொண்டு, ஒருத்துவ குழுவின் ஜனங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஒரே உத்தியோகம், ஒரே ஸ்தானம், அதாவது உங்களுடைய விரலைப்போல ஒன்று என்று கூற முயற்சிக்கிறார்கள். அது தவறாகும். தேவனால் முடியாதென்றால்…இயேசு தம்முடைய சொந்த பிதாவாய் இருந்திருக்க முடியாது. அவர் அவ்வாறு இருந்திருந்தால், அப்பொழுது அவர்…ஒரு…அவர் எப்படி தம்முடைய சொந்த பிதாவாய் இருந்திருக்க முடியும்? 129 தேவன் ஒரு மனிதனாய் இருந்தால், பரிசுத்த ஆவியிலிருந்து வேறு பிரிக்கப்பட்டிருந்தால், அவர் இரண்டு பிதாக்களை உடையவராயிருக்கிறாரே. ஏனென்றால் வேதம், “பரிசுத்த ஆவி மரியாளின் மீது நிழலிட, அவள் கர்ப்பவதியானாள்” என்று உரைத்துள்ளது. வேதம், மத்தேயு 1:18-ல் “அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது” என்று உரைத்துள்ளது. அப்படியானால் அவருடைய பிதா யார், பரிசுத்த ஆவியா அல்லது தேவனா? இரண்டும் ஒரே ஆவியே, அப்படியில்லையென்றால் அவர் இரண்டு ஆவிகளின் மூலம் முறைதவறிப் பிறந்தவராயிருப்பாரே. அது ஒரு கத்தோலிக்க கொள்கையாகும், அது ஒருபோதும் ஒரு வேத போதனையாயிருந்ததில்லை. லூத்தரன் சபையிலுள்ள ஏராளமான கோட்பாடுகள் கத்தோலிக்க கோட்பாடுகளிலிருந்து மார்ட்டின் லூதர் அவைகளைக் கொண்டுவந்ததாகும். வெஸ்லியும் அதனைப் பின்பற்றினார். அது இன்னமும் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் அது தவறானதாகும். அது சத்தியமல்ல. அது ஒருபோதும் சத்தியமாயிருந்ததில்லை, அது ஒருபோதும் ஒரு வேதாகம உபதேசமாயிருந்ததில்லை. மூன்று தேவர்களை போதிக்கும்படியான ஒரு கட்டளை வேதாகமத்தில் ஒருபோதும் இருந்ததேயில்லை. ஒரே தேவன் மாத்திரமே உண்டு. இயேசு, “இஸ்ரவேலே கேள், நானே உன் தேவனாகிய கர்த்தர்” என்றார். ஒரே தேவன், மூன்று தேவர்களல்ல. 130 ஆப்பிரிக்காவில் அவர்கள் பிதாவிற்காக ஒருமுறையும், குமாரனுக்காக ஒரு முறையும், பரிசுத்த ஆவிக்காக ஒரு முறையும் ஞானஸ்நானங்கொடுக்கிறார்கள். அப்படியானால் ஒரு பரிதாபமான யூதன் கூட அங்கு வந்து, “அவர்களில் உங்களுடைய தேவன் எது? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியில் எந்த ஒருவர்?” என்று கேட்பார். அவர்கள் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள் என்று வேதம் உரைத்துள்ளது. 131 தேவன் வசித்த ஒரு வீடே இயேசுவாயிருந்தது. வேதம், I தீமோத்தேயு 3:16-ல், “வாக்குவாதமின்றி” (அதாவது “தர்க்கம்”) “அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணாப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.” என்று உரைத்துள்ளது. அவர் தேவனாயிருந்தார். வேதமோ, “அவருடைய நாமம் இம்மானுவேல் என்று அழைக்கப்படும். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்” என்று உரைத்துள்ளது. வேதம், “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது” என்று உரைத்துள்ளது. 132 நாம் அதை மற்றொரு இரவு பார்த்திருந்தோம்; தேவன் ஆதியில் ஆவியாய் இருந்தார். அதன்பின்னர் தேவனிடத்திலிருந்து லோகாஸ் புறப்பட்டு சென்றது, அதாவது ஆவிக்குரிய சரீரம், முன்மாதிரியான தேவ குமாரன் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதனின் ரூபமாயிருந்தது. அவர் இயேசு கிறிஸ்துவுக்குள் வருவதற்கு முன்னர், அவர் ஒரு மாம்ச சரீரத்தில் பூமியில் தோன்றினார். இப்பொழுது சகோதரனே, அதை ஒரு முறை எதிர்காது அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நான் அதை உங்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பேன். 133 மோசே அவரைக் கண்டான். அவன், “கர்த்தாவே, உம்முடைய ரூபத்தை நான் காணட்டும்” என்றான். தேவன் அவனை கன்மலையில் மறைத்து வைத்தார். அவர் கடந்துசென்றபோது, “அது ஒரு மனிதனின் பின்பாகம் போன்றிருந்தது” என்றான். அதுவே அந்த ஆவிக்குரிய சரீரமாயிருந்தது. அது அவ்வாறேயிருந்தது. அதன் பின்னர் அந்த ஆவிக்குரிய சரீரம் மாம்சமாக வேண்டியதாயிருந்தது. வேறே நபர் அல்ல, ஆனால் அதே நபர் மரணத்தின் கொடுக்கை எடுத்துப்போட மாம்சமாக வேண்டியதாயிருந்தது. ஒரு தேனீ எவரையாவது கொட்டும்போது, அது அந்தக் கொடுக்கை அங்கே விட்டுவிடுகிறது. சாத்தானால் பாவத்தினிமித்தமாக மாம்ச சரீரத்தில் ஒரு கொடுக்கை பதிக்க முடிந்தது, ஆனால் சகோதரனே, சாத்தான் அந்தக் கொடுக்கை இம்மானுவேலினுடைய சரீரத்தில் கொட்டிப் பதித்தபோது, அவன் தன்னுடைய கொடுக்கை இழந்துபோனான். ஆம் ஐயா. அவனால் இப்பொழுது ரீங்காரமிட முடியும், ஆனால் அவனால் இனிமேல் கொட்டிப் பதிக்க கொடுக்கேயில்லை. 134 அவர்கள் பவுலினுடைய தலையைத் துண்டிக்கச் சென்றபோது, “மரணமே! உன் கூர் எங்கே? நீ விரும்புமளவிற்கு உன்னால் முடிந்தளவு ரீங்காரமிடலாம். பாதாளமே! உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று பவுல் கூறினான். அங்குதான் நீங்கள் கவனிக்க வேண்டும். அதைத் தேவன் தாமே செய்ய வேண்டியதாயிருந்தது. அவர் வந்து மாம்சத்திலே வெளிப்பட்டார். அவர் திரும்பவும் ஆவிக்குள்ளாக சென்றுவிட்டார். 135 நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் அதை எங்களிடத்தில் ஒருபோதும் கூறவேயில்லை, அதே சமயத்தில் அவர் கிறிஸ்துவுக்குள் வருவதற்கு முன்னர் தேவன் மாம்சமானார் என்றீரே” எனலாம். ஆபிரகாம் தன்னுடைய கூடாரத்தின் கீழ் ஒரு நாள் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, அங்கே தேவனும் இரண்டு தூதர்களும் மாம்ச சரீரத்தில் நடந்து அவனிடத்திற்கு வந்தனர். அப்பொழுது அவர்களுடைய ஆடைகளின் மேல் தூசி படிந்திருக்க, களைத்துப் போனவர்களாய், அங்கே அமர்ந்தனர். அப்பொழுது ஆபிரகாம் புறப்பட்டுப்போய், ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து அடித்து சமைத்தான். மேலும் எலும்புடன் கூடிய ஆட்டிறைச்சி கண்டங்களை சமைத்தான். பின்னர் சாராளிடத்திற்குப் போய் மெல்லிய மாவு எடுத்து அதைப் புடைத்து சில அப்பங்களைச் சுடச் சொன்னான். அதன்பின்னர் பசுவின் வெண்ணையையும், தயிரையும் கொண்டுவந்து, அதை அங்கே உட்கார்ந்திருந்தவர்களுக்கு முன்பாக வைக்க, தேவன் அதைப் புசித்தார். 136 அல்லேலூயா! அந்தக் காரணத்தினால்தான், “என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே.” 137 அது தேவனுக்கு ஒரு பெரிய காரியம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? எல்லா சாம்பல் உப்பையும், சுண்ணாம்பையும், உலகில் உள்ள ஒவ்வொன்றையும் சிருஷ்டித்த தேவன் ஆபிரகாமை சந்திக்க இறங்கி வந்தார். அப்பொழுது அவர், “நீ உலகத்தின் சுதந்தரவாளியாய் இருப்பதை காண்கிறபடியால், நான் செய்யப் போவதை உனக்கு மறைப்பேன் என்று நீ எண்ணுகிறாயோ?” என்று கேட்டார். ஆமென். “நான் அதை உனக்கு மறைக்கமாட்டேன்.” தேவன் அப்படியே ஒரு… 138 நாம் பதினாறு மூலக் கூறுகளினால் உருவாக்கப்பட்டிருக்கிறோம். அவர் கொஞ்சம் சாம்பல் உப்பு, கொஞ்சம் சுண்ணாம்பு, கொஞ்சம் பெட்ரோலியம், இயலுல ஒளியினை எடுத்து “வ்வூயு!” என்று ஊதி, “காபிரியேலே, அதற்குள்ளே போ” என்றார். அது ஒரு சரீரமாயிற்று! 139 “வ்வூயு!” என்று ஊதி, “எட்டி, அதற்குள் போ” என்றார். அவர் அந்த சரீரத்திற்குள் சென்றார். பரலோகத்தின் இரண்டு தூதர்கள்! 140 தேவன் மீண்டும் கைப்பிடியளவு அதே மூலக்கூறுகளை எடுத்து, “வ்வூயு” என்று ஊதி, அவர்தாமே அதற்குள் சென்றார். அவர் இறங்கி வந்தபோது, பசியாயிருந்தார். ஸ்தோத்திரமுண்டாவதாக! இறைச்சியை புசிக்காத ஏழாம் நாள் ஆசாரிப்புகார சகோதரரே அதைக் குறித்து என்ன? சற்று கழித்து நாம் அதற்குள்ளாக செல்லப் போகிறோம். சர்வ வல்லமையுள்ள தேவன், யேகோவா, எரிகிற முட்செடியில் இருந்த அதே ஒருவருடைய பெயர் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவில்லையா என்று கண்டறியப்போகிறோம். அல்லேலுயா! அதன்பின்னர் அவர் பூமியின் மேல் நின்று, “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன், எரிகிற முட்செடியில் இருந்த அதோ ஒருவர்” என்றார். அது உண்மை. ஏலோஹிம், அது அதே ஒருவராயிருக்கவில்லையா என்று பார்த்தீர்களா? எரிகிற முட்செடியில் இருந்த ஒருவர் அவரே. 141 அவர் இங்கே ஆபிரகாமின் முன்னிலையில் ஒரு மாம்ச சரீரத்தில் இருந்து, கன்றினைப் புசித்து, பசுவின் பாலைக் குடித்து, வெண்ணையோடு கூடிய அப்பங்களைச் சாப்பிட்டார். தேவனுடைய பரிசுத்தா நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! அங்கே நடந்து சென்று, “நான் செய்யப்போவதை மறைக்க மாட்டேன்…” என்றார். அவர் தம்முடைய முதுகினைத் திருப்பியிருந்தார். அப்பொழுது அவர், “ஆபிரகாமே, நான் உன்னைச் சந்திக்கப் போகிறேன், நீ அந்தப் பிள்ளையைப் பிறப்பிக்கப் போகிறாய். உனக்கு இப்பொழுது நூறுவயதாகிறது, சாராளுக்கு தொண்ணூறு வயதாகிறது” என்றார். அப்பொழுது சாராளோ கூடாரத்திற்குள்ளே சென்று நகைத்தாள். அப்பொழுது அவர், “சாராள் ஏன் நகைத்தாள்?” என்றார். கூடாரம் அவருக்குப் பின்னே இருந்தது. கூடாரம் அவர்களுக்கு நடுவே இருந்தது. 142 ஆபிரகாம், “சாராள் நீ நகைத்தாயா?” என்று கேட்டான். 143 அதற்கு அவளோ, “இல்லை, நான் ஒருபோதும் நகைக்கவில்லை” என்றாள். 144 தேவனோ, “ஆம், நீ நகைத்தாய்” என்றார். அது எந்தவிதமான மனோவசியமாயிருக்கிறது? அது எந்தவிதமாக மனோத்தத்துவ ரீதியில் சிந்தையை ஆராய்தலாயிருந்தது? அவர் இன்றைக்கும் அதையேச் செய்கிறார். அவர் யோகோவா-யீரே, யேகோவா-ரப்பா, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் ஒருபோதும் தவறிப் போகிறதில்லை. 145 அவரை நோக்கிப் பாருங்கள். அதோ அவர் நிற்கிறார். அவர் நடந்து சென்று ஆபிரகாமிடத்தில் பேசினார், பின்னர் அவனுடைய பார்வையிலிருந்து மறைந்து போனார். அந்த மகத்தான கோத்திரப் பிதா ஆபிரகாம், “தான் தேவனோடு, ஏலோஹீமோடு, அதே தேவனோடு முகமுகமாய்ப் பேசினதாகக் கூறினான். இது புரிகிறதா? சகோதரனே, மூன்று நபர் அல்ல. ஒரே நபரின் மூன்று உத்தியோகங்கள்! 146 ஆதியிலே இருந்த அவரே, அவர் அந்த மகத்தான ஆவியாய் இருந்தார், அந்த ஊற்றில் எல்லாமே உண்மையாயும், எல்லாமே அன்பாயும், எல்லாமே சமாதானமாயுமிருந்து. இந்த ஊற்றில் இருந்த ஒவ்வொன்றும் சுத்தமானதாயிருந்தது. அது ஒரு சரீரமாய், ஒரு ஆவிக்குரிய சரீரமாய் உருவாகத் துவங்கினது, அந்தவிதமான சரீரத்தையே நாம் மரித்தால் பெறப் போகிறோம். ஒரு மகிமையின் சரீரம் அல்ல, தூதர்களின் சரீரம் போன்று காணப்படுகின்ற ஒன்றாய், அந்த ரூபத்தில் உருவாகியுள்ள ஒன்று. 147 ஒவ்வொரு முறையும் நான் ஒரு மரத்தைக் காணும்போது, “அழிவுள்ள மரம் உள்ளபோது, அழிவில்லாத மரம் எங்கோ உள்ளது” என்றே நான் நினைக்கிறேன். அந்த மரம் ஏதோ ஒன்றிலிருந்து உண்டாக்கப்பட்டது. ஒரு ஞானம் அதை உண்டாக்கிற்று. இந்த பூமி முழுவதுமே பரலோகத்தைப் பிரதிபலிக்கிறதாயுள்ளது. வேதம் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளது. அழிந்துபோக வேண்டிய ஒரு மரம் இங்கு இருக்குமானால், அழிந்துபோகாத ஒன்று மகிமையில் உள்ளது. 148 நான் ஒரு மனிதனைக் காண்பேனேயானால், நான் ஒரு அழகான வாலிபத் தம்பதியினரை, ஒரு மனிதனும் அவனுடைய மனைவியும் இனிய இருதயங்களாய் ஒன்று சேர்ந்து வீதியில் நடந்து வருவதைக் காணும்போது, அது எதைப் பிரதிபலிக்கிறது? கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! ஒருபோதும் அழிந்துபோகாத சரீரம் ஒன்று பரலோகத்தில் உள்ளது. “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு, அந்த ஆவிக்குரிய சரீரம் பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். 149 அப்பொழுதே நீங்கள் திரித்துவத்தை புரிந்துகொள்ளுவீர்கள்; அந்த மகத்தான ஆவியானவர், குமாரன், இயேசுவுக்குள் வாசம் செய்தார்; இயேசு சபைக்குள் வாசம் செய்கிறார். “நான் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.” தேவனுக்கிருந்த எல்லாவற்றையும், அவர் இயேசுவுக்குள் ஊற்றினார்; இயேசுவுக்கிருந்த எல்லாவற்றையும், அவர் சபைக்குள் ஊற்றினார். அங்குதான் நீங்கள் இருக்கிறீர்கள். “நான் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறீர்கள்.” ஒரு…ஒரு சரீரம் தான் உண்டு. 150 அதுதான் சபையோடுள்ள காரியமாய் உள்ளது. அவர்கள் பழைய அற்பமான, பெண்மைதன்மைக்கொண்ட, ஒரு விதமான பழமையான பெண்மை தன்மைக்கொண்ட உபதேசத்தினால் போதிக்கப்பட்டு, இரவு நேர சூப் விருந்துகளுக்கும், சீட்டு விளையாட்டிற்கும் ஓடித்திரிகிறார்கள். நாம் ஒரு கூட்ட குழப்பவாதிகளையேப் பெற்றுள்ளோம் என்பதில் வியபொன்றுமில்லை. நமக்கு சிறுவர் நிகழ்ச்சிகளோ, சூப் விருந்துகளோ தேவையில்லை. நம்க்கு தேவை என்னவென்றால் பழைய கரடுமுரடான சுவிசேஷமும், விசுவாச புருஷர்களாய் பட்டயம் தொங்கிக்கொண்டிருக்க சவாலிடுகின்றவர்களுமேயாகும். இன்றைக்கு நமக்கு தேவை என்னவென்றால் ஏதோ ஒரு அற்பமான வேத சாஸ்திரம் அல்ல, ஏதோ ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட வெற்றிகரமான தத்துவம் அல்ல. நமக்குத் தேவையோ வெளிச்சத்தில் பிரசங்கிக்கப்படுகின்ற கரடுமுரடான சுவிசேஷமும், பரிசுத்த ஆவியின் வல்லமையும், கிரியையுமேயாகும். 151 இப்பொழுது இங்கே கவனியுங்கள். …வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. ஆகையால் தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். 152 இப்பொழுது நாம் எங்கே வாசிக்கப் போகிறோம்? மத்தேயு, இருபது…11-ம் அதிகாரம், 27-ம் வசனம். சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறோருவனும் பிதாவை அறியான். 153 பாருங்கள், அது நீங்கள் எவ்வளவு கற்றுக் கொள்கிறீர்கள் என்பது அல்ல, பேராயர் உங்களைக் குறித்து எவ்வளவு அறிந்துகொள்ள விரும்புகிறார் என்பதல்ல, அது தேவன் உங்களைக் குறித்து எவ்வளவு அறிந்து கொள்ள விரும்புகிறார் என்பதாகும். உங்களால் இந்த வெளிப்பாட்டை புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், பேராயரிடத்தில் கேட்க வேண்டாம், தேவனிடத்தில் கேளுங்கள். உங்களுடைய மேய்ப்பனிடத்தில் கேட்க வேண்டாம். தேவனிடத்தில் கேளுங்கள். “குமாரன் அவரை வெளிப்படுத்துகிறார்,” அவர், தனிப்பட்ட பிரதிபெயர். 154 கவனியுங்கள். இது உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும். இதோ உள்ளது அந்தக் கட்டளை. பவுல், “அவர் மற்றொரு நாளை குறித்து வைத்திருந்தால், அவர் அதைக் குறித்து கூறியிருந்திருப்பாரே” என்றார். ஆனால் அவர் என்ன கூறினார் என்பதோ இங்கே உள்ளது. வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். 155 பவுல் என்னக் கூறினான் என்பதைக் கவனியுங்கள். யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப் பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். “இனி வருகிறதாயிருக்கிறது…” இப்பொழுது 9-ம் வசனத்தைக் கவனியுங்கள். ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு ஓய்வுநாள், இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன்…புருஷனோ அல்லது ஸ்திரீயோ… “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். …தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். 156 உங்களுக்கு இருபது வயதாயிருக்கலாம். உங்களுக்கு முப்பது வயதாயிருக்கலாம். உங்களுக்கு ஐம்பது வயதாயிருக்கலாம். ஆனால் தேவனுடைய சத்தம் உங்களுடைய இருதயத்தை தட்டுகிறதை நீங்கள் கேட்கும்போது, உங்கள் இருதயத்தை அதற்கு கடினப்படுத்தாதிருங்கள். அப்பொழுது பிரவேசிக்க… “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” 157 “சகோதரன் பிரான்ஹாம், என்ன சம்பவிக்கிறது?” என்று கேட்கலாம். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறீர்கள். கிறிஸ்து உங்களுக்குள்ளே வருகிறார். அது சரிதானே? 158 என்னோடு கூட ஏசாயா 28-ம் அதிகாரத்திற்குத் திருப்புங்கள், நாம் அதை வாசிப்போம். ஏசாயா 28-ம் அதிகாரத்தில், தீர்க்கதரிசி அதைக் குறித்து என்னக் கூறினார் என்று பார்ப்போம். மத்தேயு…28-ம் அதிகாரம் 8-வது வசனத்திலிருந்து துவங்குவோம். கடைசி நாட்களைக் குறித்து முன்னறிவிக்கப்பட்டது இங்கு உள்ளது. நாம் இன்னும் ஒரு நிமிடத்தில் முடித்துவிட வேண்டும். போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. 159 நான் ஒரு நிமிடம் நிறுத்தட்டும், அன்றொரு இரவு எர்னி கூறினதுபோல, அவர் யாரோ ஒருவரிடத்தில் பேசிக் கொண்டிருந்தார். எர்னி ஃபாண்ட்லர், இந்த சகோதரன் சுவிட்சர்லாந்திலிருந்து இங்கு வந்து, “நான் நிறுத்திவிட்டேன், இது பதியட்டும்” என்று அவர் கூறினார். 160 நான் இது உள்ளே பதியும்படிக்குக் கூற விரும்புகிறேன். …சுத்தமான இடமில்லை. போஜனபீடங்களெல்லாம் வாந்தியினால்…நிறைந்திருக்கிறது… நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்கு சம்பவித்தது. எனவே ஜனங்கள் அவ்வாறே திரும்பிச் செல்கின்றனர். 161 மெத்தோடிஸ்டுகளே உங்களோடுள்ள காரியம் என்ன? முன்பு உங்களிடத்தில் வெளிச்சம் இருந்தது. என்ன சம்பவித்தது? தேவன் அதை உங்களுடைய கரத்திலிருந்து எடுத்து, அவர் அதை நசரேயங்களுக்குக் கொடுத்தார். நசரேயன்களாகிய உங்களுக்கு சம்பவித்தது என்ன? ஒருகாலத்தில் உங்களிடத்தில் வெளிச்சம் இருந்தது. தேவன் அதை உங்களுடைய கரங்களிலிருந்து எடுத்து, அதை பெந்தேகோஸ்தேக்களுக்குக் கொடுத்தார். சரி. சர்ச் ஆப் காட் என்ற ஸ்தாபனத்தினராகிய நீங்களும், மற்றும் பரிசுத்தம் என்ற ஸ்தாபன ஜனங்களுமாகிய நீங்களும் வெளிச்சத்தை புறக்கணித்த காரணத்தால், நீங்கள் உங்களை ஸ்தாபனமாக்கிக்கொண்டு, “நாங்கள் இதற்கு மேல் எதையும் விசுவாசிக்கமாட்டோம்” என்றீர்கள். எனவே தேவன் அங்கிருந்து நகர்ந்து, அவரை பின்பற்றும் ஜனங்களை அவர் உடையவராயிருந்தார் என்பதை உங்களுக்கு காண்பித்தார். 162 பெந்தேகோஸ்தேக்களாகிய உங்களுக்கு என்ன சம்பவித்தது? நீங்களும் வெளிச்சத்தை உடையவர்களாயிருந்தீர்கள். தேவன் அதை உங்களிடத்திலிருந்து எடுத்துவிட்டார். அக்கினி ஸ்தம்பம் நகர்ந்து செல்கிறது. ஒவ்வொரு முறையும் அக்கினி ஸ்தம்பம் நகர்ந்து சென்றபோது, சபையும் அதனோடு நகர்ந்து சென்றது. கத்தோலிக்க சபையிலிருந்து வெளியே வந்த லூத்தர், அவருடைய சொந்த சபை ஸ்தாபனமானபோது, அக்கினி ஸ்தம்பம் நகர்ந்து சென்றது, அதனோடு வெஸ்லி சென்றார். வெஸ்லி, தன்னுடைய சொந்த ஸ்தாபனத்தை ஏற்படுத்திக்கொண்டபோது, அந்த அக்கினி ஸ்தம்பம் நகர்ந்து சென்றது, நசரேயன்கள் அதனோடு சென்றனர். நசரேயன்கள் ஸ்தாபனமுண்டாக்கிக்கொண்டபோது, சர்ச் ஆப் காட் என்ற குழுவினர் அதனோடு சென்றனர். அவர்கள் ஒரு ஸ்தாபனமாயிருக்கவில்லை என்று அவர்கள் கூறினர், ஆனால் அவர்கள் ஸ்தாபனமாயிருந்தனர். 163 அதன்பின்னர் என்ன சம்பவித்தது? சம்பவித்த அடுத்த காரியமோ, பெந்தேகோஸ்தேக்கள் அக்கினியைக் கண்டனர், பின்னர் அவர்களும் விலகிப் போயினர். நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்நிய பாஷைப் பேசுவதை ஒரு உபதேசமாகிக்கொண்டு, அதை ஸ்தாபனமாக்கி, “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் முன்பு, ஒவ்வொருவரும் அந்நிய பாஷையில் பேசவேண்டும்” என்றனர். அப்பொழுது தேவன் அங்கிருந்து நகர்ந்து, நீங்கள் இருக்கிற இடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக்கும்படி உங்களை விட்டுவிட்டார். 164 ஒருத்துவக்காரராகிய உங்களுக்கு என்ன சம்பவித்தது? நீங்கள் இயேசுவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் கண்டறிந்தீர்கள். அப்பொழுது நீங்கள் அதிலிருந்து ஒரு உபதேசத்தை உண்டாக்கிக் கொண்டு, மற்றவர்களிடத்திலிருந்து உங்களைப் பிரித்துக் கொண்டீர்கள். எனவே தேவன் அங்கிருந்து விலகி நகர்ந்து, நீங்கள் அங்கேயே உட்கார்ந்திருக்கும்படிக்கு விட்டுவிட்டார். சரி. 165 பண்டைய பொதுவான ஆலோசனை சபையான அசம்பளீஸ் சபையாரான உங்களுக்கு என்ன சம்பவித்தது? நீங்கள் உங்களுக்குள்ளே ஒரு ஸ்தாபனமுண்டாக்கிக்கொண்டீர்கள், எனவே தேவன் அங்கிருந்து நகர்ந்து, நீங்கள் இருக்கிற இடத்திலேயே இருக்கும்படிக்கு விட்டுவிட்டார். இப்பொழுது நீங்கள் மற்றவர்களைப் போல குளிர்ந்துபோன, சம்பிரதாயமான கூட்டத்தாரைப் போன்றிருக்கிறீர்களேயல்லாமல் வேறோன்றுமல்ல. அக்கினி ஸ்தம்பம் நகர்ந்து செல்கிறது. அல்லேலூயா! …போஜனபீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது… 166 கர்த்தருடைய இராபோஜனத்தைப் பாருங்கள். ஏன்?…அவர்கள் பழைய ரொட்டித்துண்டை அப்பமாக எடுத்துக் கொண்ட இடத்தில் நான் இருந்தேன். அப்பம் புள்ளிப்பில்லா அப்பமாக செய்யப்பட வேண்டும். அவர்களோ அதை பாவிகளுக்கும், புகைபிடிப்பவர்களுக்கும், விபச்சாரிகளுக்கும், வேசிகளுக்கும், அவர்களுடைய சபை புத்தகத்தில் பெயர் உள்ள எல்லோருக்கும் கொடுக்கிறார்கள். 167 பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் அதை “தனிப்பட்ட சாராருக்காக ஒதுக்கப்பட்ட” இராப்போஜனம் என்றுகூட அழைக்கிறீர்கள். இப்பொழுது பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் சற்று வீறாப்பு கொள்கிறீர்கள், தேவன் உங்களுடைய பெருமையை எடுத்துப் போடுவார். அது முற்றிலும் உண்மையே. நீங்கள் அதற்காக மனக்குறைவால் கதறகூட முடியாது. “தனிப்பட்ட சாராருக்காக ஒதுக்கப்பட்ட” இராபோஜனம் என்று நீங்கள் உங்களையே பிரித்துக்கொண்டு, நீங்கள் பரிசுத்தமாயிருப்பது போன்று தென்படுகிறீர்கள். நினைவிருக்கட்டும், இதுவும் ஒரு பாப்டிஸ்டு கூடாரம் தான். அதைதான் நீங்கள் கண்டு, நீங்கள் உங்களை ஸ்தாபனமாக்குகிறீர்கள். நீங்கள், “ஓ, நாங்கள் ஸ்தாபனமல்ல” என்று கூறுகிறீர்கள். ஆம், நீங்கள் ஸ்தாபனமாயிருக்கிறீர்கள். நிச்சயமாகவே, நீங்கள் ஸ்தாபனமாயிருக்கிறீர்கள். நீங்களோ, “நாங்கள் ஒரு ஐக்கியம்” என்கிறீர்கள். ஆம், இங்கே வாசலுக்குள் வருகிற எவரும் நீங்கள் விசுவாசிக்கிற விதமாக போதித்தால், அப்பொழுது நீங்கள் அவரை வெளியேற்றிவிடமாட்டீர்கள், ஆனால் அப்படியில்லையென்றால் நீங்கள் அவரை உங்களுடைய சகோதரத்துவத்திலிருந்து தள்ளிவைத்து விடுவீர்கள். அது முற்றிலும் உண்மை. ஓ, நீங்களாகவே அதைச் செய்ய ஒரு வழியை வைத்துக்கொண்டீர்கள். ஆகையால் அதைச் செய்ய தேவன் ஒரு வழியை வைத்துள்ளார். ஆனால் தேவனுடைய சபை முன்னேறிச் செல்லும். அக்கினி ஸ்தம்பமோ அதற்காக தொடர்ந்து செல்லாமல் நிற்காது. …போஜனபீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது… 168 இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது இது உங்களுக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சியை அளிக்கப்போகிறது. கவனியுங்கள். நான் வார்த்தையை வாசிக்கவுள்ளேன். இது யாராயிருந்தது? ஏசாயா தீர்க்கதரிசி. போஜனபீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது. சுத்தமான இடமில்லை, அப்படியே நாய் நாயைத் தின்னுகிறது. 169 சபைக்கு வந்து பாருங்கள்; ஸ்திரீகள் தங்களுடைய தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொண்டு, குட்டையான கால்சட்டைகளை அணிந்து கொண்டு, வெளியே வந்து, ஆண்கள் வீதியில் வருவதைப் பார்க்க வருகிறார்கள். அதேபோல் உடைகளை அணிந்து முற்றத்தில் புல்வெட்டுகிறார்கள், வாலிபப் பெண்பிள்ளைகளோ யாராகிலும் நாயைப்போல அல்லது ஓநாய் ஊளையிடுவது போல ஒலியினை எழுப்புவதைக் கேட்க விரும்புகிறார்கள். அது என்னவாயிருந்தாலும் சரி, உங்களுக்குத்தான் தெரியுமே, “அந்த வியூ-வூயூ!” என்ற ஒலி எழுப்பும் சத்தம்! ஓ, நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், நீங்கள் நினைக்கவில்லையா? 170 புருஷர்களாகிய நீங்கள் உங்களுடைய வாயில் ஒரு சுருட்டோடு வீதியில் நடந்து செல்லுகிறீர்கள், அதே சமயத்தில் சபை நிர்வாகக் குழுவில் ஒரு கண்காணியாயிருக்கிறீர்கள். நீங்கள் டெக்ஸாஸில் ஒரு கொம்பற்ற இளைங்காளைப் போன்றிருக்கிறீர்கள். அதன்பின்னர் நீங்கள் உங்களை யாரோ ஒருவர் என பெரிதாக நினைத்துக் கொள்ளுகிறீர்கள். அது முற்றிலும் உண்மை. போஜனபீடங்களெல்லாம்…அவ்வாறு இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அப்படியே நடந்து சென்று இராபோஜனம் எடுத்துக்கொண்டு, நீங்கள் யாரோ ஒருவரைப் போல நடந்துகொண்டு, பின்னர் வாரம் முழுவதும் ஏமாற்றி, திருடி, பொய் பேசித் திரிகிறீர்கள். உங்களோடுள்ள காரியம் என்ன? …போஜனபீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது… 171 “ஓ, நான் கர்த்தருடைய இராபோஜனம் எடுக்கிறேன். நிச்சயமாகவே, நாங்கள் அதை எங்களுடைய சபையில் செய்கிறோம். நாம் கர்த்தருடைய இராபோஜனத்தை எடுப்போமேயானால், இயேசு கடைசி நாளில் நம்மை எழுப்புவதாக அவர் கூறினார்.” 172 ஆனால், “என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினாலே, தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். இதினிமித்தம் உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள். அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். பழைய, மரித்துபோன, சம்பிரதாய சபைகள், தேவனுடைய ஆவி உங்களை விட்டுப் போய்விட்டது. இனிமேல் அக்கினிஸ்தம்பமே அங்கே இருக்காது. நீங்கள் தெய்வீக சுகமளித்தலை மறுதலிக்கிறீர்கள். நீங்கள் உயிர்த்தெழுதலை மறுதலிக்கிறீர்கள். 173 நீங்களோ, “ஓ”, “ஓ, அவர் சரித்திரப் பிரகாரமாக மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்” என்று கூறுகிறீர்கள். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருப்பாரேயானால், இன்றைக்கும் அவர் மாறாதவராய் இருப்பதைக் குறித்து என்ன? நீங்களோ, “ஓ, அது அவ்வண்ணமாயில்லை” என்று கூறலாம். இப்பொழுது அங்குதான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் விரும்புகிற விதமாக உயிர்த்தெழுதலை உடையவர்களாயிருக்க விரும்புகிறீர்கள். தேவன் அதை விரும்புகிற விதமாகவே அதைச் செய்துள்ளார். 174 ஆனால் அதைக் குறித்த காரியமோ, நாம் சத்தியம் என்று அறிந்துள்ளதை, அவர் அந்த வார்த்தையை உறுதிபடுத்துவார் என்று வேதம் உரைத்துள்ளது. “நான் செய்கிற இந்தக் காரியங்களை நீங்களும் கூட செய்வீர்கள். நான் உலகத்தின் முடிவுபரியந்தம், எப்பொழுதும் உங்களுடனே இருப்பேன்.” இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதைத்தான் வார்த்தை உரைத்துள்ளது. 175 இப்பொழுது இளைப்பாறுதல் என்றால் என்ன? …போஜனபீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது…சுத்தமான இடமில்லை. அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? உலகப்பிரகாரமான அறிவை அல்ல; ஆவிக்குரியப்பிரகாரமான அறிவையே! அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? 176 “ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம், எங்களுடைய ஸ்தாபனம் இதை நம்புகிறதில்லை. அவர்கள் அதனை ஆதரிக்கமாட்டார்கள்”…உங்களுடைய ஸ்தாபனம் என்ன விசுவாசிக்கிறது என்பதைக் குறித்தே அக்கறை கொள்ளுகிறீர்கள். அப்படியானால் தேவனுடைய வார்த்தை அதைக் குறித்து என்னக் கூறுகிறது? “ஓ, உங்களுக்குத் தெரியுமா? எங்களுடைய போதகர்கள் கல்வியறிவுள்ளவர்கள்,” ஓ, நிச்சயமாகவே, மிக அதிகமாகப் படித்தவர்கள், எனவேதான் அவர்கள் அதில் தேவனை விட்டுவிட்டனர். உண்மையாகவே, நீங்கள் அவர்களுக்கு வார்த்தையைக் கூறினால், அவர்கள் எழுந்து நடந்து சென்று, “நான் அதை அந்தவிதமாக விசுவாசிக்கிறதில்லை” என்று கூறிவிடுவார்கள். ஓ, நீங்கள் பெண்மைதன்மை கொண்டவர்களாயிருக்கிறீர்களே! நான் உங்களுக்குக் கூறட்டும். 177 இங்கே கவனியுங்கள். யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பட்டவர்களுக்குமே. 178 அன்றோரு நாள் என்னுடைய அண்டை வீட்டுக்காரன் ஒருவன் வந்தான். அப்பொழுது அவன், “பில்லி, இங்கே பட்டிணத்திலே ஒரு குறிப்பிட்ட் போதகர் இருக்கிறார். நீங்கள் கண்டவர்களிலேயே மிகவும் அழகான நபர்…” என்றான். மேலும் அவன், “நானும் என்னுடைய மனைவியும் இரவுநேர ஆடைகளோடு கிட்டத்தட்ட நள்ளிரவில் உட்கார்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுது அந்தப் போதகர் உள்ளே ஓடி வந்து, எங்களோடு சேர்ந்து காபி அருந்திவிட்டு, பின்னர் வெளியே போய் மற்ற அண்டை வீட்டுக்காரரின் வீட்டிற்குச் சென்று, அவர்களோடு கரங்குலுக்கினார். அப்பொழுது அவர்கள் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர், அப்பொழுது அவரும் அவர்களோடு அமர்ந்து சீட்டு விளையாடினார்” என்றான். மேலும் அவன், “ஓ, நீங்கள் பார்த்ததிலேயே மிகவும் இயல்பாகக் கூடிப் பழகக் கூடியவர்” என்றும், “ஓ, நாங்கள் அவரை நேசிக்கிறோம். நாங்கள் எதற்காகவும் அவரை வெளியேற்றமாட்டோம்” என்றும் கூறினான். 179 நான் அங்கேயே சற்று நேரம் நின்று, “அப்படியா?” என்று எண்ணினேன். 180 மேலும் அவன், “ஓ, ஒவ்வொரு சபைக்கும் அதுபோன்ற ஒரு மனிதனே தேவைப்படுகிறார் என்று நீர் கருதவில்லையா?” என்று கேட்டான். ஹூ! என்னால் அதற்கு பதில் கூற முடியவில்லை. அவன் தொடர்ந்து, “இன்னொரு சிறு இடத்தில் உள்ளவர்களைப் பற்றிக் கூறினான், அவர்கள் ஒரு அழகான இடத்தை வைத்திருக்கிறார்களாம். இந்த ஊழியக்காரனும், அவனுடைய மனைவியும், அருமையான ஜனங்களாம், அவர்கள் வெளியே போய் சிறு பிள்ளைகளுடன் அதிகமாக ஈடுபாடுகொண்டு ஒரு வேதபாட பள்ளி நடத்துகிறார்கள்” என்றான். தொடர்ந்து அவன், “அவர்கள் சிறு பிள்ளைகளுக்கு அளவின்றி அதிகமான காரியங்களை செய்திருக்கிறார்கள்” என்றான். மேலும், “என்னே, அந்த ஊழியக்காரரால் எல்லாவிதமான சிறு கதைகளையும் சிறு பிள்ளைகளுக்கு கூற முடியும்” என்றும் கூறினான். 181 அதற்கு நான், “அது அருமையாயுள்ளதே. அது மிகவும் அருமையாயுள்ளது” என்றேன். 182 அப்பொழுது நான் கனடாவிலிருந்து திரும்பி வந்திருந்தேன். அப்பொழுது நான், “இதோ நான் இருக்கிறேன். என்னே! ஜனங்களே…என்னோடுள்ள காரியம் என்ன? நான் அதைச் செய்கிறதில்லையே” என்று எண்ணினேன். அப்பொழுது நான் என்னுடைய காரைக் கழுவச் சென்றேன். மேலும் நான், “தேவனே, நான் வயோதிகனாகிக்கொண்டேப்போகிறேன், இதோ நான் இருக்கிறேன். நான் போராடியிருக்கிறேன். நான் கதறியிருக்கிறேன். நான் மன்றாடியிருக்கிறேன். நான் பெறுகிற காரியமோ ஒரு பெரிய தூஷணமாகவேயுள்ளதே” என்று எண்ணினேன். 183 எந்தக் காரியமாயினும், எவருமே என்னைக் குறித்து, “ஓ, அந்த பண்டைய பரிசுத்த-உருளை” என்று அதைப் போன்ற ஒரு காரியத்தையே மோசமாகவே கூறுகிறார்கள். 184 நான் அதைக் குறித்து எண்ணிப்பார்த்தேன். அப்பொழுது ஒரு சத்தம் என்னிடத்தில், “அவர்கள் அதை செய்துகொண்டிருந்தால், அந்த மனிதர்கள் செய்வது சரியென்று கூறினாலும் சரி, ஆனால் நீ அதைச் செய்யும்படிக்கு நான் உன்னை ஒருபோதும் அழைக்கவேயில்லை. நீயோ பட்டயத்தை எடுத்து, யோசுவாவைப் போல அங்கு நின்று சவாலிடவே உன்னை அழைத்தேன். சகோதரனே, எனவே ஏதோ ஒரு பழைய சங்கத்தோடு அல்லது ஒரு சபை ஸ்தாபனத்தோடு நேரத்தை வீணாக்க வேண்டாம், ஆனால் பிசாசிற்கு சவாலிடு. முண்ணணியில் நின்று சரியானதை சரியென்றும், தவறை தவறு என்றும் கூறு. வார்த்தையைப் பிரசங்கித்து, அதை விசுவாசிக்கும்படியான விசுவாசத்தை யார் பெற்றிருக்கிறார்கள் என்று கண்டறிந்துகொள். பட்டயத்தை அங்கேய முன் வை” என்று கூறிற்று. 185 நான் அந்தக் காரை மிகவும் வேகமாகக் கழுவிக் கொண்டே, நான், “கர்த்தாவே, உமக்கு நன்றி, கர்த்தாவே உமக்கு நன்றி” என்று கூறினேன். அப்பொழுது நல்ல உணர்வினையடைந்தேன். எனவே நான், “சரி, கர்த்தாவே, நான் பட்டயத்தை இன்னும் சற்று இறுகக் கட்டிக் கொள்வேன், அது என் கரத்தில் இருப்பதோடு நான் மரிக்க விரும்புகிறேன்” என்றேன். …யாருக்கு நான் உபதேசத்தை உணர்த்துவேன்? (கவனியுங்கள்) …போஜனபீடங்களெல்லாம் வாந்தியால் நிறைந்திருக்கிறது… பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பட்டவர்களுக்குமே. இப்பொழுது கவனியுங்கள். கற்பனையின் மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சென்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு, பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிராமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும். 186 இளைப்பாறுதல் என்றால் என்ன? எப்பொழுது இளைப்பாறுதல் உண்டானது? ஜனங்கள் அந்நிய பாஷைகளினாலும், பரியாச உதடுகளினாலும் பேசினபோது உண்டானது. பரியாச உதடுகளினால் அவர்கள் ஒரு காரியத்தையும் பேசவில்லை. அவர்கள் திக்கிதிக்கிப் பேசினார்கள். அது எப்பொழுது சம்பவித்தது? பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வந்தபோது, அது சம்பவித்தது. அதுவே இளைப்பாறுதலாய் உள்ளது; பரிசுத்த ஆவி. இயேசு, “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் உங்களுக்கு ஜீவனை, நித்திய ஜீவனைத் தருவேன்.” ஸோயீ என்ற கிரேக்க வார்த்தை, தேவனுடைய சொந்த ஜீவன் என்று பொருள்படுகிறது. தேவன் உங்களுக்குள்ளாக வந்து, உங்களுடைய ஒரு பாகமாக இருப்பதாகும். அவர் உங்களுக்கு ஒரு பிறப்பை அளித்து, உங்களை ஒரு குமாரனும், குமாரத்தியுமாக்குகிறார். 187 இப்பொழுது கவனியுங்கள். அது அவர் அளித்த மூன்றாம் இளைப்பாறுதலாயிருந்தது. முதலாவது: தேவன் தம்முடைய கிரியைகளிலிருந்து அதைப் பெற்றுக்கொண்டார். இரண்டாவது: இஸ்ரவேலர் நியாயப்பிரமாணத்தில் அதைப் பெற்றுக்கொண்டனர். மூன்றாவதாக; சபையானது தேவனுடைய ஒரு பாகமாக அதைப் பெற்றுக்கொண்டது. 188 மூன்று என்ற எண் ஜீவனின் எண்ணாக உள்ளது. எத்தனை பேர் அதை அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஒவ்வொரு முறையும் நீங்கள் மூன்று என்ற எண்ணைக் காணும்போது, அது ஜீவனாயுள்ளது. கவனியுங்கள், தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தபோது, மூன்றாம் நாளில் சிருஷ்டித்தது ஜீவனாயிருந்தது. எத்தனைபேர் அதை அறிவீர்கள்? [“ஆமென்.”] மூன்றாம் நாள். சிருஷ்டிப்பின் மூன்றாம் நாளிலே ஜீவன் உண்டானது. திரித்துவம்: பிதா, அக்கினி ஸ்தம்பத்தில் ஜனங்களுக்கு மேலாக இருந்தார். குமாரன் ஒரு மனிதனாய் ஜனங்களிடத்தில் பேசி, அவர்களை ஆயத்தம் செய்தார். பரிசுத்த ஆவி என்பது மூன்றாவது படியாயிருந்தது, பரிசுத்த ஆவி என்பது தேவன் ஜனங்களுக்குள் இருப்பதாகும். ஜீவன்! பிதா, குமாரன்… தேவனுடைய இளைப்பாறுதல்; இஸ்ரவேலருடைய இளைப்பாறுதல்; சபையின் இளைப்பாறுதல், ஓய்வுநாளைக் கடைபிடித்தல். 189 ஆகையால், நீங்கள் பரிசுத்த ஆவியை ஒருபோதும் பெற்றிருக்கவில்லையென்றால், நீங்கள் இன்னமும் தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கவில்லை. நீங்கள், “ஓ, நான் புகைப்பிடிக்க விரும்பியும், என்னால் அதைச் செய்யமுடியவில்லை. என்னால்—என்னால் அதைச் செய்யவே முடியாது; ஏனென்றால் நான் ஒரு கிறிஸ்தவன். நான் உண்மையாகவே மது அருந்த விரும்புகிறதில்லை, ஏனென்றால் நான் ஒரு கிறிஸ்தவன். என்னால் அதைச் செய்ய முடியாது, மது அருந்தவே விரும்புகிறதில்லை, ஆனால் அதே சமயத்தில் நான் மது அருந்த விரும்பியும், என்னால் அதை செய்ய முடியாது” என்று கூற வேண்டியதில்லை. 190 நீங்கள் ஸ்திரீகளை இச்சிப்பீர்களேயானால், நீங்கள் இந்த தேவபக்தியற்ற எல்லாக் காரியங்களையும் செய்வீர்களேயானால், நீங்கள் இன்னும் அந்த இளைப்பாறுதலின் காலத்தில் ஒருபோதும் பிரவேசிக்கவேயில்லை. நீங்கள் இன்னமும் உங்களுடைய இளைப்பாறுதலின் காலத்தில் ஒருபோதும் பிரவேசித்திருக்கவேயில்லை. 191 நீங்கள் இந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்திருக்கும்போது, தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஓய்ந்திருந்ததுபோல, உங்களுடைய சொந்த உலகப் பிரகாரமான கிரியைகளையெல்லாம் விட்டு ஓய்ந்திருப்பீர்கள். ஏன்? நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாயிருக்கிறீர்கள். நீங்கள் நித்தியமாக இளைப்பாறுகிறீர்கள். அங்குதான் நீங்கள் இருக்கிறீர்கள். அதுவே இளைப்பாறுதல். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்.” இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப் பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். 192 இன்னும் ஒரு வசனம் அல்லது இப்பொழுது இங்கே இன்னும் இரண்டு வசனத்தை நாம் பார்த்து முடிப்போம். ஏனெனில், கிறிஸ்துவினுடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன்… வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்ததுபோல, நீங்களும் உங்களுடைய கிரியைகளிலிருந்து முடித்து ஓய்ந்திருக்கிறீர்கள். உங்களுடைய முப்பத்தாவது வருடத்திலோ, நாற்பதாவது வருடத்திலோ, ஐந்தாவது வருடத்திலோ, அது என்னவாயிருந்தாலும் சரி. தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து நித்தியமாக ஓய்ந்திருந்தது போல, நீங்களும் உங்களுடைய கிரியைகளிலிருந்து முடிவுற்று ஓய்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இனிமேல் உலகத்தின் காரியங்களே தேவையில்லை. உலகம் உங்களுக்கு மரித்ததாயுள்ளது. 193 இப்பொழுது, 11-வது வசனத்தை, இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். ஆகையால், அந்த திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்படியாமையினாலே விழுந்து போகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் (இந்த ஒன்றில் அல்ல, இந்த ஒன்று அல்ல, ஆனால் இந்த ஒன்றே) பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம். 194 அது என்னவாயிருக்கிறது? அக்கினி ஸ்தம்பம் இங்கே உள்ளது. கர்த்தருடைய தூதன் நம்மோடு இருக்கிறார். அவர் செய்வதாகக் கூறின அதேக் காரியங்களை அவர் செய்துகொண்டிருக்கிறார். ஜனங்களோ இடறிவிழுந்து, “ஓ, நல்லது, அது சரி என்று நான் யூகிக்கிறேன். அது பார்ப்பதற்கு இனிமையாயுள்ளது, ஓ, அது சரி என்று நான் யூகிக்கிறேன்” என்கிறார்கள். நீங்கள் அந்த அதே அவிசுவாசக் கன்னியில் விழாதபடிக்கு ஜாக்கிரதையாயிருங்கள். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். 195 கவனியுங்கள். தேவனுடைய வார்தையானது (சபையின் கோட்பாடு அல்ல)…தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், (கவனியுங்கள்), ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், (கவனியுங்கள்) இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அது என்னவாயிருந்தது? பரிசுத்த ஆவியானவர் வந்து, “நீ இன்ன-இன்ன காரியத்தைச் செய்தாய். நீ இதைச் செய்தாய், அதைச் செய்தாய். நீ இந்த விதமான வியாதியை உடையவனாயிருக்கிறாய், அதை உடையவனாயிருக்கிறாய். நீ இதை சரிபடுத்திக்கொண்டால், நீ அதை செய்தால்” என்று கூற முடியும். புரிகிறதா? இருதயத்தின் நினைவுகளை வகையறுப்பவர். 196 ஜனங்கள், “அது என்ன? ஏன்? அது மனோத்தத்துவமாயிருக்கிறது. ஏன்? அவர் ஒரு குறிசொல்லுபவர்” என்று கூறுகின்றனர். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அது ஒரு பொல்லாத, தேவனை அறியாத பழைய விபச்சார உலகாமாயிருக்கிறது. 197 “அது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” இப்பொழுது, இருதயத்தின் யோசனைகளை அறிகிறது எது? தேவன். நீங்கள், “நல்லது, வேதம், ‘தேவனுடைய வார்த்தை’ என்று உரைத்துள்ளது” என்றீர்கள். தேவனுடைய வார்த்தை தேவனாய் இருக்கிறது. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி,…நமக்குள்ளே வாசம்பண்ணினார். 198 தேவன் நினைவுகளை வகையறுக்கிறார். ஆபிரகாம் தன்னுடைய முதுகை கூடார பக்கமாக திருப்பியிருந்தான், தேவனும் தம்முடைய முதுகை கூடாரப் பக்கமாகத் திருப்பியிருந்தார். அப்பொழுது சாராளோ நகைத்தாள். அப்பொழுது தேவன் திரும்பி, “சாராள் ஏன் நகைத்தாள்?” என்றார். இருதயத்தின் நினைவுகளை வகையறுப்பவர்! நான் அதைச் சற்று பதிய வைக்க விரும்புகிறேன். 199 ஆகையால் கடைசி நாட்களில் தேவன் வாக்களித்துள்ள அந்த விதமான ஒரு ஊழியம் எழும்பும்போது, என்ன சம்பவித்தது? “மனோத்தத்துவம்” என்கிறார்கள். 200 அவர்கள் ஆண்டவரையே, “பெயல்செபூல்” என்று அழைக்கவில்லையா? அவர், “வீட்டெஜெமானையே அவர்கள் ‘பெயல்செபூல்’ என்று சொன்னார்களானால், அவருடைய சீஷர்களை அவர்கள் சொல்வது அதிக நிச்சயமல்லவா?” என்றார். 201 நான் உங்களை நேசிக்கிறேன். அது நீங்கள் போதுமான ஆர்வமுடையவர்களாயிருக்கிறீர்கள் என்பதையே காண்பிக்கிறது, நீங்கள் சுவிசேஷத்தைக் கேட்பதற்கு குளிர் சாதன வசதிகொண்ட கட்டிடத்திற்கு வர வேண்டியதில்லை. இது போன்ற ஒரு இடத்திற்கு வர நீங்கள் போதுமான பசிக்கொண்டிருக்கிறீர்கள். தேவன் இதைத் தவிர வேறோன்றையும் கட்ட நம்மை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். நாம் இதை இந்தவிதமாகவே விரும்புகிறோம். வெறுமென ஒரு பழைய அரைகுறையாக கட்டப்பட்ட சிறு கட்டிடம், ஆனால் அந்த விதமாகவே நாம் இதை விரும்புகிறோம். தேவன் வசீகரிக்கும் அழகில் வாசம் செய்கிறதில்லை. தேவன் தாழ்மையில் வாசம் செய்கிறார். நாம் இதை இந்தவிதமாகவே விரும்புகிறோம். நாம் இது போன்ற ஒரு இடத்திற்கு வர மகிழ்ச்சியடைகிறோம், நீங்களும் கூட வந்து, இதுபோன்ற இடத்தில் அமர மகிழ்ச்சியடைகிறீர்கள். இது எவ்வளவு உஷ்ணமாயிருந்தாலும் கவலைப்படாமல், உங்களுடைய புது சூட் துணியில், உங்களுடைய புதிய ஆடையில் எவ்வளவுதான் வியர்த்துக் கொட்டினாலும் கவலைப்படுகிறதில்லை, அது எந்த வித்தியாசத்தையுமே உண்டாக்குகிறதில்லை. உங்களுடைய இருதயத்தின் நினைவுகளை அறிந்திருக்கிற தேவனுடைய வார்த்தைக்கு, நித்திய ஜீவனுக்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இஸ்ரவேல் புத்திரர் மீது தொங்கின அந்த அக்கினி ஸ்தம்பம், இன்றிரவு இங்கே தொங்குகிறது. என்னால் இதை சவாலிட்டுக் கூற முடியும்; எந்த ஒரு மனிதனும் தேவனில்லாமல், பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் நின்று, ஒருவனைப் பற்றியும், அவன் என்னாவாயிருந்தான் என்பதையும் அவனிடத்தில் கூறிக்கொண்டிருக்க முடியாது. அது உண்மை. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 202 அது என்னவாயிருக்கிறது? அது என்னவாயிருக்கிறது? அது இஸ்ரவேல் புத்திரரை அவர்களுடைய இளைப்பாறுதலுக்கு வழி நடத்தின அதே ஆவியாய் இருக்கிறது. அவர்கள் அவிசுவாசத்தின் காரணமாக விழுந்து போனார்கள். நீங்களும் விழுந்து போக வேண்டாம். இது கடைசி தருணமாயுள்ளது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, அங்கே பரிசுத்த ஆவி மூலமாக ஜீவன் உண்டாகிறது. 203 நீதிமானாக்கப்படுதல், மார்டின் லூதர், இன்னமும் மார்க்க ரீதியான முறைமையாயுள்ளது. பரிசுத்தமாக்கப்படுதல்…மார்டின் லூத்தர்; ஜான்வெஸ்லி; பரிசுத்த ஆவியின் அபிஷேகம், ஜீவன். நீதிமானாக்கப்படுதல் விசுவாசமாயிருக்கிறது; பரிசுத்தமாக்கப்படுதல் தூய்மையாக்குதலாயுள்ளது; பரிசுத்த ஆவி ஜீவனை நிரப்புதலாயுள்ளது. லுத்தரன் காலத்தினூடாக அல்ல; அவர்கள் அதை ஒரு முறைமையாகக் கொண்டிருந்தனர். வெஸ்லியின் காலத்தினூடாக அல்ல; அவர்கள் அதை ஒரு முறைமையாக கொண்டிருந்தனர். ஆனால் இதுவோ பரிசுத்த ஆவியானவர் தாமே வருகிற காலமாயுள்ளது. 204 நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லையென்றால், உங்களால் எப்படி அற்புதங்களை விசுவாசிக்க முடியும்? அதை விசுவாசிக்க தேவன் உங்களுக்குள்ளே தேவையாயிருக்கிறது. நீங்கள் தேவனைப்போல செயல்படுகிறீர்கள். நீங்கள் தேவனைபோலவே அறிந்து கொள்ளுகிறீர்கள். நீங்கள் தேவனைப் போலவே சிந்திக்கிறீர்கள். நீங்கள் குட்டி “தேவர்களாயிருக்கிறீர்கள்” என்று வேதம் உரைத்துள்ளது. இயேசு அவ்வண்ணமாகக் கூறியுள்ளார். ஏனென்றால் நீங்கள் தேவனின் ஒரு பாகமாயிருக்கிறீர்கள். நான் ஒரு பிரான்ஹாம் குடும்பத்தின் குட்டி பிரான்ஹாமாக இருந்துவருகிறது போலவே, நீங்கள் யாராயிருந்தாலும், நீங்களும் உங்களுடைய குடும்ப பெயரைக்கொண்ட குட்டி நபராய் இருக்கிறீர்கள். ஏனென்றால் உங்களுடைய பெற்றோர்கள் அந்த பெயரில் இருக்கிறார்கள். நீங்கள் கொண்டுள்ள சுபாவம் உங்களுடைய பெற்றோர்கள் அந்த விதமாக இருக்கின்ற காரணத்தினாலேயாம், ஏனென்றால் நீங்கள் அவர்களிடத்திலிருந்து பிறந்தீர்கள். நீங்கள் தேவனை விசுவாசிக்க காரணமென்னவென்றால், அற்புதங்களிலும், அடையாளங்களிலும், அதிசயங்களிலும் விசுவாசங்கொள்ள காரணமென்னவெனில், நீங்கள் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். நீங்கள் ஜீவனை பெற்றுக்கொள்கிறீர்கள். மூன்றாவது கட்டத்தில் ஜீவன் உண்டாகிறது. சரி. 205 இயேசுவானவர் மலையின் மீது சென்றபோது, அவர் எங்கெங்கு சென்றாரோ, அங்கெல்லாம் அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் மூவரையும் மூன்று சாட்சிகளாக அழைத்துச் சென்றார். மூன்று ஜீவனின் எண்ணாக உள்ளது. இது புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அன்பு, சந்தோஷம், சமாதானம். 206 இப்பொழுது, நாம் அதிகாரத்தின் கடைசிக்கு இப்பொழுது துரிதமாக செல்வோம், நாம் துரிதமாக வாசிப்போம். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்,…இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையருக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது. அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். 207 சகோதரனே, அவர் அறியாமல் ஒரு ஈ கூட அங்கே கம்பத்தில் உள்ள விளக்கின் மேல் பறக்க முடியாது. “எல்லாக் காரியங்களும் வெளியரங்கமாயிருக்கின்றன்.” சகோதரனே, நீங்கள் செய்த ஒவ்வொரு காரியத்தையும் அவர் அறிந்திருக்கிறார், நீங்கள் நினைத்த ஒவ்வொரு நினைவையும் அவர் அறிந்திருக்கிறார். அந்தவிதமாகத்தான் அவர் இருக்கிறார். நாம் அதைப் போன்றே அவரை விசுவாசிக்கிறோம். தேவன் நமக்குள்ளாக வரும்போது, சபையில் நம்மை சேர்க்கும்போது, அவர் சபையில் வரங்களையும் மற்றக் காரியங்களையும் அவர் கிரியை செய்யும்படிக்கு வைக்கிறார். தேவன் எல்லையற்றவராயிருப்பாரானால், அப்பொழுது அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்துகிறார். அவரால் மரித்தோரை எழுப்பமுடியும். அவரால் குஷ்டரோகிகளை சொஸ்தப்படுத்தமுடியும், குருடருக்கு பார்வையளிக்க முடியும். அவரால் தரிசனங்களை அளிக்க முடியும். அவரால் இந்த எல்லாவிதமான காரியங்களையும் செய்ய முடியும், தம்முடைய சபையினூடாக கிரியை செய்ய முடியும், ஏனென்றால் அது தேவன் உங்களுக்குள் இருப்பதாயுள்ளது. அதுதான் சபையாகும். 208 ஒரு சபையை சேர்ந்துகொள்வதன் மூலம் எப்படி அது ஒரு சபையாகிறது? இல்லை ஐயா. கரங்களை குலுக்குவதன் மூலமாகவா? இல்லை ஐயா. தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமாகவா? இல்லை ஐயா. அங்கத்தினராவதனாலா? இல்லை ஐயா. நீங்கள் எப்படி அதில் சேருகிறீர்கள்? “எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருக்கிறோம்.” அங்குதான் நீங்கள் இருக்கிறீர்கள். 209 ரோமர் 8:1. ஆனபடியால்,…ஆக்கினைத் தீர்ப்பில்லை. “உலகப்பிரகாரமான ஆக்கினைத்தீர்ப்பில்லை.” அவர்கள் உங்களைக் குறித்து ஒன்றுமே குற்றஞ்சாட்ட முடியாது. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 210 அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அந்தவிதமாகத்தான் உங்களுடைய கிறிஸ்தவமார்க்கத்தை நியாயந்தீக்க வேண்டும். அந்த விதமாகத்தான் நீங்கள் அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்திருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். உலகம் இனி ஒருபோதும் உங்களுக்கு தொந்தரவு கொடுப்பதில்லை. நிச்சயமாக. நீங்கள் அதைக் கண்டு, அதிலிருந்து விலகிச் சென்றுவிடுகிறீர்கள். நீங்கள் மேலான வழியில் சிந்திக்கும்படியான ஏதோ ஒரு காரியத்தைப் பெற்றுக்கொண்டீர்கள். அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள், “ஆக்கினைத்தீர்ப்பேயில்லை.” அந்த விதமாகத்தான் நாம் அந்த சரீரத்திற்குள்ளாகப் பிரவேசிக்கிறோம். 211 நீங்கள், “என்றென்றைக்குமாய்” பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள். வேதம் அவ்வண்ணமாய் உரைத்துள்ளது. எபிரேயர் 10-அதிகாரத்தில் இங்கே பாருங்கள். அவர் கூறினார்: ஏனென்றால் அங்கே காளைகளின் பலிகளும், மற்ற பலியும், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. இவரோ…ஒரே பலியைச் செலுத்தி… அவருடைய பரிசுத்த நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! ஏனெனில் ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். 212 அல்லேலுயா! அடுத்த எழுப்புதல் வரை அல்ல, ஆனால் என்றென்றைக்குமாய். “பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதியதாயின.” நாம் ஒளியில், அழகான ஒளியில் நடந்துகொண்டிருக்கிறோம். பறவைகளோ வித்தியாசமாகப் பாடுகின்றன. 213 சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்று நான் யூகிக்கிறேன், இங்கே அமர்ந்துள்ள இந்த மிதமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட பெண்மணியைப் பாருங்கள். ரோஸல்லா என்ற அவள் போதை கொண்ட கண்களோடு சிக்காகோவின் வீதிகளில் குடித்துவெறித்து, தட்டுத்தடுமாறி நடந்து திரிந்து, எல்லாவிதமான பாவத்திற்கும் உட்பட்டவளாயிருந்தாள். ஒரு இரவு பரிசுத்த ஆவியானவர், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானவர், “ஸ்திரீயே, நீ ஒரு மிதமிஞ்சிய குடிக்கு ஆட்பட்டவள்” என்றார். அல்லேலூயா! முன்னே பழைய ஏற்பாட்டில் அவருக்கு பின்னிருந்து சாராள் நகைத்ததை அறிந்த அதே மாறாத தேவனாய் அவர் இருக்கவில்லையென்றால், அவர் வேறென்னவாய் இருக்கிறார் என்பதை நான் அறியேன். 214 மற்றொரு பெண்மணியும் அங்கே கூட்டத்தில் இருந்தாள். ரோஸல்லா சென்று அவளை அழைத்து வந்திருந்தாள். அப்பொழுது, “நீ போதை மருந்து உட்கொள்வதில் அடிமையாயிருக்கிறாய்” என்று பரிசுத்த ஆவியானவர் கூறினார். அவர் எப்படியாய் இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறவராயிருக்கிறார். 215 மகத்தான பெரிய உயர்குலத்தில் பிறந்த ஊழியர்கள், உலகளாவிய சுவிசேஷ ஊழியம் செய்பவர்கள் தங்களுடைய கரங்களைக் கட்டிக்கொண்டு, T வடிவத்தில் உள்ள பனியன்போன்ற சட்டைகளை அணிந்துகொண்டு, நமக்கு அவர்களைத் தெரியாது என்று எண்ணிக்கொண்டு, தேவனும் அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தமாட்டார் என்பதுபோல அவர்கள் கூட்டங்களில் அமர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் வேறு யாரோ ஒருவர் போல காணப்படும்படிக்கு வித்தியாசமாக அங்கே உட்கார்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் யாராயிருந்தனர் என்பதை பரிசுத்த ஆவியானவர் அறிந்திருந்தார். அது மனோத்தத்துவம் என்று அவர்கள் தங்களுடைய இருதயங்களில் எண்ணிக்கொண்டு, அங்கே அமர்ந்துள்ளனர். மேய்ச்சல் தொழில் கொண்ட தென் ஆப்பிரிக்கா நாடோடி இனத்தவருக்கு எகிப்திய இரவுக் கதைகளைப் பற்றி எப்படித் தெரியாதோ, அதுபோல இவர்களுக்கு தேவனைக் குறித்து ஒன்றுமேத் தெரியாது. அது உண்மை. அவர்கள் எழுத்தின் மூலமே அதை அறிந்திருக்கிறார்கள், ஆனால் ஆவியினால் அல்ல. “எழுத்து கொல்லுகிறது, அனால் ஆவியோ ஜீவனை அளிக்கிறது.” அதுதான் அது. அதுதான் கருத்து. “இருபுறமும் கருக்குள்ள எந்தப்பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. 216 கவனியுங்கள். கூர்ந்து கவனியுங்கள். அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால்…(சுகவீனமாயிருப்பவர்களே, இப்பொழுது கவனியுங்கள்). நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம். 217 “உறுதியாய் பற்றிக்கொண்டிருக்கக் கடவோம்” என்பதன் பொருள் தொடர்ந்து சாட்சி பகர்வதல்ல. நீங்கள் அதன்படியான ஒரு ஜீவியம் ஜீவிக்க வில்லையென்றால், நீங்கள் அதை உறுதியாய் பற்றிக்கொண்டிருக்கவில்லை; நீங்கள் ஒரு மாய்மாலமான ஜீவியம் ஜீவித்துக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்…நீங்கள் வெளியே போய், நீங்கள் ஒரு பாவி என்று கூறி, அதைக் குறித்து மறந்து விடுவது மேலானதாகும். ஒரு கிறிஸ்தவன் என்று உறுதியாகக் கூறி, வேறுவிதமாக ஜீவிக்காதீர்கள். அப்படி செய்தால், நீங்கள் உலகத்திற்கு மிகப்பெரிய இடறலாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு பாவியாய் இருந்தால், அதை ஒப்புக்கொண்டு, தேவனோடு சரிபடுத்திக்கொண்டு, தொடர்ந்து முன்செல்லுங்கள், நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருந்தால், உங்களுடைய அறிக்கையை உறுதியாக பற்றிக்கொண்டு, அங்கேயே தரித்திருங்கள். 218 இப்பொழுது இதைக் கவனியுங்கள். நாம் இங்கிருந்து செல்வதற்கு முன்னர், நான் இதை உங்களுடைய மனதில் பதியவைக்க விரும்புகிறேன். நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். கவனியுங்கள். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். தேவனுடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! 219 பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரியங்களே, லூத்தரன்களே கவனியுங்கள். நீங்களோ, “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்ற இந்த கேள்வியை என்னிடத்தில் கேட்கப் போகிறீர்கள். எனக்குத் தெரியும். அங்குதான் நீங்கள் எப்பொழுதுமே போகிறீர்கள். அது உண்மை. “ஒரு மனிதன் தேவனை விசுவாசிப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும்?” அது முற்றிலும் உண்மை. அவனால் செய்ய முடிந்ததெல்லாம் அவ்வளவுதான். ஆனால் தேவன் அந்த விசுவாசத்தை அங்கிகரிக்கிறபோது, அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியைத் தருகிறார். 220 “சகோதரன் பிரான்ஹாம், நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? நான் சத்தமிட வேண்டுமோ?” தேவையில்லையே. “நான் அந்நிய பாஷையில் பேசு வேண்டுமோ?” தேவையில்லையே. நீங்கள் சத்தமிட்டு, அந்நிய பாஷையில் பேச முடிந்தாலும், நீங்கள் இன்னமும் ஒரு அஞ்ஞானியைப்போலவும், இன்னமும் ஸ்திரீகளை இச்சிப்பவர்களாகவும் இருக்க முடியும். உங்களால் இன்னமும் புகைபிடிக்கவும், குடிக்கவும், மற்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்யமுடியும். அந்நிய பாஷையில் பேசுகின்ற ஜனங்கள் நேராகப் போய், மட்டமான சிலவற்றில் ஈடுபட்டு, நேர்மையற்ற முறையில் பேரம் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். நான் அவர்கள் சத்தமிடுவதையும், முதலைக் கண்ணீர் வடிப்பதையும், நீங்கள் வைத்துள்ள எந்தக் காரியத்தையும் திருடிக்கொள்பவர்களாய் இருப்பதையும் கண்டிருக்கிறேன். அவர்கள் வெளியே நடந்து செல்லும்போது, வீதியில் நடந்து செல்லுகிற ஒவ்வொரு பெண்ணையும் திரும்பிப் பார்ப்பதையும் நான் கண்டிருக்கிறேன். ஹூ—ஹூ. அதுவே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை என்பதற்கான ஒரு நல்ல அடையாளமாயிருக்கிறது. அது உண்மை. 221 ஆனால் சகோதரனே, நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கும்போது, அந்த காரியங்கள் எல்லாம் மரித்துப் போய்விட்டதாகின்றன. அப்பொழுது நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள். நீங்கள் தவறான ஏதோ ஒரு காரியத்தைக் காண்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள், “தேவனே இரக்கமாயிரும்” என்று அதற்காக ஜெபிப்பீர்கள். நீங்கள் ஒரு நபரின் தொல்லைகளைக் காண்பீர்களேயானால், அப்பொழுது அவனிடத்திற்கு சென்று வம்படித்து, அதை இன்னும் மோசமாக்க முயற்ச்சிப்பதற்குப் பதிலாக, நீங்கள் அந்த நபரிடம் சென்று அதைச் சரிப்படுத்தி, அதை உடனடியாக அமைதிபடுத்த முயற்ச்சிப்பீர்கள். அது உங்களுக்குள் இருக்கிற தேவனுடைய ஆவியாகும். 222 நீங்கள் ஒரு தவறு செய்வீர்களேயானால், அப்பொழுது நீங்கள் அதற்கு உட்பட்டவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு தவறு செய்வீர்களானால்,நீங்கள் அதை உடனடியாக சரிப்படுத்திக்கொள்ளுங்கள். “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.” அந்த விதமாகவே நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுகிறீர்கள். அப்படியானால் நீங்கள் அன்பு, சமாதனம், சந்தோஷம், நீடிய பொறுமை, நற்குணம், தயவு, பொறுமையை பெற்றிருக்கிறீர்கள். நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேச ஆயத்தமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு பரலோகத்திலேயே வீற்றிருக்கிறார். அது என்னவாயிருக்கிறது? இயேசு திரும்பவும் லோகாஸிடத்திற்கு, இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தின அக்கினி ஸ்தம்பத்திடத்திற்கு திரும்பிச் சென்று, ஊற்றான, வானவில்லின் ஒளிக்கதிர்களை வீசுகிற, அந்த ஏழு பரிபூரண ஆவிகளிடத்தில், ஒரு பரிபூரண அன்பின் ஆவியின் மகத்தான பிரசன்னத்தில் வீற்றிருகிறார். 223 இப்பொழுது கவனியுங்கள். முதலாவது அது பரிபூரண அன்பாய், அது தேவனுடைய அன்பாய், சுத்தமானதாயும், கலப்படமற்றதாயுமுள்ளது. அடுத்தபடியாக இங்கே உண்டாகிறதோ, மாம்சபிரகாரமான அன்பாய் உள்ளது, அந்த அன்பு நீங்கள் உங்களுடைய மனைவிக்காகவும், உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் கொண்டிருக்கும் அன்பாய் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, அதற்கு அடுத்து பிறக்கிறது இச்சையான அன்பாய் உள்ளது. அதற்கு அடுத்தது தேவபக்தியற்ற அன்பாய் உள்ளது. அது அப்படியே தொடர்ந்து அசுத்தம் வரைக்கும் சென்று, தொடர்ந்து தாறுமாறாக்கிக் கொண்டு, தாறுமாறாக்கிக் கொண்டு இருக்கிறது. 224 துவக்கத்தை கொண்டதாயிருக்கிற எந்த ஒரு காரியத்திற்கும் ஒரு முடிவு உண்டு. எல்லாமே எடுக்கப்பட்டு, அதைக் குறித்து நினைவு கூறுதலே இல்லாமல், என்றோ ஒரு நாள் பரிபூரணத்தண்டைக்கு திரும்ப வரும். ஒரே வழி என்னவென்றால்…உங்களால் அதை இங்கே அறைகுறையான வழியில் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் விசுவாசத்தினாலே இயேசுகிறிஸ்து அளிக்கிற இரட்சிப்பில் முழுமையாக நம்பிக்கை வைத்து, பூரணமாய் இளைப்பாற வேண்டும். 225 தேவனிடத்திலிருந்து வருகிற ஒரு நேர்மையான ஆவி உண்டு. அது ஊற்றாய், தேவனுடைய ஊற்றாய் உள்ளது. அது நேர்மையாயுள்ளது. அடுத்தது மனிதன் தன்னுடைய அயலானுக்காக செய்யும் “ஒரு நல்ல செயலாயுள்ளது.” அதற்கு அடுத்த நபராயிருப்பது, “நீங்கள் அவனை கவனிக்க வேண்டும்.” அதற்கு அடுத்த நபராயிருப்பது, “ஒரு திருடனாயிருக்கிறான்.” அதற்கு அடுத்த நபராயிருப்பது “ஒரு கொலைக்காரனாய்” இருக்கிறான். இதோடு நிறுத்திக் கொள்கிறேன். அது எப்படி தொடர்ந்து தாறுமாறாகிறது என்று பார்த்தீர்களா? ஆனால் அந்த காரியங்கள் யாவும் உண்மையான ஒன்று இருப்பதைக் குறித்து சுட்டிக்காட்டுகின்றன. 226 அதைத்தான் நான் கூறுகிறேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு நபரைக் காணும்போது…அதாவது நீங்கள் வீதியிலே காதல் தம்பதியினர் நடந்துசெல்வதைக் காணும்போது, ஒருக்கால் அவர்களுக்கு எண்பது வயதிருக்கலாம். அது பரலோகத்தில் உள்ளதைக் குறித்தேப் பேசுகிறது, அதாவது பரலோகத்தில் உள்ள வாலிப தம்பதியினரைக் சுட்டிக்காட்டுகிற ஒன்றாகவே உள்ளது. “இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும், அங்கே பரலோகத்திலே நமக்கு ஒன்று உண்டு.” 227 ஒரு மனிதன் ஏமாற்றிக்கொண்டும், திருடிக்கொண்டும், பொய்யுரைத்துக் கொண்டுமிருப்பதை நீங்கள் காண்பீர்களேயானால், நினைவிருக்கட்டும், அவனுடைய பங்கு நரகத்தில் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கிறது, தேவனுக்கு முன்பாகவும், பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் அக்கினியினாலும், கந்தகத்தினாலும் அவனுடைய இடத்தில் அங்கே வாதிக்கப்படுவான். அவன் அங்கே வாதிக்கப்படுவான். என்றென்றைக்குமாய் அல்ல, அவன் என்றென்றைக்குமாய் வாதிக்கப்பட முடியாது, என்றென்றுமாய் என்று ஆங்கிலத்தில் உள்ள வார்த்தை எல்லா நேரத்திலும் என்று பொருள்படவில்லை. நித்தியம் என்பதுதான் என்றென்றைக்குமே என்பதாய் உள்ளது. நித்தியம் என்பதற்கு…துவக்கமோ அல்லது முடிவோ கிடையாது. ஆனால் என்றென்றைக்கும் என்பது “ஒரு குறிப்பிட்ட காலம்” என்பதாய் உள்ளது. வேதம், “சதாகாலங்கள் என்பதற்கான ஆங்கில வார்த்தையில் என்றென்றும் என்ற வார்த்தைக்குப் பின்னர் ஆங்கில இடைச்சொல்லிட்டு பின்னர் என்றென்றும்” என்று கூறப்பட்டுள்ளது. யோனா மீனின் வயிற்றில் “என்றென்றைக்குமாய்” இருந்தான் என்று வேதம் உரைத்துள்ளது. அது ஒரு குறிப்பிட்ட கால நேரமாயுள்ளது. 228 ஆனால், பாருங்கள், ஒரே ஒரு நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு, அது தேவனாயுள்ளது. எனவே நீங்கள் என்றென்றைக்குமாய் வாதிக்கப்படப் போவதாயிருந்தால், நீங்கள் ஒருபோதும் மரிக்க முடியாது, அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் என்றென்றைக்குமாய் வாதிக்கப்பட முடியாது…நீங்கள் தேவனுக்கு முன்பாகவும், பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் கோடிக்கணக்கான ஆண்டுகள் வாதிக்கப்படலாம். அது எவ்வளவு காலம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது முடிவிலே ஒரு முடிவிற்கு வந்தாக வேண்டும், ஏனென்றால் அது ஒரு துவக்கத்தை உடையதாயிருந்தது. “தேவன் மாத்திரமே நித்திய ஜீவனை உடையவராயிருக்கிறார்.” என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் குறிப்பிட்ட காலம் ஜீவனையுடையவனாயிருப்பான் என்பதல்ல. அந்த துவங்குகிற ஜீவன், அதற்கு இங்கு ஒன்றுமேயில்லை. ஆனால் அங்கு நித்திய ஜீவன், ஸோயீ, தேவனுடைய சொந்த ஜீவன் இறங்கி வந்து, மனிதனுக்குள் வாசம் செய்கிறது, அவன் தேவனோடு நித்தியமாயிருக்கிறபடியால், மரிக்க முடியாது. அதைத்தான் வார்த்தைக் கூறினது. 229 அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். அப்படியானால் இரண்டு நித்திய ஜீவங்கள் உண்டா? உங்களால் அதற்கு பதிலளிக்க முடியாது, உங்களால் முடியுமா? ஒரு நித்திய ஜீவன் தான் உண்டு, அது தேவனுடைய ஜீவனாகும். இது மற்றொரு விதமான ஜீவன், அது என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அதற்கு ஒரு முடிவு உண்டாகும். துவக்கத்தைக் கொண்டுள்ள எந்த ஒரு காரியத்திற்கும் முடிவு உண்டு. ஆனால் துவக்கத்தைக் கொண்டிராத எந்த ஒரு காரியத்திற்கும் முடிவேக் கிடையாது. துவக்கமேயில்லாத நித்திய ஜீவனை தேவன் நமக்கு அளிப்பதாகக் கூறினார். உண்மையாகவே நமக்குள்ளாக இருக்கிற ஜீவன் மானிட சுபாவத்தினால் இங்கே கொண்டுவரப்படவில்லை. ஜென்ம சுபாவம் நம்க்கு ஒரு ஆவியை அளித்தது, ஆனால் அந்த ஆவி மரித்துப் போனது, நாமோ தேவனுடைய ஆவியைப் பெற்றுள்ளோம். தேவனுக்கே மகிமை! 230 தேவன் ஒரு மனிதனாயிருந்தாரா? நிச்சயமாக, “நமது சாயலாக மனுஷனை உண்டாக்குவோமா.” தேவன் என்னவாயிருந்தார்? ஒரு சரீரத்தில், ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார். அதுபோன்ற மனிதனையே அவர் உண்டுபண்ணி அங்கே தோட்டத்திலே வைத்தார். ஆனாலும் மானிட புலன்களோடு நிலத்தைப் பண்படுத்த மனுஷன் இருக்கவில்லை. அதன்பின்னர் அவர் பூமியின் மண்ணிலிருந்து மிருக ஜீவனைப்போல மனிதனை சிருஷ்டித்தார், அந்த மனுஷன் நிலத்தைப் பண்படுத்தினான். மனுஷன் மீறுதலினால் விழுந்து போனான். சரியாக. தேவன் ஆவிக்குரிய சரீரத்திலிருந்து இறங்கிவந்து மாம்சமாக்கப்பட்டு, மனிதனை மீட்க நமக்கு மத்தியிலே வாசம் செய்தார். 231 ஆகையால் நீங்கள் செய்யக் கூடியது ஒன்றுமில்லாததாயிருக்கிறது, நீங்கள் துவக்கத்திலேயே ஒரு பாவியாய் இருக்கிறீர்கள். நீங்கள் அக்கிரமத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பாவத்தில் பிறந்து பொய் பேசுகிறவர்களாய் இந்த உலகத்திற்கு வந்தீர்கள். நீங்கள் இங்கே இந்த உலகத்தில் உங்களுடைய தகப்பனும் தாயும் கொண்டிருந்த பாலினச் சேர்க்கையினால் பிறந்தீர்கள். எனவே நீங்கள் நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் ஒருபோதும் பொய்யுரைக்காமலிருக்கலாம், திருடாமலிருக்கலாம்; ஒவ்வொரு கட்டளைகளையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் கடைபிடிக்கலாம்; ஆனாலும் ஒரு சிறு மார்ட்டின் பறவை கூண்டில் இருப்பது போன்றே நீங்கள் நரகத்திற்குத் தான் செல்வீர்கள். ஆனால் நீங்கள் என்றென்றைக்குமாய் மீண்டும் ஜீவிக்கக்கூடிய ஒரே வழி பரிசுத்த ஆவியை, தேவனுடைய நித்திய ஜீவனை ஏற்றுக்கொள்வதேயாகும். 232 நீங்கள் இருக்கிறவிதமாக உங்களை உண்டாக்கினது எது? ஆதியிலே பரிசுத்த ஆவியானவர் பூமியின் மீது அசைவாடினபோது, அங்கே எரிமலை வெடிப்பைத் தவிர வேறொன்றுமேயிருக்கவில்லை. அப்பொழுது அங்கே ஒரு சிறு ஈஸ்டர் மலர் தோன்றினது. தேவன், “அது அழகாகக் காணப்படுகிறது என்று கூறி, அப்படியே தொடர்ந்து பிறப்பிக்கக் கடவது” என்றார். மலர்கள் தோன்றின. புற்கள் தோன்றின. மரங்கள் தோன்றின. பறவைகள் மண்ணிலிருந்து பறந்தன. மிருகங்கள் தோன்றின. ஒரு மனிதன் தோன்றினான். 233 இப்பொழுது, எப்படி அது உண்டாக்கப்பட்டது? பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலினால் இந்த மூலப்பொருட்களான சாம்பல் உப்பு, சுண்ணாம்பு போன்றவை ஒன்று சேர்ந்து, மலர்கள் உருவாகின, மிருக ஜீவங்கள் உருவாகின, நீங்கள் உண்டானீர்கள். 234 இப்பொழுது, நீங்கள் ஒரு சுயாதீனமான தெரிந்துகொள்ளுதலை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். தேவன் உங்களிடத்தில் திரும்பவும் அசைவாடி, “என் சத்தத்தைக் கேட்கிறீர்களா? அப்படியானால் கோபமூட்டுதலின் நாட்களில் நடந்ததுபோல உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாதிருங்கள்’ என்று கூறுகிறார். இதோ அவர் இறங்கி வந்து, வார்த்தையைப் பிரசங்கிக்கிறார். “சுவிசேஷம் அவர்களுக்கு பிரசங்கிக்கப்பட்டது…அவர்களோ அதில் விசுவாசங்கொண்டிருக்கவில்லை, ஆகையால் அது அவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.” அவர்கள் அதைக் கேட்டார்கள், ஆனால் அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. 235 தேவன் இறங்கி வந்தார். அவர் அவர்களுக்கு ஒரு அக்கினி ஸ்தம்பத்தைக் காண்பித்தார். அவருடைய தீர்க்கதரிசிகள் மூலமாக அடையாளங்களையும், அதிசயங்களையும் காண்பித்து, அவர் தீர்க்கதரிசியோடிருந்தார். அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. ஓ, அவர்கள் அற்புதங்களைக் காண விரும்பினர். அவர்கள் தீர்க்கதரிசிக்கு செவிகொடுக்க விரும்பினர். ஆனால் அதை விசுவாசித்ததை பொறுத்த அளவில், அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. அவர்கள் விசுவாசிக்கவில்லை என்று அவர்களுடைய ஜீவியங்களே நிரூபிக்கின்றன. 236 இப்பொழுது அவர், “ஆகையால் அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, நீங்களும் கீழ்படியாமையினாலே விழுந்து போகாதீர்கள்” என்றார். ஏனென்றால் இந்த கடைசி நாளில், புறஜாதி சபைக்கு தேவன் மீண்டும் பிரசன்னமாயிருக்கிறார். அதே அடையாளமும், அதே அதிசயமும், அதே அக்கினிஸ்தம்பமும் ரூபகாரப்படுத்தப்பட்டு, நீருபிக்கப்பட்டுள்ளது. நாம் நம்முடைய இருதயங்களை கடினப்படுத்தாமலும், முன்னர் அந்த சோதனையில் அவிசுவாசத்தில் விழுந்ததுபோல விழுந்துபோகதிருப்போமாக, ஏனென்றால் நாம் பூமியில் அழுகிப் போய்விடுவோம், அதைக் குறித்த யாவும் அப்படித்தான் இருக்கும். 237 பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய இருதயத்தைத் தட்டும் போது,[சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தைத் தட்டுகிறார்—ஆசி.] “வெகுகாலத்திற்குப் பின்பு சொல்லியிருக்கிறபடி, நீங்கள் என் சத்தத்தைக் கேட்கும்போது, உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள்.” அதுவோ, “என் பிள்ளையே, இதுதான் சத்தியம்” என்று கூறுகிறது. செய்தியாளனை நோக்கிப்பார்க்காதீர்கள். செய்திக்கு செவிகொடுங்கள். அதை விசுவாசியுங்கள். “கோபமூட்டுதலின் நாட்களில் நடந்ததுபோல உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.” 238 நீங்கள், “அவருடைய சத்தத்தைக்” கேட்கிறபோது, உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். அப்பொழுது நீங்கள், “ஆம், ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். அப்பொழுது நீங்கள் ஜீவனுக்குள் பிரவேசிக்க, பரிசுத்த ஆவி உங்களுக்குள் வருகிறது. உங்களுடைய பழைய ஆவி மரித்துவிடுகிறது, அதாவது உங்களுக்கு இச்சையை உண்டுபண்ணுகிற, வெறுப்பை உண்டுபண்ணுகிற, மனக்காழ்ப்பை உண்டுபண்ணுகிற, பகையை உண்டுபண்ணுகிற, பெறும் வெறுப்பை உண்டுபண்ணுகிற, இந்த எல்லாக்காரியங்களையும் உண்டுபண்ணுகிற அந்த ஆவி மரித்துப்போகிறது. எனவே நீங்கள் அன்பினால் நிறைந்து, சந்தோஷம், சமாதனம், இளைப்பாறுதல் கொண்டவர்களாகிவிடுகிறீர்கள். காற்று எவ்வளவு வீசினாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது சரியாக இருக்கிறது. என் நங்கூரம் திரைக்குள்ளே உறுதியாக பற்றியுள்ளது. வானளாவிய ஒவ்வொரு அலைகளினூடாகவும், கொந்தளிக்கும் புயலார்ந்த அலைகளினூடாகச் சென்றாலும், என் நங்கூரம் திரைக்குள்ளே உறுதியாக பற்றியுள்ளது. ஏனென்றால் நான் கிறிஸ்து என்னும் திடமான பாறையின் மேல் நிற்கிறேன்; மற்றெல்லா நிலங்களும் அமிழ்ந்து கொண்டிருக்கும் மணலே. 239 அங்குதான் நீங்கள் இருக்கிறீர்கள். எடி பேரோனட், என்பவர், அவரே அந்த புகழ்மிக்கப் பாடலை எழுதினார். “மற்றெல்லா நிலங்களும்,” எல்லா ஸ்தாபனங்களும், எல்லா பிரமாணங்களும், எல்லா உபதேசங்களும் மங்கி மறைந்து போகிறது. கிறிஸ்து மாத்திரமே நிலையானவர்! நீங்களோ, “நல்லது, எனக்கு வேதம் தெரியும்” என்று கூறலாம். வேதாகமத்தை அறிந்துகொள்வதன் மூலம் நீங்கள் ஜீவனைப் பெற்றுக்கொள்கிறதில்லை. மேலும், “நான் என்னுடைய சபைப் போதனைப் பாடங்களை அறிவேன்” என்று கூறலாம். உங்களுடைய சபைப் போதனையை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் ஜீவனைப் பெற்றுக் கொள்கிறதில்லை. நீங்கள், “நல்லது, நான் ஒரு கிறிஸ்தவன்” என்று கூறலாம். நீங்கள் கிறிஸ்தவமார்க்கதை உரிமைகொண்டாடி உறுதியாக கூறுவதினால் ஜீவனைப் பெற்றுக் கொள்கிறதில்லை. 240 நீங்கள் அவரை அறிந்துகொள்வதன் மூலமே ஜீவனை உடையவர்களாயிருக்கிறீர்கள். அவரை அறிந்துகொள்வதினால், நீங்கள் ஜீவனை உடையவர்களாயிருக்கிறீர்கள். “அப்பொழுதே நீங்கள் அவருடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறீர்கள். தேவன் தம்முடைய கிரியைகளிலிருந்து ஓய்ந்திருந்தது போல, நீங்களும் உங்களுடைய கிரியைகளிலிருந்து ஓய்ந்திருக்கிறீர்கள்.” நீங்கள் ஒரு தேவனுடைய குமாரனாக, ஒரு தேவனுடைய பங்காளியாக ஆக்கப்பட்டிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களண்டை அன்போடு நயந்து உறவாடுவாரானால், நீங்கள் திரும்பி நயந்து மன்றாடி, “ஆம், ஆண்டவரே” என்று கூறுங்கள். அதாவது புறா கொஞ்சுவது போலவே. 241 புறா கொஞ்சி அழைப்பது போல அவர், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” என்றார். 242 நீங்களோ, “ஆ, நான் வாலிபன். நான்…ஓ, என்னுடைய மேய்ப்பர்…தேவையில்லை. நானே எல்லாவற்றையும் செய்துகொண்டேன்…” என்று கூறலாம். பார்த்தீர்களா? நீங்கள் ஒருபோதும் இளைப்பாறுதலைக் கண்டடையமாட்டீர்கள். 243 ஆனால் நீங்கள், “ஆம், என் ஆண்டவரே. நான் உம்முடைய சத்தத்தைக் கேட்கிறேன். நான் என்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறதில்லை. கர்த்தாவே, நான் கவலைப்படுகிறதில்லை, இது உம்முடைய வார்த்தையாயிருக்கிறது, நான் உம்மை விசுவாசிக்கிறேன். இயேசுவே என்னை ஏற்றுக்கொள்ளும். நான் அப்படியே எந்த முறையீடுமின்றி உள்ளேன், ஆனால் உம்முடைய இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது. நான் விசுவாசிப்பேன் என்றே நான் வாக்களிப்பேன்” என்றும், “ஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்” என்றும் கூறுங்கள். அவருடைய மரித்துக்கொண்டிருக்கிற சிரசின் மீது உங்களுடைய கரங்களை வைத்து, “கர்த்தாவே, நான் ஒரு பாவி, நீர் என்னை அழைத்தீர்” என்று கூறுங்கள். 244 “பிதாவானவர் எனக்கு கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்திற்கு வரும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்.” 245 “ஆம், ஆண்டவரே, நான் வருகிறேன். அவர்கள் கோபமூட்டுதலில் செய்ததுபோல நான் என்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தமாட்டேன், நான் உண்மையாகவே அவரை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். 246 அப்பொழுது அவர் என்ன செய்கிறார்? அவர் தம்முடைய ஜீவனை, ஸோயீ என்ற கிரேக்க வார்த்தையான அவருடைய சொந்த ஜீவனை, நித்திய ஜீவனை அளிக்கிறார். நாம் எந்த மண்ணிலிருந்து உண்டானோமோ, அதே பூமியின் மண்ணிலிருந்து தேவனால் நம்மை உயிரோடெழுப்ப முடியுமானால்…நாம் மண்ணிலிருந்து உண்டானோமா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நீங்கள் காண்கிற ஒவ்வொரு காரியமும் பூமியின் மண்ணிலிருந்தே உண்டானது. எந்த தெரிந்தெடுத்தலுமில்லாமல், நான் இன்றைக்கு உள்ளது போன்று, தேவனால் என்னை உருவாக்க முடிந்ததென்றால், என்னை உருவாக்கி, கல்வாரியை நோக்கிப் பார்க்க எனக்கு ஒரு தருணம் அளிக்க வேண்டும் என்பது அவருடைய வாஞ்சையாயிருந்த காரணத்தால், என்னுடைய தீர்மானத்தை நான் செய்கிறேன். எனவே நான் என்னுடைய தீர்மானத்தைச் செய்து, அவர் மேல் விசுவாசங்கொண்டேன் என்றால், அவர் என்னை உயிரோடெழுப்புவது எவ்வளவு நிச்சயம்! எந்த ஒரு தெரிந்தெடுத்தலுமில்லாமல், அவர் என்னை நான் இருக்கிறவிதமாக உருவாக்கியிருப்பாரானால், அப்பொழுது நான் ஒரு தெரிந்துகொள்ளுதலை செய்து, அவரை எனக்குள் தெரிந்துகொண்டிருக்கிறபடியால், அவர் தம்முடைய கரங்களை தம்மண்டை வைத்து, நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன் என்று தம்மில் தாமே ஆணையிட்டுக்கொண்டாரே. எனவே நான் உறுதியாய் இளைப்பாறுவேன். 247 நான் இளைப்பாறுதலைப் பெற்றுள்ளேன், நான் ஞாயிற்றுக்கிழமை ஆராதிக்கின்ற காரணத்தால் அல்ல, நான் ஓய்வுநாளில் ஆராதிக்கின்ற காரணத்தால் அல்ல. அதற்கு இதனோடு எந்த சம்மந்தமுமில்லை. நான் அவருடைய சமாதானத்திற்குள், இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்திருக்கிறபடியால் நான் ஆராதிக்கிறேன்; சமாதானம், இளைப்பாறுதல், அன்பு, சந்தோஷம். புயல்கள் வீசட்டும். என் நங்கூரமோ பற்றிப்பிடித்திருக்கிறது. 248 இன்றிரவு இந்த உஷ்ணமான கூடாரத்தில் இங்கே உட்கார்ந்திருக்கிற என்னுடைய நண்பனே, நீ அந்த அனுபவத்தை பெற்றிருக்கிறாயா? நீ எனக்கு செவிகொடுத்து கேட்க வரவில்லை. இல்லை. நீ வார்த்தைக்கு செவிக்கொடுத்து கேட்கவே வந்துள்ளாய். என் நண்பனே, கவனி. 249 இப்பொழுது நீ அந்த இளைப்பாறுதலைப் பெற்றிருக்கவில்லையென்றால், நீ அதை இப்பொழுதே கண்டடைய முடியும். நீ இங்கே பீடத்தண்டை வரவேண்டியதேயில்லை. நீ எங்கே இருக்கிறாயோ, அங்கே அமர்ந்திருக்கலாம். உத்தமமாயிருந்து, “கிறிஸ்துவே, என் இருதயத்தில் பேசும், இது உஷணமாயுள்ளது என்பதை நான் அறிவேன். நான்—நான் முழுவது நனைந்து, வியர்த்துபோனவனாயிருக்கிறேன். நான் மிக மோசமாக பயந்து போனவனாயிருக்கிறேன். ஆனாலும் கர்த்தாவே, காலைக்கு முன்னே இதைக் காட்டிலும் மோசமாக வலியினால் வியர்த்துக்கொட்டிக்கொண்டிருக்கலாம்” என்று கூறுங்கள். அப்பொழுது மருத்துவரோ தன்னுடைய தலையை அசைத்து, “இது ஒரு மாரடைப்பு, அவர் மரித்துப் போய்விட்டார்” என்று கூறலாம். அப்பொழுது என்னவாகும்? 250 அப்பொழுது என்னவாகும்? அந்த மகத்தான புத்தகம் திறக்கப்படுகின்றபோது, அப்பொழுது என்னவாகும்? அப்பொழுது என்னவாகும்? என்ற அந்தப் பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? செய்தியை புறக்கணித்துக்கொண்டிருப்பவர்களிடத்தில், அதற்கான ஒரு காரணத்தைக் கூறும்படிக்கு கேட்க்கப்படும், அப்பொழுது என்னவாகும்? அப்பொழுது என்னவாகும்? அதைக் குறித்து இப்பொழுது உண்மையாகவே ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். 251 நாம் நம்முடைய தலையை வணங்கியிருக்கையில், அதைக் குறித்து சிந்தியுங்கள். இன்றிரவு இந்தச் செய்தியை புறக்கணித்துக் கொண்டிருக்கிறவர்களிடத்தில், அதற்கான ஒரு காரணத்தைக் கூறும்படிக்கு கேட்கப்பட்ப் போகிறார்கள். அப்பொழுது என்னவாகும்? அப்பொழுது என்னவாகும்? அப்பொழுது என்னவாகும்? அந்த மகத்தான புத்தகம் திறக்கப்படும்போது, அப்பொழுது என்னவாகும்? இன்றிரவு இந்தச் செய்தியை புறக்கணித்துக்கொண்டிருக்கிறவர்களே, நீங்கள் ஒரு காரணத்தைக் கூறும்படிக்கு கேட்கப்படப்போகிறீர்கள். அப்பொழுது என்னவாகும்? 252 பரலோகப் பிதாவே, இப்பொழுது இவையாவும் உம்முடைய கரங்களில் உள்ளது. ஜனங்களுக்கு முன்பாக இங்கே உண்மையான ஓய்வானது வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தேவனுடைய தூதன் கடந்த சில வருடங்களாக உலகத்தைச் சுற்றிலும் முழக்கமிட்டிருக்கிறார். குறைகூறுவோர்களும், மற்றுமுள்ள ஒவ்வொருவரும் அதை கண்டனம்பண்ணவே முயற்ச்சித்துள்ளனர். ஆனால் நீர் ஒவ்வொரு முறையும் உம்மை தேவனாயிருக்கிறீர் என்றே நிருபீக்கிறீர். 253 கர்த்தாவே, விஞ்ஞானப் பூர்வமான உலகமும், சபை உலகமும் அவைகள் குருடாயிருக்கின்றனவா? ஒருகால் இன்றிரவு இங்குள்ள ஒருவர் கோபமூட்டுதலின் நாட்களில் நடந்ததுபோல தேவனை சோதிக்காமல், தங்களுடைய பார்வையைப் பெறவிரும்பி, தொடர்ந்து நடக்கலாம். ஞாயிற்றுக் கிழமையில் நல்லவர்களாயிருப்பதன் மூலம் அவரை சோதிக்க முயற்ச்சிக்காமல், அல்லது ஒரு குறிப்பிட்ட நாளை கடைபிடிப்பதனால் அல்லது ஒரு குறிப்பிட்டக் கோட்பாட்டைக் கடைபிடிப்பதனால் அல்லது ஒரு குறிப்பிட்ட சபையை சார்ந்து கொள்வதனால் அவரை சோதிக்க முயற்ச்சியாதிருப்பார்களாக. ஆனால் வெளியே வந்து இருதயத்தில் விருத்தச்சேதனம்பண்ணப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள விரும்புவார்களாக. அவர்களுக்கு அவர் தேவையாயிருக்கிறார். இப்பொழுது விசுவாசத்தினாலே அவர்கள் அவரை தங்களுடைய இருதயத்திற்குள் ஏற்றுக்கொள்ள முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, அவர்கள் உம்மிடத்தில் கிருபையைக் கண்டடைய முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறார்கள். 254 ஓ, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசியிருக்கலாம். அவர்கள் சத்தமிட்டிருக்கலாம். ஆனாலும் அவர்கள் இன்னும் அதேப் பழைய கோபத்தை உடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் அதே பழைய மனக்காழ்ப்பை உடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் வம்படித்துப் பேசி, அவர்கள் செய்யக் கூடாத காரியங்களைச் செய்கிறார்கள். கர்த்தாவே, அவர்களுக்கு அது தேவையில்லை. அப்பொழுது என்னவாகும்? எப்பொழுது அந்த மகத்தான புத்தகம் திறக்கப்படுகிறது? “ஆனால்,” “அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கமாட்டார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. “ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.” குறைவுள்ள எந்தக் காரியமும் உள்ளே பிரவேசிக்காது. இன்றிரவு அவர்கள் முழுமையாக நம்பிக்கைக்கொண்டு, சிலுவையிலறையப்படுகின்றார்களா? அப்படியில்லையென்றால், கர்த்தாவே, அவர்கள் இப்பொழுது நித்தியமாகவே, “ஆம்” என்று கூறி ஏற்றுக்கொள்வார்களாக. 255 அவர்கள், “கர்த்தாவே, நான்…உணர்ச்சிவசப்படவில்லை, ஆனால் என்னுடைய இருதயத்திற்குள் ஏதோ ஒரு காரியத்தை நான் உணருகிறேன், அந்த ஏதோ ஒரு காரியம், ‘உம்முடைய கிருபையினால், என்னால் அதை இப்பொழுதே செய்ய முடியும்’ என்று என்னிடத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறது. நான் உம்மை என்னுடைய சொந்த இரட்சகராக இப்பொழுதே ஏற்றுக்கொள்கிறேன். நான்—நான் உலகத்தின் காரியங்கள் எல்லாவற்றையும் புறக்கணித்துக் கொண்டிருக்கிறேன், நான் உம்முடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க விரும்புகிறேன். நான் அதை இப்பொழுதே செய்துகொண்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் என்னை சரியாக அந்த இடத்திற்குள்ளாக கொண்டு வந்துகொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுவார்களாக. 256 ஒவ்வொரு தலையும் வணங்கியிருக்கையில், அந்தவிதமாக யாராவது இப்பொழுது உணருகிறீர்களா? அப்படியானால் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “நான் இனி ஒருபோதும் வம்படித்துப் பேசாத ஒரு இடத்திற்குள்ளாக பரிசுத்த ஆவியானவர் என்னை இப்பொழுது கொண்டுவந்துகொண்டிருக்கிறார்” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. “நான் அந்தக் காரியங்களை செய்யமாட்டேன். என்னுடைய கோபம் போய்விட்டது. என்னால் இப்பொழுதிலிருந்து சமாதானத்திலும், சந்தோஷத்திலும், நீடிய பொறுமையிலும் ஜீவிக்க முடியும். இப்பொழுது தேவன் என்னிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறார், எனவே அவருடைய கிருபையினால், என்னால் அதை இந்த மணிநேரம் முதற்கொண்டே செய்ய முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன்.” நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அந்த வாலிபப் பெண்மணியை தேவன் ஆசீர்வதிப்பாராக. வேறுயாரேனும் இருக்கிறீர்களா?. “நான் இப்பொழுதே விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். 257 கோபமூட்டுதலின் நாட்களில் நடந்ததுபோல, அவரை சோதிக்காதீர்கள். நாம் ஞாயிற்றுக் கிழமை சபைக்குச் செல்கிறோம் அல்லது ஓய்வு நாளை ஆசரிக்கிறோம் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். பவுல், “நீங்கள் நாட்களையும், மாதப்பிறப்புகள் முதலியவற்றையும் ஆசரிக்கிறீர்கள். நான் உங்களைக் குறித்து பயமடைந்துள்ளேன். இப்படியிருக்க நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், ஆராதனை செய்கிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது” என்றான். ஆனால் கிறிஸ்து உங்களை பரிபூரணப்படுத்துகிறார், தேவனுடைய பார்வையில் பரிபூரணப்படுத்துகிறார். அவர் உங்களிடத்திலிருந்து பாவத்தை எடுத்துப் போட்டு, உங்களிடத்திலிருந்து ஆக்கினைத்தீர்ப்பையும் எடுத்துப் போட்டு, உங்களுக்கு அவருடைய அன்பையும், சந்தோஷத்தையும் அளிக்கிறார். 258 இப்பொழுதே இளைப்பாறுதலுக்குள் நீங்கள் பிரவேசிக்க விரும்புகிறீர்களா? வேறுயாரேனுமிருந்தால் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “நான் அதைச் செய்திருக்கிறேன்” என்று கூறுங்கள். இங்கே என்னுடைய இடப்பக்கமாக உள்ள வாலிபப் பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னுடைய வலப்பக்கமாக உட்கார்ந்துகொண்டிருக்கிற மனிதனை தேவன் ஆசீர்வதிப்பாராக. அவருடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தல், அதைக் குறித்து இப்பொழுதே சிந்தித்துப் பாருங்கள். 259 நீங்கள், “கர்த்தாவே, நான் எந்த ஒரு மன்றாட்டுமின்றி, இருக்கிறவண்ணமாகவே இருக்கிறேன். என்னிடத்தில் நன்மையானது ஒன்றுமில்லை. என்னுடைய பழைய, களைப்புற்ற, பாவமுள்ள வாழ்க்கையைத் தவிர உம்மிடத்தில் ஏறெடுக்கக் கூடியது என்னிடத்தில் ஒன்றுமேயில்லை. நீர் என்னை ஏற்றுக் கொள்வீரா? சுத்திகரிப்பீரா? விடுவிப்பீரா? ஏனென்றால் நான் விசுவாசிப்பேன் என்று நான் வாக்களித்தேன். ஓ, தேவ ஆட்டுக்குட்டியே, நான் வருகிறேன். நான் இப்பொழுதே மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறேன் என்று நான் இப்பொழுதே விசுவாசத்தோடு வருகிறேன். ஏனென்றால் நான் என்னுடைய இருக்கையிலிருந்தே, உம்மை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறேன், நான் என்னுடைய இருதயத்தில் சமாதானத்தை உணருகிறேன்,” என்று ஜெபியுங்கள். 260 ஐந்துபேர் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள். மற்ற யாராவது ஒருவர் அந்தவிதமாக உணர்ந்தால், உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? நீங்கள் ஒரு கிறிஸ்தவராயில்லாமலிருந்தால், அவரை இப்பொழுதே ஏற்றுக் கொள்ளுங்கள். 261 நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதாக உறுதியாகக் கூறி, அந்தவிதமாக இல்லாமலிருந்து வந்தால், நீங்கள் இன்னமும் ஒரு பாவியாய் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் என்ன செய்திருந்தாலும், அல்லது நீங்கள் எவ்வளவுதான் உங்களை பாவனையாக காண்பிக்க முயற்ச்சித்தாலும் அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அது ஏற்றுக்கொள்ளப்படுகிறதில்லை. அது அவர் என்ன செய்துள்ளார் என்பதாய் உள்ளது. உங்களுடைய சொந்த நீதி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நீங்களோ, “நான் கிறிஸ்தவமார்க்கத்தைக் குறித்து உறுதியாக கூறுகிற காரணத்தால், நான் புகைப்பிடிப்பதை விட்டுவிடுவது மேலானது” என்று நீங்கள் கூறின காரணத்தால் நீங்கள் புகைப்பிடிப்பதை விட்டுவிட்டால், தேவன் அதை ஏற்றுக்கொள்வதில்லை. நீங்களாகவே உங்களைச் சரிபடுத்திக்கொண்டு ஸ்திரீகளை இச்சிப்பதை விட்டுவிட வேண்டும் என்று கருதி, நீங்கள் அதை விட்டுவிட்டால், தேவன் அதை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. அது நீங்கள் செய்கிற ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. அவை கிரியைகளாய் உள்ளன. அதுவோ உங்களை இரட்சிக்கிற கிருபையாய் உள்ளது. தேவன் உங்களிடத்திற்கு வந்து, உங்களிடத்திலிருந்து முழு காரியத்தையும் எடுத்துப் போட்டுவிட்டாரா? அதுவே அடுத்தக் காரியமாயுள்ளது. 262 நீங்களோ, “நான் சபையில் சேர்ந்து விட்டேன், எனவே நான் இந்தக் காரியங்களை விட்டுவிட வேண்டியதாயிருந்தது,” என்று கூறலாம். தேவன் அதை ஏற்றுக் கொள்ளவேயில்லை, உங்களால் எந்தக் காரியத்தையுமே அளிக்க முடியாது. கிறிஸ்து கொடுக்கிறதை மாத்திரமே அவர் ஏற்றுக்கொள்கிறார். அவர் உங்களுக்கு நித்திய ஜீவனை அளித்து, மற்றதை உங்களிடத்திலிருந்து எடுத்துப் போடுகிறார். நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? …புயலார்ந்த, பெருங்கொந்தளிப்பான சமுத்திரத்திலிருந்து… வாருங்கள், உங்களுடைய ஆத்துமாவை பரலோக இளைப்பாறுதலில் நங்கூரமிடுங்கள்,“என் நேசர் என்னுடையவர்” என்று கூறுங்கள். நான் ஆத்துமாவை நங்கூரமிட்டிருக்கிறேன்… சரி, நீங்கள் உங்களுடைய தலையை உயர்த்தலாம். செய்தி இப்பொழுது முடிவுற்றுவிட்டது. இப்பொழுது நாம் அப்படியே ஆராதிப்போமாக. நான் இனி ஒரு போதும் பெருங்கொந்தளிப்பான சமுத்திரத்தில் பயணிக்கமாட்டேன்; ஆழ்ந்த ஆழியில் கொந்தளிக்கும் கடலில் கடும் புயற்காற்று வீசிடினும், இயேசுவில் நான் எப்போதும் பத்திரமாயுள்ளேன். 263 இப்பொழுது ஒவ்வொருவரும் ஆராதியுங்கள். நான் என் ஆத்துமாவை ஒரு பரலோக இளைப்பாறுதலில் நங்கூரமிட்டுள்ளேன், (ஓய்வு) நான் இனி ஒருபோதும் பெருங்கொந்தளிப்பான சமுத்திரத்தில் பயணிக்கமாட்டேன்; ஆழ்ந்த ஆழியில் கொந்தளிக்கும் கடலில் கடும் புயற்காற்று வீசிடினும், இயேசுவில் நான் எப்போதும் பத்திரமாயுள்ளேன். என்மேல் பிரகாசியும்… அப்படியே உங்களை இலகுவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடையக் கண்களை மூடுங்கள். அந்த இனிமையான ஆவியை உணருகிறீர்களா? அதுவே ஆராதனையாகும். செய்தியானது முடிவுற்றுவிட்டது. இது ஆராதிப்பதாயுள்ளது. களங்கரை விளக்கத்திலிருந்து ஒளியானது என்மேல் பிரகாசிக்கட்டும், ஓ என் மேல் பிரகாசியும், ஓ கர்த்தாவே, என் மேல் பிரகாசியும், ஓ களங்கரை விளக்கத்திலிருந்து ஒளியானது என்மேல் பிரகாசிக்கட்டும். 264 எத்தனைபேர் உண்மையாகவே நலமாக உணருகிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள்.அந்த இனிமையான, தாழ்மையான ஆவி, அதுதான் அது. இயேசுவைப் போலிருக்க, இயேசுவைப் போலிருக்க, பூமியின் மேல் நான் அவரைப் போலிருக்க வாஞ்சிக்கிறேன்; புவியிலிருந்து மகிமை வரையிலுமுள்ள ஜீவிய பயண முழுவதிலுமே, நான் அவரைப் போலிருக்க வேண்டும் என்று மாத்திரமே…கேட்கிறேன். அப்படியே ஆராதியுங்கள்.